மேலும் அறிய

August New Cars: கார் பிரியர்களே, ஆகஸ்டில் வெளியாக உள்ள 5 புதிய கார்கள்.. உங்களுக்கான பட்டியல் இதோ..!

கார் பிரியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கில், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஆகஸ்ட் மாதத்தில் 5 புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

கார் பிரியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கில், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஆகஸ்ட் மாதத்தில் 5 புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

ஆட்டோமொபைல் சந்தை:

கார் என்பது வசதி படைத்தவருக்கு மட்டுமே என்ற காலமெல்லாம் மலையேறி போக, நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்களும் காரை பயன்படுத்துவது இயல்பாகிவிட்டது. இதனால், கார்களின் தேவை பன்மடங்கு அதிகரித்ததை உணர்ந்து, உற்பத்தி நிறுவனங்களும் புதுப்புது மாடல் கார்களை பல்வேறு தொழில்நுட்ப மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் அடுத்தடுத்து அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 5 புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. டாடா நிறுவனம் தொடங்கி வால்வோ நிறுவனம் வரையில் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

டாடா பன்ச் CNG:

டாடா நிறுவனம் அண்மையில் தான் ஆல்ட்ரோஸ் CNG கார் மாடலை அறிமுகப்படுத்திய நிலையில், அதன் வரிசையில் ஆகஸ்ட் மாத தொடக்கத்திலேயே தனது பன்ச் CNG மாடலை காரை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Altroz ​​உடன் இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளும் பஞ்ச் CNG ஆனது,  1.2 லிட்டர் மூன்று சிலிண்டர், NA பெட்ரோல் மோட்டார் மூலம் 86bhp மற்றும் 113Nm டார்க்கை உற்பத்தி செய்யும். இதற்கிடையில், 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட CNG பயன்முறையில், இது 77bhp மற்றும் 97Nm டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதன் விலை பன்ச்சின் பெட்ரோல் வேரியண்ட விட ரூ.50000 முதல் 70,000 ரூபாய் வரை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் GLC:

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை GLC மாடலை ஆகஸ்ட் 9-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மாடல் கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கார் GLC 300 பெட்ரோல் மற்றும் GLC 220d டீசல் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் ரூ.1.5 லட்சத்துடன் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

ஆடி Q8 இ டிரான்:

ஆடி நிறுவனத்தின் வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி தனது புதிய இரண்டு மின்சார வாகனங்களான Q8 e-tron மற்றும் e-tron Sportback in 2ஆகிய கார் மாடல்களை  அறிமுகம் செய்யப்பட உள்ளது. Q8 e-tron மாடலானது 95kWh மற்றும் 114kWh என்ற பேட்டரி திறன் கொண்ட இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். இதில் இணைக்கப்பட்டுள்ள இரண்ச்டு மின்சார மோட்டார்கள் 408bhp மற்றும் 664Nm டார்க் திறனை வெளிப்படுத்தும். இதன் காரணமாக இந்த எஸ்யுவி மாடலானது பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை வெறும் 5.6 விநாடிகளில் எட்ட்விடும். இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிட்ரியோன் சி3 ஏர்கிராஸ்

Citroen தனது புதிய தயாரிப்பான C3 Aircross ஐ இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் காட்சிப்படுத்தியது. C3 ஹேட்ச்பேக்கை அடிப்படையாகக் கொண்டு , C3 ஏர்கிராஸ் என்பது மூன்று வரிசை, ஏழு இருக்கைகள் கொண்ட SUV ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது.  இது ஹூண்டாய் க்ரெட்டா , கியா செல்டோஸ் , மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா மற்றும் நடுத்தர அளவிலான SUV பிரிவில் உள்ள கார் மாடல்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இந்த மோட்டார் 109 bhp பவரையும், 190Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. 

வால்வோ C40 ரிசார்ஜ்:

வோல்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் புதிய C40 ரீசார்ஜை ஜூன் 14, 2023 அன்று வெளியிட்டது . C40 ரீசார்ஜ் ஆனது XC40 ரீசார்ஜ் அடிப்படையிலானது மற்றும் CKD வழியாக இந்தியாவிற்கு வரும். இந்த மாடல் 78kWh பேட்டரி பேக்குடன் ஒற்றை டாப்-ஸ்பெக் வேரியண்டில் வழங்கப்படும். இரட்டை மோட்டார் அமைப்புடன், எஸ்யூவி அதிகபட்சமாக 405bhp ஆற்றலையும், 660 Nm பீக் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. C40  ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 530 கிமீ வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  150kW DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி 27 நிமிடங்களில் பேட்டரி பேக்கை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என கூற முடிகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget