Maruti Suzuki Brezza CNG: காசிருந்தாலும் உடனே வாங்க முடியாது.. மாத கணக்கில் காக்க வைக்கும் மாருதி சுசுகி பிரேஸ்ஸா சிஎன்ஜி
மாருதி சுசுகி பிரேஸ்ஸா சிஎன்ஜி காருக்கான காத்திருப்பு காலம் மேலும் 2 மாதங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி பிரேஸ்ஸா சிஎன்ஜி காருக்கான காத்திருப்பு காலம் மேலும் 2 மாதங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி பிரேஸ்ஸா சிஎன்ஜி
மாருதி சுசுகி நிறுவனம் தனது புதிய சிஎன்ஜி மாடல் காரான பிரேஸ்ஸாவை கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த காரின் விலை இந்திய மதிப்பில் ரூ.9.14 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பிரேஸ்சா சிஎன்ஜி கார் மாடலுக்கான முன்பதிவு அமோகமாக நடபெற்று வருகிறது. இதனால், ஏற்கனவே முன்பதிவு செய்வோருக்கு 3 முதல் 4 மாதங்களில் கார் டெலிவெரி செய்யப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது தேவை அதிகரித்துள்ளதால் காருக்கான காத்திருப்பு காலம் 6 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர் ஒருவர் காரை தற்போது முன்பதிவு செய்தால், செப்டம்பர் மாதத்தில் தான் அவருக்கு கார் டெலிவெரி செய்யப்படும்.
இன்ஜின் விவரங்கள்:
பிரேஸ்ஸா சிஎன்ஜி மாடலில் புதிய பிரெஸ்ஸா CNG மாடலில் 1.5 லிட்டர், டூயல்ஜெட் டூயல் VVT NA பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பெட்ரோல் இன்ஜின் 99.2 ஹெச்பி பவர், 136 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. CNG மோடில் இதன் செயல்திறன் 86.63 ஹெச்பி பவர், 121.5 நியூட்டன் மீட்டர் டார்க் ஆக குறைந்துவிடும். இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. அதோடு, 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனும் ஃபியூட்ச்சர் ஆப்ஷனாக இடம்பெற்றுள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய CNG மாடல் லிட்டருக்கு 25.51 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என கூறப்பட்டுள்ளது.
முன்பதிவு விவரம்:
இந்திய சந்தையில் மாருதி சுசுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி மாடல் கார், LXi, VXi மற்றும் ZXi என மூன்று விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அவற்றிற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சிறப்பம்சங்கள்:
சிறப்பு அம்சங்களை பொருத்தவரை பிரெஸ்ஸா சிஎன்ஜி டாப் எண்ட் மாடலில் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, 7.0 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ரியர் ஏசி வெண்ட்கள், பவர்டு ரியர்-வியூ மிரர்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அம்சங்கள்:
மேலே குறிப்பிட்டதை தவிர, மாருதி சுசுகி பிரெஸ்ஸாவில் டூயல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் வித் இபிடி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ஈஎஸ்பி), ரிவர்ஸ் கேமரா, ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்ற பல பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் வழங்கப்பட்டுள்ளன.