மேலும் அறிய

Maruti Suzuki E Vitara: மாருதி சுசூகியின் முதல் மின்சார கார் அறிமுகம் - இ விட்டாரா எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா?

Maruti Suzuki E Vitara: மாருதி சுசூகியின் முதல் மின்சார கார் மாடலாக, இ விட்டாரா சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Maruti Suzuki E Vitara: மாருதி சுசூகியின் முதல் மின்சார கார் மாடலான இ விட்டாராவின், முழு விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மாருதி சுசூகி இ விட்டாரா:

மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் மின்சார கார் மாடல் சர்வதேச சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுளது. இது e Vitara என்று அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் கடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட,  e VX கான்செப்ட்டின் தயாரிப்பு ஸ்பெக் எடிஷன் தான் இது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் போது,  இ விட்டாரா வேறு பெயரில் குறிப்பிடப்படலாம். ஆனால் வடிவமைப்பு வாரியாக இது, 4m SUV க்கு மேல் இருக்கும் சூழலில் அடிப்படை கான்செப்ட் தோற்றத்தை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இ விட்டாரா வடிவமைப்பு விவரங்கள்:

4275 மிமீ நீளத்துடன், இ விட்டாரா வித்தியாசமான ஹார்டெக்ட்-இ பிளாட்ஃபார்ம் கொண்ட கிராண்ட் விட்டாராவில் இருந்து வித்தியாசமாகவும் மாறுபட்டும் தெரிகிறது. இதன் பொருள் குறுகிய ஓவர்ஹாங்க்கள் மற்றும் அதிக விசாலமான உட்புறம் உள்ளது என்பதாகும். மிலனில் வெளியிடப்பட்ட e விட்டாரா, கூர்மையான DRLகள் மற்றும் ஒரு வெற்று கிரில்லைக் கொண்டுள்ளது. அதே சமயம் டாப்-எண்ட் எடிஷனில் 19-இன்ச் அலாய்கள் உள்ளன. 18இன்ச் அலாய் வீல்கள் ஸ்டேண்டர்ட் எடிஷனில் இருக்க, முன்பக்கத்தில் நிறைய உறைப்பூச்சுகள் உள்ளன.

முந்தைய ஸ்விஃப்ட் போன்ற கதவு கைப்பிடிகள் சி-பில்லரில் வைக்கப்பட்டுள்ளது. மாருதி சுசூகியின் புதிய காரின் இன்டீரியர் மிகவும் ஆடம்பரமாக இருந்தாலும், முற்றிலும் மாறுபட்ட டேஷ்போர்டு டிசைனையும் கொண்டுள்ளது. இதில் புதிய டூ ஸ்போக் ஸ்டீயரிங் வீல், ட்வின் ஸ்கிரீன் லேஅவுட் மற்றும் புதிய டிரைவ் செலக்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பேட்டரி விவரங்கள்:

ஒரு தட்டையான தளத்தை கொண்டிருப்பதோடு, தாராளமாக 2700 மிமீ வீல்பேஸைக் பெற்றிருக்கிறது. சலுகையில் இருக்கும் பேட்டரி பேக்குகள் ஸ்டேண்டர்ட் எடிஷனில் ஒரு முன்பக்க மோட்டார் மற்றும் 142 bhp/189Nm உடன் 49 kWh பேட்டரி பேக் ஆகியவற்றைக் கொண்டு சுவாரஸ்யமானதாக உள்ளது. 180bhp/300Nm உடன் இரட்டை மோட்டார்கள் கொண்ட பெரிய 61kwh பேட்டரி பேக்  ஆப்ஷனும்உள்ளது. 61kwh பேட்டரி பேக் 171bhp செய்யும் ஒற்றை மோட்டார் ஆப்ஷனுடனும் சந்தைப்படுத்தப்பட உள்ளது. மேலும் e விட்டாரா 4WD ஆனது ALLGRIP-e அமைப்புடன் இரண்டு சுயாதீன eAxles மூலம் இயக்கப்படுகிறது.

இந்தியாவில் எப்போது அறிமுகம்?

2025 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் குஜராத்தில் உள்ள சுசூகி மோட்டார் ஆலையில் புதிய காரின் உற்பத்தி தொடங்க உள்ளது. அதைதொடர்ந்து இது நெக்ஸா விற்பனை நிலையங்கள் வழியாக விற்பனை செய்யப்படும் மிகவும் பிரீமியம் மாருதி கார்களில் ஒன்றாக இருக்கலாம். இந்த கார் வெளிநட்டு சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.  இந்திய சந்தையில் டாடா கர்வ்வ் EV, மஹிந்திராவின் BE மற்றும் கிரேட்டா EV ஆகியவற்றிற்கு போட்டியாக இருக்கும். ஜனவரி மாதம் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி மூலம், இந்தியாவில் புதிய இ விட்டாரா அறிமுகப்படுத்தப்பட்டு விலை போன்ற விவரங்களும் அறிவிக்கப்பட உள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget