Mahindra SUV Discount: எஸ்யுவிகளுக்கு ஆஃபரை அள்ளி வீசிய மஹிந்த்ரா - XUV-க்கு ரூ.3 லட்சம், கம்மி விலையில் பொலேரோ,
Mahindra SUV Discount: மஹிந்த்ரா நிறுவனம் தனது எஸ்யுவி கார் மாடல்கள் மீது ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை சலுகைகளை அறிவித்துள்ளது.

Mahindra SUV Discount: மஹிந்த்ரா நிறுவனம் தனது எஸ்யுவி கார் மாடல்கள் மீது ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
சலுகைகளை அறிவித்த மஹிந்த்ரா:
மஹிந்த்ரா நிறுவனம் தனது பரந்து விரிந்த எஸ்யுவி கார் மாடல்கள் மற்றும் ஒரே ஒரு எம்பிவி வாகனத்தின் மீது, ஆகஸ்ட் மாதத்தில் தாராளமான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த பலன்களில் பணத்தள்ளுபடி, எக்சேஞ்ச் அல்லது ஸ்க்ரேப்பேஜ் போனஸ், கார்ப்ரேட் ஆஃபர் மற்றும் அக்செசரீஸ் பேக்கேஜஸ் அடங்கும். பலன்களை பெறும் கார்களில் XUV 3XO, ஸ்கார்ப்பியோ N, XUV 400 மற்றும் பொலேரோ ரேஞ்ச் ஆகிய மாடல்களும் அடங்கும். எந்த கார்களுக்கு அதிக சலுகை வழங்கப்படுகிறது என்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்த சலுகைகளானது குறுகிய காலத்திற்கு மட்டுமே பொருந்தும். கார்களின் வேரியண்ட், விற்பனை செய்யப்படும் தளம் மற்றும் கையிருப்பு ஆகியவற்றை பொருத்தும் மாறுபடும்.
மஹிந்த்ராவின் எந்த காருக்கு அதிக சலுகை?
XUV 400 EL Pro கார் மாடலுக்கு அதிகபட்சமாக 2.95 லட்சம் மதிப்பிலான சலுகைகள் மற்றும் பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து பொலேரோ நியோ N10 கார் மாடலுக்கு ஒரு லட்சத்து 39 ஆயிரம் ரூபாயும், பொலேரோ B6 மாடலுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும் பலன்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் அடிப்படையில் XUV 3XO கார் மாடல்களுக்கு 64 ஆயிரம் முதல் 89 ஆயிரம் ரூபாய் வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஸ்கார்ப்பியோ N மாடல்கள் மீது 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பிளாக் எடிஷன் வேரியண்ட்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என கூறப்படுகிறது.
ரூ.1 லட்சம் வரையிலான தள்ளுபடி
பாரம்பரியமான லேடர் ஃப்ரேம் சேசஸ் மற்றும் மலிவு விலை காரை விரும்புவோருக்கு, ஸ்கார்ப்பியோ க்ளாசிக் S கார் மாடல் மீது ஒரு லட்சம் ரூபாய் வரையில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. தார் 3 டோர் மற்றும் ராக்ஸ் கார்கள் மீது 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஸ்க்ரேப்பேஜ் போனஸ் வழங்கப்படுகிறது. பட்ஜெட்டில் கார் வாங்க விரும்புவோருக்கான சிறந்த சலுகையாக, பொலேரோவின் டாப் வேரியண்ட்கள் மீது 1.3 லட்சம் வரையிலான பணப்பலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மஹிந்திராவின் உற்பத்தி நிறுத்தப்பட்ட ஒரே ஒரு எம்பிவி ஆன மராஸோவிற்கு 35 ஆயிரம் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான மதிப்பு கொண்ட அக்செசரீஸ் வழங்கப்படுகின்றன.
எந்த காருக்கு எவ்வளவு சலுகை:
| மஹிந்த்ரா கார் மாடல் | தள்ளுபடி விவரம் |
| XUV 3XO | ரூ. 89,000 + 20 ஆயிரம் மதிப்பிலான அக்செசரீஸ் |
| தார் | ரூ. 25,000 |
| தார் ராக்ஸ் | ரூ. 25,000 |
| பொலேரோ | ரூ.1,10,700 + 20 ஆயிரம் மதிப்பிலான அக்செசரீஸ் |
| பொலேரோ நியோ | ரூ.1,09,00 20 ஆயிரம் மதிப்பிலான அக்செசரீஸ் |
| பொலேரோ நியோ ப்ளஸ் | ரூ.85,000 |
| ஸ்கார்ப்பியோ க்ளாசிக் | ரூ.70,000 + 30 ஆயிரம் மதிப்பிலான அக்செசரீஸ் |
| ஸ்கார்ப்பியோ N | ரூ. 55,00 + 20 ஆயிரம் மதிப்பிலான அக்செசரீஸ் |
| XUV 400 | ரூ. 2,95,000 |
| XUV 700 | ரூ.50,000 + 15 ஆயிரம் மதிப்பிலான அக்செசரீஸ் |
| மாரஸோ | ரூ.35,000 |
விற்பனையை ஊக்குவிக்க திட்டம்:
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட கார்களை தொடங்கி, நீண்ட நாட்களாக ப்ராண்டின் அடையாளமாக உள்ள கார்கள் மீதும் இந்த ஆகஸ்ட் மாத சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 25 ஆயிரம் முதல் 3 லட்சம் வரையிலான சலுகைகள், வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆகஸ்ட் மாத விற்பனை அதிகரிப்பதோடு, விழாக்காலம் வரும் வரையில் பிராண்டின் சில்லறை விற்பனையை வலுவானதாக தொடரவும் மஹிந்த்ரா திட்டமிட்டுள்ளது.





















