Scorpio N variants: 2 பெட்ரோல், 3 டீசல் வேரியண்ட்கள்.. 30 ஆக உயர்ந்த ஸ்கார்ப்பியோ N வேரியண்ட் கார்கள்
ஸ்கார்ப்பியோ நிறுவனம் தனது என் மாடல் கார்களில் புதியதாக மேலும், 5 வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்கார்பியோ N காரின் மாடலில் ஏற்கனவே 25 வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் இடையேயும் இந்த கார் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் ஆப்ஷன்களை கொடுக்கும் நோக்கில், N காரின் மாடலில் புதியதாக 5 வேரியண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இரண்டு கார்கள் பெட்ரோல் இன் ஜினையும், 3 கார்கள் டீசல் இன் ஜின்களையும் கொண்டுள்ளன.
புதிய கார் வேரியண்ட்கள்:
புதியதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வேரியண்ட்களின் பெயர்கள் முறையே, ஸ்கார்பியோ N - Z2 G MT E, Z2 D MT E, Z4 G MT E, Z4 D MT E, மற்றும் Z4 D MT 4WD E என அழைக்கப்படுகின்றன. புது வேரியண்ட்களை அடுத்து 4 வீல் டிரைவ் வெர்ஷனின் விலை தற்போது ரூ. 16 லட்சத்து 94 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புது வேரியண்ட்களின் விலை விவரங்கள்:
Z2 MT E 7s டீசல் ரூ. 12 லட்சத்து 99 ஆயிரம்
Z4 MT E 7s டீசல் ரூ. 14 லட்சத்து 49 ஆயிரம்
Z4 MT 4WD E 7 டீசல் ரூ. 16 லட்சத்து 04 ஆயிரம்
Z2 MT E 7s பெட்ரோல் ரூ. 12 லட்சத்து 49 ஆயிரம்
Z4 MT E 7s பெட்ரோல் ரூ. 13 லட்சத்து 99 ஆயிரம்
இன்ஜின் விவரம்:
மஹிந்திரா ஸ்கார்பியோ N Z4 வேரியண்ட்களில் ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பவர்டிரெயின் ஆப்ஷன்களை பொருத்தவரை 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட இன்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் 200 குதிரைகளின் சக்தி, 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை ஆகிய திறனை வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
புதிய ஸ்கார்பியோ N டீசல் வேரியண்ட்களில் 2.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட இன்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த இன்ஜின் குதிரைகளின் சக்தி, 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறனை பெற்றுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் இடம்பெற்றுள்ளது. டீசல் இன்ஜின் கொண்ட பேஸ் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்:
புதிய புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ N Z2 D MT E வேரியண்ட் ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் டில்ட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பவர் ஸ்டீரிங், 2-ம் அடுக்கு இருக்கைகளில் ஏசி வெண்ட்கள், பவர் விண்டோ, யுஎஸ்பி போர்ட்கள், எல்.ஈ.டி. இண்டிகேட்டர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
30 வேரியண்ட்கள்
புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட 5 வேரியண்ட்கள் மூலம், ஸ்கார்பியோ N மாடல் கார் தற்போது மொத்தமாக 30 வேரியணட்களில் கிடைக்கிறது. அவற்றில் 19 வேரியண்ட்கள் டீசல் இன்ஜினும், மீதமுள்ள 11 வேரியண்ட்கள் பெட்ரோல் இன்ஜினையும் கொண்டுள்ளன. அந்த வகையில், டீசல் இன்ஜின் கொண்ட மாடல்களில் மட்டுமே ஆப்ஷனல் 4 எக்ஸ்ப்ளோர் 4 வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.