New Bolero: மினி டிஃபெண்டராக உருவெடுத்த பொலேரோ - மாடர்ன், அப்கிரேடட் டெக் கேஜட்ஸ் - சியாராவை அடிக்க ரெடி
New Generation Bolero: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன், புதிய தலைமுறை பொலேரே கார் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

New Generation Bolero: மஹிந்திரா நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பொலேரோ கார் மாடல், மினி டிஃபெண்டரை போன்று காட்சியளிக்கிறது.
மஹிந்திராவின் அடுத்த தலைமுறை
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கார் மாடல்களில் ஒன்றாக பொலேரோ இன்றளவும் திகழ்கிறது. அதனை காலத்திற்கேற்ப மெருகூட்டி அடுத்த தலைமுறை எடிஷனை அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் தான், புதிய தலைமுறை பொலேரோ கார் மாடல், சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டபோது அடையாளம் காணப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி நடைபெற உள்ள மஹிந்திராவின் நிகழ்ச்சியில் ஒரு கான்செப்டாக இந்த கார் காட்சிப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
New gen Mahindra Bolero SUV spied pic.twitter.com/oMdP8dFEsg
— RushLane (@rushlane) June 4, 2025
வடிவமைப்பும், தோற்றமும்..
அடுத்த தலைமுறை பொலேரோவானது புதிய பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட உள்ளது. அதன்படி, ஒரே நேரத்தில் மின்சார எடிஷனிலும் இந்த கார் சந்தைப்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது. கசிந்துள்ள புகைப்படங்களின்படி, முற்றிலும் புதிய மாடலாக இருந்தாலும், பாக்ஸி வடிவத்தில் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்திலான இந்த காரின் வடிவமைப்பானது பழைய எடிஷனை அப்படியே தொடர்கிறது. கட்டுமஸ்தான அமைப்புடன் கூடிய அதன் தோற்றமானது மினி டிஃபெண்டரை போன்று உணரச் செய்கிறது. முன்புற முனை புதியதாக உள்ளது அதில் முகப்பு விளக்குகளும் அடங்கும். பக்கவாட்டில் ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் புதியதாக இணைக்கப்பட்டுள்ளன. வித்தியாசமான பவர் ட்ரெயின் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
முக்கிய அம்சங்கள், டெக் கேஜட்ஸ்:
புதிய எடிஷனில் பின்புற கதவில் கூடுதல் வீலை சுமக்க வசதி, தனியான பின்புற சஸ்பென்ஷனும் கிளாசிக் பொலேரோவில் இருப்ப்தை போன்றே தொடர்கிறது. அண்மையில் வெளியான ஸ்கார்ப்பியோவில் இருப்பதை போன்று, புதிய பொலேரோவும் மிகுந்த மாடர்னாகவும், சன்ரூஃப், ADAS, பவர் விண்டோஸ், மேம்படுத்தப்பட்ட உட்புறம், ஆண்டி பிரேக்கிங் சிஸ்டம், ஆர்பேக், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைகள் மற்றும் பெரிய டச் ஸ்க்ரீன் உள்ளிட்ட கூடுதல் தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முற்றிலும் புதிய பொலேரோவானது அடுத்த ஆண்டு தான் சந்தைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. ஸ்கார்ப்பியோ N கார் மாடலுக்கு கீழே நிலைநிறுத்தப்பட உள்ள இந்த காரானது, கரடுமுரடான சிறிய எஸ்யுவி ஆக சந்தையில் அறிமுகமாக உள்ளது. அண்மையில் தான், மஹிந்திரா நிறுவனம் இரண்டு மின்சார கார் மாடல்களை அறிமுகப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டும் புதிய மாடல்களை சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளது.
இன்ஜின் விவரங்கள்:
புதிய தலைமுறை மஹிந்திரா கார் மாடலானது பல்வேறு விதமான பவர்ட்ரெயின் ஆப்ஷன்களை கொண்டிருப்பது மட்டுமின்றி, பல இருக்கை ஆப்ஷன்களையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, 1.5 லிட்டர் டர்போ டீசல் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். இது 3 டோர் தார் கார் ஆப்ஷன்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் புதிய தலைமுறை பொலேரோ காரானாது, பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனிலும் கொண்டுவரப்படலாம்.
விலை, போட்டியாளர்கள்:
புதிய தலைமுறை பொலேரோ கார் மாடலின் தொடக்க விலை சுமார் 10 லட்சம் ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.இது, டாடா விரைவில் அறிமுகப்படுத்த உள்ள, சியாரா கார் மாடலுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
மஹிந்திரா பொலேரோ பயணம்:
மஹிந்திராவின் பொலேரோ கார் மாடல் கடந்த 2000ம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, 2018ம் ஆண்டு TUV300 பிளஸ் என்ற பெயரில் அறிமுகமான காரானது நாளடைவில் பொலேரோ நியோ பிளஸ் ஆக உருவெடுத்தது. அதில் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டு 2024ம் ஆண்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காரின் விலை தற்போது சுமார் ரூ.10 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் பொலேரோ கார் அதிக கவனம் ஈர்த்துள்ளது. இந்நிலையில் தான் புதிய தலைமுறை பொலேரோ விரைவில் விற்பன்பைக்கு கொண்டு வரப்பட உள்ளது.





















