மேலும் அறிய

Mercedes SUV Sale 2023: ஆண்டு விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய மெர்சிடஸ் - மொத்தம் எத்தனை யூனிட்கள் தெரியுமா?

Mercedes SUV Sale 2023: மெர்சிடஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை, கடந்த ஆண்டு விற்பனையின் மூலம் எட்டியுள்ளது.

Mercedes SUV Sale 2023: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மெர்சிடஸ் நிறுவனத்தின் விற்பனை, கடந்த ஆண்டில் 10 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.

விற்பனையில் மெர்சிடஸ் புதிய மைல்கல்:

Mercedes-Benz 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில், தனது அதிகபட்ச ஆண்டு விற்பனையை  பதிவு செய்துள்ளது. முந்தைய 2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2023ம் ஆண்டில் மெர்சிடஸ் நிறுவனத்தின் விற்பனை 10 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளது. Mercedes-Benz இந்தியா நிறுவனம் 2022இல் 15,822 யூனிட்டுகளை விற்பனை செய்த நிலையில், 2023 இல் 17,408 யூனிட்களை விற்பனை செய்ததாக அறிவித்துள்ளது.  ஒட்டுமொத்த இந்திய கார் சந்தையில் இது ஒரு சிறிய சதவிகிதமாக இருந்தாலும், இந்தியர்கள் முன்னெப்போதையும் விட அதிக சொகுசு கார்களை வாங்குகிறார்கள் என்பதை இது வலுவாக உணர்த்துகிறது. 

எஸ்யுவி விற்பனைகள் அமோகம்:

நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 55 சதவிகிதம் எஸ்யுவிக்களாக உள்ளன. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட GLC மற்றும் GLE உடன் ஏற்கனவே உள்ள GLA மற்றும் GLS மாடல்களால் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது. மற்ற 45 சதவிகித விற்பனையும் செடான் பிரிவையே சேரும். அதில் எப்போதும் போல E-Class LWB மாடல் கார்தான் அதிகம் விற்பனையான மாடலாக உள்ளது. அதேநேரம்,  A-Class, C-Class E-Class மற்றும் S-Class  ஆகிய மாடல்களும் கணிசமான விற்பனையை தக்கவைத்துள்ளன. நாட்டின் மொத்த மின்சார வாகன விற்பனையில், மெர்சிடஸ் நிறுவனம் 4 சதவிகிதம் பங்களித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாகும். Mercedes-Benz இன் மின்சார வாகன போர்ட்ஃபோலியோ EQB SUV, EQE SUV மற்றும் EQS செடான் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மெர்சிடஸ் நிறுவனத்தின் 2024 திட்டம்:

2024 ஆம் ஆண்டில், ஆடம்பர கார் தயாரிப்பாளரான மெர்சிடஸ் மேபேக் உள்ளிட்ட அதன் டாப்-எண்ட் போர்ட்ஃபோலியோவில் இருந்து, 3 புதிய மின்சார வாகனங்கள் மற்றும் பல புதிய கார்கள் உட்பட 12-க்கும் அதிகமான தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. ஜெர்மன் கார் பிராண்டிற்கான நெட்வொர்க் விரிவாக்கம் என்பது 2024ல் 20 பணிமனைகளை துவக்கி, மேலும் 10 புதிய நகரங்களுக்கு தங்களது சேவையை விரிவுபடுத்துவதை உள்ளடக்கியுள்ளது.

மெர்சிடஸ் ஜிஎல்எஸ் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்:

Mercedes-Benz புதிய GLS ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தி தனது புத்தாண்டை தொடங்கியுள்ளது. இதன் மூலம் புதிய தொழில்நுட்பத்தைப் பெறும் அதே வேளையில், வெளிப்புற மற்றும் உட்புறத்தில் பல புதிய மேம்படுத்தல்களையும் கொண்டு வந்துள்ளது. புதிய GLS பெட்ரோல் மற்றும் டீசல் மைல்டு ஹைப்ரிட் பொருத்தப்பட்ட இன்ஜின்களுடன் விற்பனைக்கு வருகிறது. புதிய GLS 450 4MATIC இன் விலை 1.32 கோடி ரூபாய் மற்றும் GLS 450d 4MATIC இன் விலை 1.37 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. GLS என்பது அவர்களின் முதன்மையான சொகுசு SUV ஆகும். இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய GLE SUV உடன் ஃபோர்ட்போலியோ வரம்பில் உச்சியில் அமர்ந்திருக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
Embed widget