Maruti suzuki Offer: பிப்ரவரியில் கார் வாங்க ஆசையா? ஆஃபர்களை அள்ளி வழங்கும் மாருதி சுசுகி, இவ்வளவு சலுகைளா?
Maruti suzuki Offer: மாருதி சுசுகி நிறுவனத்தின் பல்வேறு மாடல்களுக்கு பிப்ரவரி மாதத்தில், அதிகபட்சமாக, 62 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
Maruti suzuki Offer: மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ கே10, ஸ்விஃப்ட் மற்றும் வேகன் ஆர் உள்ளிட்ட பல்வேறு மாடல்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி தள்ளுபடி:
Maruti Suzuki Arena பிரிவானது Alto K10, S-Presso, Swift மற்றும் Dzire போன்ற மாடல்களுக்கு ரூ.62,000 வரையிலான தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதில் பண தள்ளுபடிகள், எக்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் ஆகியவை அடங்கும். இந்த சலுகைகள் ஆனது ஒவ்வொரு நகரத்திற்கும், டீலர்களிடம் உள்ள கையிருப்பை சார்ந்தும் மாறுபடும். இதனிடயே, பிரேஸ்ஸா மற்றும் எர்டிகா மாடல்களுக்கு எந்த பலன்களும் அறிவிக்கப்படவில்லை.
Maruti Suzuki Alto K10:
மாருதி ஆல்டோ கே10 மாடலின் அனைத்து பெட்ரோல் வேரியண்ட்களுக்கும், ரூ.62,000 வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. இதில் ரூ.40,000 வரை ரொக்க தள்ளுபடி, ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.7,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி அடங்கும். இதற்கிடையில், சிஎன்ஜி வகைகளுக்கு ரூ.40,000 வரை பலன்கள் கிடைக்கும், இதில் ரூ.18,000 ரொக்க தள்ளுபடி, 15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.7,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி அடங்கும். ஆல்டோ K10 ஆனது, எண்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் பிரிவில் ரெனால்ட் க்விட்க்கு போட்டியாக உள்ளது.
Maruti Suzuki S-Presso:
Maruti Suzuki S-Presso , ஆல்டோ மாடலின் ஃபிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டது. இதற்கும் ரூ.61,000 வரை பலன்கள் வழங்கப்படுகிறது. பெட்ரோல் வேரியண்ட்களுக்கு ரூ.40,000 வரை பண தள்ளுபடியும், ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸும், ரூ.6,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடியும் கிடைக்கும். சிஎன்ஜி வேரியண்ட்களுக்கு மொத்தம் ரூ.39,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.18,000 வரை ரொக்க தள்ளுபடி, ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.6,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி அடங்கும்.
Maruti Suzuki Wagon R:
மாருதி வேகன் ஆர் இன் பெட்ரோல்- ஆட்டோமேடிக் வேரியண்ட்களுக்கு ரூ.61,000 வரை சலுகைகள் வழங்கப்படுகிறது. இதில், ரூ.40,000 வரை ரொக்கத் தள்ளுபடி, ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.6,000 வரையிலான கார்ப்பரேட் தள்ளுபடி அடங்கும். மேனுவல் வேரியண்ட்களுக்கு, ரூ. 56,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ. 30,000 வரை பணத் தள்ளுபடி, ரூ. 20,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 6,000 வரை கார்ப்பரேட் போனஸ் அடங்கும்.
Maruti Suzuki Celerio:
Maruti Suzuki Celerio ஆனது அதன் அனைத்து பெட்ரோல் வேரியண்ட்களுக்கும், ரூ. 61,000 வரையிலான மொத்த பலன்களைப் பெற்றுள்ளது. S-Presso மற்றும் Wagon R வாகனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் இதிலும் பின்பற்றப்படுகிறது. CNG வேரியண்ட் ரூ. 39,000 வரை தள்ளுபடியைப் பெறுகிறது. இதில் ரூ.18,000 வரை ரொக்க தள்ளுபடி, ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.6,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி அடங்கும்.
Maruti Suzuki Swift:
ஸ்விஃப்ட் மாடலுக்கு பிப்வரி மாதம் இறுதி வரை ரூ. 42,000 வரையிலான சலுகைகளை பெறுகிறது. இதில் ரூ.15,000 வரையிலான பணப்பலன்கள், ரூ. 20,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 7,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும். சிஎன்ஜி வகைகளுக்கு ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.7,000 கார்ப்பரேட் போனஸ் கிடைக்கும், ஆனால் பணத் தள்ளுபடி அறிவிக்கப்படவில்லை. இது ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸுக்கு போட்டியாக உள்ளது.
Maruti Suzuki Dzire:
ஸ்விஃப்ட்டின் காம்பாக்ட் செடான் எடிஷனான மாருதி சுசுகி டிசைருக்கு ரூ.37,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ.15,000 வரை ரொக்க தள்ளுபடி, ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.7,000 கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும்.