நடப்பாண்டு இறுதிக்குள் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகமாக உள்ள எஸ்யுவி கார்கள் தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறிய உள்ளது.
எஸ்யுவி-க்கு டிமேண்ட்:
ஆட்டோமொபைல் சந்தையில் இன்றைய தேதிக்கு மிகவும் பிரபலமான வார்த்த என்றால் அது எஸ்யுவி (SUV). sport utility vechile என்பது தான் இதன் அர்த்தம். அதாவது காண்போரை கவரக்கூடிய அழகான வடிவமைப்பு, கூடுதல் சிறப்பம்சங்கள் ஆகிய சாதாரண காருக்கே உரித்தான அனைத்து அம்சங்களும் இதில் இடம்பெறும். அதோடு, மட்டுமின்றி மோசமான மற்றும் கரடுமுரடான சாலைகளில் கூட எளிமையாக பயணம் மேற்கொள்ளளும் வகையிலான, கிரவுண்ட் கிளியரன்ஸ் போன்ற ஸ்போர்ட்ஸ் வாகனங்களுக்கான திறன்களையும் கொண்டது தான் எஸ்யுவி. இந்த கார்களுக்கான தேவை தான், தற்போது இந்திய சந்தையில் மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் பலமடங்கு அதிகரித்துள்ளது. இதை உணர்ந்த பல முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களும் அடுத்தடுத்து, புதுப்புது எஸ்யுவி மாடல் வாகானங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், நடப்பாண்டு இறுதிக்குள் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வெளியாக உள்ள, 7 எஸ்.யுவிக்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
01. Honda Elevate
இந்தியாவில் விரைவில் வெளியாக உள்ள எஸ்.யூவிக்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக ஹோண்டா எலிவேட் உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் இந்த கார் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற கிளாஸ் லீடர்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது. ஹோண்டா எலிவேட்டில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 121 பிஎஸ் மற்றும் 150 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.12-19 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
02. Citroen C3 Aircross
பிரெஞ்சு கார் உற்பத்தியாளரான சிட்ரோயன், அதன் புதிய எஸ்யூவியான சி3 ஏர்கிராஸை இந்த மாதம் அறிமுகம் செய்து, நடுத்தர அளவிலான எஸ்யூவி பிரிவில் போட்டியிட உள்ளது. 4.3 மீ நீளம் கொண்ட புதிய C3 Aircross SUV 5-சீட் மற்றும் 5+2-சீட் உள்ளமைவுகளில், முதலில் ஒரு பிரிவில் கிடைக்கும். C3 Aircross ஆனது 110hp மற்றும் 190 Nm டார்க் திறன் கொண்ட 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உடன் மட்டுமே கிடைக்கும். ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் அது இணைக்கப்பட்டுள்ளது.
03. Tata Nexon facelift
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் இந்த மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகனம் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் மற்றும் பிறவற்றுடன் போட்டியிடும் என கூறப்படுகிறது. புதிய SUV பல வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பு மேம்பாடுகள் கொண்டிருக்கும். டாடா நெக்ஸான் புதிய 1.2-லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ சார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய இன்ஜின் 125 பிஎச்பி மற்றும் 225 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
04.Hyundai Creta facelift
தென் கொரிய வாகன உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின், க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் செப்டம்பர் மாதம் அறிமுகமாக உள்ளது. க்ரெட்டா மாடல் ஏற்கனவே எச்யுவி செக்மென்டின் சாம்பியனாக உள்ளது. மேலும் ஃபேஸ்லிஃப்ட் வெளியீட்டின் மூலம், நாட்டின் நடுத்தர அளவிலான SUV பிரிவில் அதன் முதல் இடத்தைப் மேலும் வலுப்படுத்த உள்ளது. புதிய க்ரெட்டா நிச்சயமாக தற்போதைய பவர் ட்ரெயின்களை வைத்திருக்கும். எஸ்யூவியின் முன்பகுதி முற்றிலும் புதிய வடிவமைப்பைக் கொண்டிருக்கும்.
05. Tata Harrier facelift
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் பிரபலமான மிட்-ரேஞ்ச் அளவிலான எஸ்யூவியான ஹாரியரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் அக்டோபர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. புதிய ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் அழகியல் மேம்பாடுகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட உட்புறத்தை கொண்டுள்ளது. 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன், அதே 2.0-லிட்டர் டீசல் இன்ஜின் இடம்பெற்று இருக்கும். அதோடு, புதிய டர்போ பெட்ரோல் இன்ஜின் தற்போதைய பவர்டிரெய்ன்களுடன் கிடைக்கக்கூடும்.
06. Tata Safari facelift
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா சஃபாரியும் மாடலும் அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய சஃபாரி பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ADAS தொழில்நுட்பத்தால், கிளாஸ் லீடர் மஹிந்திரா XUV700 உடன் போட்டியிடும் வகையில் மாற்றியமைக்கப்படும். டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் புதிய 1.5-லிட்டர், 4-சிலிண்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இன்ஜின் 168bhp பீக் பவர் மற்றும் 280Nm பீக் டார்க் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. கூடுதலாக, 2.0-லிட்டர் கைரோடெக் டீசல் இன்ஜின் 170PS மற்றும் 350 Nm மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
07. Kia Sonet facelift
கியா இந்தியா தனது சப்காம்பாக்ட் எஸ்யூவியான சோனெட்டின் ஃபேஸ்லிஃப்டை டிசம்பரில் அறிமுகப்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த SUV பற்றிய விவரங்கள் தற்போது குறைவாக இருந்தாலும், தற்போதுள்ள மாடலை காட்டிலும் புதிய வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பவர்டிரெய்ன் விருப்பங்கள் அப்படியே இருக்கும். இது ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா போன்ற மாடல்களுக்கு போட்டியாக் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.