MG Car Price: அடேங்கப்பா, ரூ.2.30 லட்சம் வரை விலையை குறைத்த எம்ஜி நிறுவனம்..! எந்தெந்த மாடல்களுக்கு தெரியுமா?
MG Car Price: எம்ஜி நிறுவனம் தனது ZS மின்சார கார் மாடலின் விலையை ரூ.2.30 லட்சம் வரை குறைத்து அறிவித்துள்ளது.
MG Car Price: எம்ஜி கார் உற்பத்தி நிறுவனம் தனது ஹெக்டர் மாடல்களை தொடர்ந்து தற்போது, ZS மின்சார கார் மாடலின் விலையயும் குறைத்துள்ளது.
MG கார் நிறுவனம்:
ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் மாடல்களின் விலைக் குறைப்புகளைத் தொடர்ந்து , எம்ஜி மோட்டார் தற்போது ZS மின்சார கார் மாடலின் விலையை ரூ.2.30 லட்சம் வரை குறைத்துள்ளது . புதிய அறிவிப்பின் மூலம் MG ZS EV-க்கான தொடக்க விலை ரூ. 22.88 லட்சத்தில் தொடங்கி, டாப் வேரியண்டின் விலை ரூ.25.90 லட்சம் ஆக மாற்றப்பட்டுள்ளது. உள்ளீடு மற்றும் விநியோக சங்கிலிக்கான விலையை குறைப்பதோடு, தங்களது நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டும் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக எம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை விவரம்:
வேரியண்ட் | புதிய விலை | பழைய விலை | வித்தியாசம் |
excite | ரூ.22.88 லட்சம் | ரூ.23.38 லட்சம் | ரூ. 50,000 |
exclusive | ரூ.25.00 லட்சம் | ரூ.27.30 லட்சம் | ரூ. 2.30 லட்சம் |
exclusive pro | ரூ.25.90 லட்சம் | ரூ.27.90 லட்சம் | ரூ.2 லட்சம் |
ZS மாடலில் excite, exclusive மற்றும் exclusive pro ப்ரோ என 3 வேரியண்ட்களில் கார்கள் விற்பன செய்யப்படுகின்றன. இதில் excite வேரியண்டின் விலை 50 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.22.88 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. exclusive கார் மாடலின் விலை அதிகபட்சமாக ரூ.2.3 லட்சம் வரை குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ.25 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப் எண்ட் வேரியண்டான exclusive pro-வின் விலை 2 லட்ச ரூபாய் குறைக்கப்பட்டு, ரூ.25.90 லட்சமாக விற்பனை செய்யப்படுகிறது.
எம்ஜி ஹெக்டர் விலை குறைப்பு:
முன்னதாக ஹெக்டர் மாடலின் விலையையும் எம்ஜி நிறுவனம் அண்மையில் குறைத்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி, அடிப்படை பெட்ரோல் வேரியண்டின் விலை குறைந்தபட்சமாக ரூ.27,000 வரையும், டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.66,000 வரையும் குறைக்கப்பட்டது. டீசல் வேரியண்ட்களின் விலை குறைந்தபட்சமாக ரூ. 86,000 தொடங்கி, அதிகபட்சமாக ரூ. 1.29 லட்சம் வரை குறைக்கப்பட்டது.
ZS மின்சார காரின் விவரங்கள்:
ZS மின்சார காரானது 177hp மற்றும் 280Nm டார்க்கை உருவாக்கும் திறன் கொண்ட மோட்டாரைப் பயன்படுத்துகிறது. இதில் உள்ள 50.3kWh பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 461 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்யலாம். 50kW DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் 0-80 சதவிகிதம் வரை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யலாம் என்றும், 7.4kW சார்ஜரைப் பயன்படுத்தி 9 மணி நேரத்தில் வரை 0-100 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.
360-டிகிரி கேமரா, பனோரமிக் சன்ரூஃப், 10.1-இன்ச் தொடுதிரை, வயர்லெஸ் சார்ஜர், 7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவற்றை பெறுகிறது. பாதுகாப்பு அம்சங்களில் ADAS, ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் மலை இறங்கு கட்டுப்பாடு ஆகியவை அடங்கும். இந்திய சந்தையில் இந்த காரானது Tata Nexon EV, மஹிந்திரா XUV400 மற்றும் ஹூண்டாய் கோனா ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக உள்ளது.