Innova Crysta': EMI-யில் டொயோட்டா இன்னோவா வாங்கனுமா? மாதம் எவ்வளவு கட்டலாம்.. முழு விவரம்
Toyota Innova Crysta EMI: ₹18.66 லட்சம் விலையுள்ள டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவின் மலிவான மாடலை வாங்கினால், உங்களுக்கு சுமார் ₹16.80 லட்சம் கடன் கிடைக்கும்

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா: நீண்ட பயணங்களுக்கும் ஏற்ற, நம்பகத்தன்மை மற்றும் வசதியை ஒருங்கே தரும் MPV காரைத் தேடுகிறீர்களா? அப்படியானால், டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா சிறந்த தேர்வு. வலுவான டீசல் எஞ்சின், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் விரிவான கேபின் இடத்தால் பிரபலமான இந்த கார், கார் கடனின் மூலம் மேலும் எளிதாகக் கிடைக்கிறது. 7/8 சீட்டர் விருப்பங்களுடன் வரும் இந்த மாடலுக்கு, முன்பணம் மற்றும் EMI விவரங்கள் முதல் முக்கிய அம்சங்கள் வரை இந்த தொகுப்பில் காணலாம்.
ஐந்து வருட கடனுக்கு எவ்வளவு EMI செலுத்த வேண்டும்?
₹18.66 லட்சம் விலையுள்ள டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவின் மலிவான மாடலை வாங்கினால், உங்களுக்கு சுமார் ₹16.80 லட்சம் கடன் கிடைக்கும். இந்த காரை வாங்க ₹1.87 லட்சம் முன்பணம் செலுத்த வேண்டும். நீங்கள் அதிக முன்பணம் செலுத்தினால், இன்னும் குறைந்த EMI தொகையைப் பெறலாம்.
- டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா வாங்க ஐந்து ஆண்டுகளுக்கு கடன் வாங்கி, இந்தக் கார் கடனுக்கான வட்டி 9 சதவீதமாக இருந்தால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.34,850 இஎம்ஐ செலுத்த வேண்டும்.
- நீங்கள் இன்னும் குறைந்த EMI-ஐத் தேடுகிறீர்கள் என்றால், இந்த வாகனத்தை ஆறு வருட கடனுடன் வாங்கலாம். Innova Crysta-விற்கான ஆறு வருட கடனுக்கு 9% வட்டி விகிதத்தில் ₹30,259 EMI செலுத்த வேண்டும்.
- இந்த டொயோட்டா காரை வாங்க, நீங்கள் ஏழு ஆண்டுகளுக்கு 9 சதவீத வட்டி விகிதத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.27,000 தவணையாக டெபாசிட் செய்ய வேண்டும்.
டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படிப்பது முக்கியம். கார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு இடையிலான வெவ்வேறு கொள்கைகள் காரணமாக இந்த புள்ளிவிவரங்கள் மாறுபடலாம்.
டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா – முக்கிய அம்சங்கள்
இன்னோவா கிரிஸ்டா இந்தியாவில் குடும்பங்களின் நம்பிக்கை பெற்ற MPV ஆக இருக்கக் காரணம் பல. சக்தி, நம்பகத்தன்மை, இட வசதி நுக்ஷ மூன்றும் சேரும் மாடல் இது.
எஞ்சின் மற்றும் செயல்திறன்
ன்னோவா கிரிஸ்டா டீசல் பவர்டிரெய்ன் மட்டுமே கொண்டது. 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் வழங்கப்படுகிறது. நீண்ட பயணங்களிலும் நகரப் போக்குவரத்திலும் மென்மையான டார்க் வழங்கும் திறன் கொண்டது. குளறுபடிகளில்லா செயல்திறன் இதன் முக்கிய அடையாளம்.
உட்புற வசதிகள்
கேபின் அமைப்பு மிக வசதியானது. 7-இருக்கை Captain Seat அமைப்பு மற்றும் 8-இருக்கை Bench Seat அமைப்பு—இரண்டும் கிடைக்கின்றன. விசாலமான லெக்-ஸ்பேஸ், உயர்தர உப்ஹோல்ஸ்ட்ரி, மேம்பட்ட சவுண்ட் இன்சுலேஷன் போன்றவை பயண அனுபவத்தை மேம்படுத்துகின்றன.
இன்ஃபோடெயின்மென்ட் & கனெக்டிவிட்டி
பெரிய டச் ஸ்கிரீன், Android Auto / Apple CarPlay ஆதரவு, Bluetooth, USB இணைப்பு போன்ற விருப்பங்கள் வழங்கப்படுகின்றன. மேம்பட்ட ஆடியோ அமைப்பு நீண்ட பயணங்களை சுமுகமாக மாற்றும்.
பாதுகாப்பு அம்சங்கள்
டொயோட்டா பாதுகாப்பு மீது எப்போதும் அதிக கவனம் செலுத்துகிறது.
• 7 பேக்குகள்
• ABS, EBD, பிரேக் அசிஸ்ட்
• Vehicle Stability Control (VSC)
• Hill Start Assist
• ISOFIX குழந்தை இருக்கை ஆப்ஷன்
என்ன ஆப்சன்?
ஆட்டோ AC, பின் பயணிகளுக்கான தனி AC வென்டுகள், ரிக்ளைனிங் சீட்கள், ஆம்பிள் ஸ்டோரேஜ் ஸ்பேஸ்கள் ஆகியவை உள்ளன.
எக்ஸ்டீரியர் வடிவமைப்பு
தடிப்பான, உயரமான, பிரீமியம் லுக்—இது இன்னோவா கிரிஸ்டாவின் வெளிப்புற அடையாளம். LED ஹெட்லாம்புகள், க்ரோம் ஃபினிஷ், அலாய் வீல்கள், உயரமான கிளியரன்ஸ் போன்றவை ஒரு மேம்பட்ட SUV/MVP தோற்றத்தை அளிக்கின்றன.






















