Maruti Cars 2026: மாருதியின் லிஸ்டில் நான்கு கார்கள் - ரெண்டு EV கன்ஃபார்ம், ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடலும் - விவரங்கள் இதோ
Maruti Upcoming Cars 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்த ஆண்டு மாருதி சுசூகி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Maruti Upcoming Cars 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்த ஆண்டு இரண்டு மின்சார கார்களை அறிமுகப்படுத்த மாருதி சுசூகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
2026ல் மாருதியில் ப்ளான்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2025ம் ஆண்டில் மாருதி சுசூகி நிறுவனம் ஒரே ஒரு கார் மாடலை மட்டுமே அறிமுகப்படுத்தியது. ஆனால், அந்நிறுவனம் ஓவ்வொரு ஆண்டும் 2 முதல் 3 புதிய அல்லது அப்டேட் செய்யப்பட்ட கார்களை சந்தைப்படுத்துவது வழக்கம். அதனை மீண்டும் நடைமுறைப்படுத்தும் விதமாக, புத்தாண்டில் அதாவது 2026ல் நான்கு கார்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதில் இரண்டு மின்சார கார்கள் மற்றும் ஒரு ஃப்ளெக்ஸ் ஃபியூல் வாகனமும் அடங்கும். இதுபோக மேம்படுத்தப்பட்ட ப்ரேஸ்ஸாவும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
மாருதியின் புதிய கார்கள்:
1. மருதி சுசூகி எ-விட்டாரா:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2026ம் ஆண்டில் மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் கார் மாடலாக, ப்ராண்டின் முதல் மின்சார வாகனமாக இ-விட்டாரா வரும் ஜனவரியில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. நீண்ட இழுபறி மற்றும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகும் இந்த காரானது, உள்நாட்டு சந்தையில் மஹிந்திரா BE6, ஹுண்டாய் க்ரேட்டா மின்சார எடிஷன், MG ZS EV, வின்ஃபாஸ்ட் VF6 மற்றும் டாடா கர்வ் ஆகிய மாடல்களுடன் போட்டியிட உள்ளது. விட்டாராவில் 49KWh மற்றும் 61KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக இந்த காரானது 543 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கு என கூறப்படுகிறது. இந்த மிட்-சைஸ் எஸ்யுவி ஆனது பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
2. மாருதி சுசூகி ஃப்ராங்க்ஸ் ஃப்ளெக்ஸ் ஃபியூல்
முதல் மின்சார காரை தொடர்ந்து, ப்ராண்டின் முதல் ஃப்ளெக்ஸ் ஃபியூல் இன்ஜின் கொண்ட கார் மாடலையும் அடுத்த ஆண்டு மாருதி அறிமுகப்படுத்த உள்ளது. அந்த அம்சத்தை கொண்ட ஃப்ராங்க்ஸ் காம்பேக்ட் எஸ்யுவி ஆனது அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. துல்லியமான தகவல்கள் பெரிய அளவில் வெளியாகாவிட்டாலும், இந்த இன்ஜினின் மிக முக்கியமான அம்சமானது 85 சதவிகித எத்தனால் மற்றும் 15 சதவிகித பெட்ரோலுடன் இயங்கும் என்பதாகும். இந்த புதிய இன்ஜின் வசதியை தவிர, வேறு எந்தவித மாற்றமும் இன்றி தற்போதைய ஃப்ராங்க்ஸ் எடிஷன் அப்படியே தொடருமாம்.
3. மாருதி சுசூகி மின்சார எம்பிவி
முதல் மின்சார காரோடு நிறுத்தாமால் அடுத்த ஆண்டின் இறுதியிலேயே, விட்டாராவின் ப்ளாட்ஃபார்மில் ஒரு எம்பிவியை விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளது. YMC என்ற கோட்நேமை கொண்டுள்ள இந்த காரானது, மாருதியின் முதல் முற்றிலுமான மின்சார எம்பிவி ஆகும். ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் எர்டிகா மற்று XL6 மாடல்களுக்கு மேலே நிலைநிறுத்தப்பட உள்ளது. அதன்காரணமாக இது உள்நாட்டு சந்தையில் கியா காரென்ஸ் க்ளாவிஸ் உடன் மோதக்கூடும். இ விட்டாராவில் உள்ள அதே பேட்டரி ஆப்ஷன்கள் அப்படியே பின்பற்றப்பட்டு சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கக் கூடும்.
4. மாருதி சுசூகி ப்ரேஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்
இரண்டாவது தலைமுறை ப்ரேஸ்ஸா கார் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆன நிலையில், அந்த காம்பேக்ட் எஸ்யுவிக்கு ஃபேஸ்லிப்ஃட் வழங்கும் பணியில் மாருதி இறங்கியுள்ளது. சாலை சோதனையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் டிசைனில் லேசான மாற்றங்கள் இருந்தாலும், விக்டோரிஸில் இருப்பது போன்ற அண்டர்பாடி சிஎன்ஜி டேங்க் டிசைனை கொண்டுள்ளது. அதேநேரம், உட்புறத்திலும் லேசான மாற்றங்களுடன், கூடுதல் வசதிகளும் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜின் அடிப்படையில் எந்தவித மாறமும் இன்றி, 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது மேனுவல் மற்றும் ஆட்டோமொடிக் கியர்பாக்ஸ் உடன் தொடர உள்ளது. சிஎன்ஜி ஆப்ஷனையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். அடுத்த ஆண்டின் மையத்தில் இந்த கார் சந்தைப்படுத்தப்படலாம்.





















