மேலும் அறிய

Lotus Eletre SUV: மிரட்டும் வசதிகளோடு மின்சார வாகனம்.. இந்தியாவில் கால்பதிக்கும் லோட்டஸ் நிறுவனம்.. என்ன ஸ்பெஷல்..!

முன்னணியில் இருக்கும் கார் நிறுவனங்களும் மின்சார வாகனங்கள் விற்பனைக்கு தங்களை மாற்றிக் கொண்டுள்ளது.

புகழ்பெற்ற பிரிட்டிஷ் ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனமான லோட்டஸ் இந்தியாவில் கார் விற்பனையில் களமிறங்கியுள்ளது. அதன் முதல் தயாரிப்பாக எலெட்ரே எலக்ட்ரிக் எஸ்யூவி (Lotus Eletre electric SUV)அறிமுகமாகியுள்ளது. 

அதிகரிக்கும் கார் விற்பனை 

இந்தியாவில் கார் விற்பனை என்பது கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது தற்போது அதிகரித்து வருகிறது. வசதி படைத்தவர்கள் தான் கார் வாங்க முடியும் என்பது தாண்டி நடுத்தர வர்க்கத்தினர் இடையே காரின் பயன்பாடு என்பது வளர்ந்து வருகிறது. அதேசமயம் முழுமையாக மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றது. 

அந்த வகையில் மின்சார கார்கள், பைக்குகள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும்காலத்தில் இதன் வளர்ச்சி எதிர்பாராததை விட அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தையில் முன்னணியில் இருக்கும் கார் நிறுவனங்களும் மின்சார வாகனங்கள் விற்பனைக்கு தங்களை மாற்றிக் கொண்டுள்ளது. அதேபோல் புதிதாக மின்சார வாகனங்கள் மூலம் உலகளவில் பிரபலமாக இருக்கும் நிறுவனங்களும் இந்தியாவில் கால் பதித்து வருகின்றது. 

எலெட்ரே எலக்ட்ரிக் எஸ்யூவி (Lotus Eletre electric SUV)

அந்த வகையில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனமான லோட்டஸ் இந்தியாவில் கார் விற்பனையில் களமிறங்கியுள்ளது. எலெட்ரே எலக்ட்ரிக் எஸ்யூவி கார் முதல் தயாரிப்பாக அறிமுகமாகியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 2.55 கோடி ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த மற்றும் சக்திவாய்ந்த மின்சார கார் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து லோட்டஸ் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் எமிரா காரை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. 

இதன் முதல் விற்பனை கிளை புது டெல்லியில் திறக்கப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து  நாடு முழுவதும் கிளைகள் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் லோட்டஸ் காரின் டீலராக எக்ஸ்க்ளூசிவ் மோட்டார்ஸ் நிறுவனம் உள்ளது.  611 லிட்டர் முதல் 688 லிட்டர் கொள்ளளவு கொண்ட பின்புறம் உள்ளது.முன்பக்கம் இரண்டு பூமராங் வடிவ LED விளக்குகளுடன் கூடிய தோற்றத்தை கொண்டுள்ளது. ஐந்து இருக்கைகள் கொண்ட இந்த காரின் செயல்பாடுகள் ஸ்போர்ட்ஸ் கார்களைப் போலவே இருக்கும்.

இதில் இண்டீரியர் தீம் 6 வகைகளில் கஸ்டமைஸ் செய்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அனைத்தும் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், வயர்லெஸ் சார்ஜிங், ப்ரீமியம் ஒலி அமைப்பு, கட்டமைக்கக்கூடிய சுற்றுப்புற விளக்குகள், கிளைமேட் கன்ட்ரோல் செய்யக்கூடிய வசதிகள், 15.1 இன்ச் அளவிலான மடிக்கக்கூடிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 15 ஸ்பீக்கர்கள் அடங்கிய சவுண்ட் சிஸ்டம், ஏர் பியூரிஃபையர் போன்றவைகளும் உள்ளது. 

புதிய லோட்டஸ் எலெக்ட்ரே மாடலில் 112 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் உள்ளது. மேலும் இதில் எலக்ட்ரே, எலேக்ட்ரெ எஸ், எலக்ட்ரே ஆர் ஆகிய 3 மாடல்களில் கிடைக்கிறது. இதில் முதல் 2 மாடல்களில் முழு சார்ஜ் செய்யப்பட்டால் கிட்டதட்ட 600 கிலோ மீட்டர்கள் வரையிலான மைலேஜ் கிடைக்கும். ஆர் மாடலில் 490 கிலோ மீட்டர் வரை கிடைக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம்  - உச்சநீதிமன்றம் அதிரடி
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
Embed widget