மேலும் அறிய

Mercedes Benz G 400d Review: எப்படி இருக்கு மெர்சிடஸ் பென்ஸ் ஜி 400டி கார்? ரூ.2.55 கோடி செலவு செஞ்சு வாங்கலாமா? விமர்சனம் இதோ..!

Mercedes Benz G 400d Review Tamil: மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜி 400டி மாடல் கார் எப்படி உள்ளது, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு தகுதியானதா என்பது போன்ற விவரங்களை இந்த விமர்சனத்தில் அறியலாம்.

Mercedes-Benz G 400d: மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜி 400டி மாடல் காரில் பயணித்த அனுபவத்தை இந்த தொகுப்பில் விவரிக்கப்பட்டுள்ளது.

மெர்சிடஸ் பென்ஸ் ஜி 400டி:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சில கார்கள் உள்ளன, அவை தற்போதைய போக்குகளிலிருந்து தனியாக இருக்கின்றன.  ஆனால் அவை கொண்டிருக்கும் தோற்றம் அல்லது சாலை இருப்பு காரணமாக பொதுமக்களை கவர்ந்து இழுக்கின்றன. மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜி-கிளாஸ் அல்லது ஜி வேகன் அந்த வகையைச் சேர்ந்தது. காரணம், 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த மிலிட்டரி ஆஃப்-ரோடர் வாகனத்தை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் காசோலைப் புத்தகங்களுடன் வரிசையில் நிற்கிறார்கள். 70-களில் வெளியான ஆஃப் ரோட் மாடலின் புதிய அவதாரம் தான் இது.  எந்தவொரு மோசமான சூழலிலும் பயணிப்பதை இலக்காக கொண்ட இந்த வாகனம், அதற்கான வலுவான ஒரு சேசிஸ் கட்டமைப்பை கொண்டுள்ளது.

ஜி 400டி பயண அனுபவம்:

G 400d அட்வென்ச்சர் எடிஷன் எனப்படும் புதிய வேரியண்டை இயக்கி, அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ததா என்ற அனுபவங்களை இப்போது நாங்கள் பகிர்நுது கொள்கிறோம்.  முதலாவதாக, G 400d உயரமானதாகவும், வலுவான கட்டமைப்புடன் பாக்ஸி வடிவில் உள்ளது. ருஃப் ரேக், ஏணி மற்றும் முழு அளவிலான ஸ்பேர் வீல் ஹோல்டருடன் கவரும் விதமாக காட்சியளிக்கிறது. இது AMG லைன் பதிப்புகளை விட சிறிய சக்கரங்களில் அமர்ந்திருந்தாலும் இது இன்னும் சிறப்பாக உள்ளது. வழக்கமான அம்சங்களுடன் எந்தவிதமான பாதையிலும் செல்லும் தோற்றத்தைக் கொண்டுள்ளது. கனமான கதவுகளைத் திறக்கும்போது வங்கி பெட்டகத்தை மூடுவது போன்ற ஒலியை கேட்க முடிகிறது. நாங்கள் ஓட்டிய G 400d இதமான நாப்பா லெதரில் செய்யப்பட்டு இருந்தது.

வசதிகளும், வடிவமைப்பும்:

G 400d எங்கும் செல்ல முடியும் என்ற நம்பிக்கையிலான ஆஃப்-ரோடராக இருந்தாலும், 3.0 லிட்டர் டீசல் இன்ஜினுடன் 330hp/700Nm ஆற்றலை வெளிப்படுத்துகிறது. ஆனாலும், எந்தவித அதிர்வுகளையும், குலுங்கலையும் வழங்காமல் அமைதியாக பயணிப்பது ஆச்சரியமளிக்கிறது. சாலையின் தன்மையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றாலும், இது ஒரு சூப்பர் காரை விட அதிக கவனத்தை ஈர்க்கிறது. இது G63 போல வேகமானது அல்ல, ஆனால் மோசமான சாலைகளிலும் அநாயசமாக பயணிப்பதும், டீசல் வாகனங்களுக்கே ஆன அதிக ஆற்றலின் வெளிப்படும் மிகுந்த மகிழ்ச்சியை வழங்குகிறது. நல்ல பயண அனுபவத்திற்கான சஸ்பென்ஷனையும் கொண்டுள்ளது. 241 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் 700 மில்லி மீட்டர் வரையிலான தண்ணீர் வடிவதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது.  பெரும்பாலான சொகுசு SUVகளைப் போலல்லாமல், இது சில ஹார்ட்கோர் ஆஃப்-ரோடிங்கிற்காகவும், உடையக்கூடியதாக இல்லாமல் இருப்பதற்காகவும் தாரளமாக இந்த வாகனத்தை தேர்வு செய்யலாம்.

G 400d மாடலில் லக்கேஜ்களுக்கான குறைந்த இடவசதி மற்றும் சமீபத்திய மெர்சிடிஸ் தொழில்நுட்பங்கள் இல்லாதது, இதன் விலைக்கு உரித்தானதாக இல்லை. ஆனால் இந்த டீசல் இன்ஜின் மிகவும் அமைதியானது மற்றும் அதிக செயல்திறன் கொண்டதாக உள்ளது. பெரும்பாலான உரிமையாளர்கள் அதன் சாலை இருப்பை அனுபவிப்பதற்காக அதை ஓட்டுவார்கள். அதற்காக மட்டுமே, G Wagen ஆனது ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது.

பிடித்தது - தோற்றம், உருவாக்கத் தரம், இயந்திரம், செயல்திறன், கடினத்தன்மை

பிடிக்காதது - விலை அதிகம், லக்கேஜிற்கான இடம் குறைவு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget