Royal Enfield Super Meteor 650: ரக்கட் ஆன சூப்பர் மீடியோர் 650.. பைக் பற்றி அறிய வேண்டிய அம்சங்கள், வசதிகள் - விலை
Royal Enfield Super Meteor 650: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ராயல் என்ஃபீல்டின் மீடியோர் 650 மோட்டார் சைக்கிளை வாங்குவதற்கு முன்பாக, அறிய வேண்டிய விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Royal Enfield Super Meteor 650: இராயல் என்ஃபீல்டின் மீடியோர் 650 மோட்டார் சைக்கிளின் அம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ராயல் என்ஃபீல்ட் மீடியோர் 650
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும், முதன்மையான மோட்டார் சைக்கிளாக மீடியோர் 650 மாடல் திகழ்கிறது. ப்ராண்டின் மற்ற மிட்-வெயில் மாடல்களில் பயன்படுத்தப்படும் அதே நன்கு பரிட்சயமான, 649சிசி இன்ஜின் தான் இந்த வாகனத்திலும் இடம்பெற்றுள்ளது. ஆனால், முழு அளவிலான க்ரூஸர் சவாரி தோரணையுடன் மீடியோர் வேறுபட்டு காட்சியளிக்கிறது. இந்நிலையில் இந்த மோட்டார்சைக்கிளை வாங்குவதற்கு முன்பு, பயனர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மீடியோர் 650 - அறிய வேண்டிய விஷயங்கள்
1. மீடியோர் 650 - பவர்ட்ரெயின் விவரங்கள்
சூப்பர் மீடியோர், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட, 47hp மற்றும் 52Nm ஆற்றலை உற்பத்தி செய்யும், முயற்சித்துப் பரிசோதிக்கப்பட்ட 649cc, பேரலல்-ட்வின், ஏர்/ஆயில்-கூல்ட் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. அதிகபட்சமாக இது லிட்டருக்கு சுமார் 25 கிலோ மீட்டர் (சூழலை பொறுத்து) மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது.
2. மீடியோர் 650 Vs ஷாட்கன் 650 - வித்தியாசம் என்ன?
சூப்பர் மீடியோர் 650, ஷாட்கன் 650 உடன் தனது ப்ளாட்ஃபார்மை பகிர்ந்து கொண்டாலும், பல முக்கிய பகுதிகளில் இது தனித்து நிற்கிறது. ஷாட்கனின் 18-இன்ச்/17-இன்ச் காம்போவுடன் ஒப்பிடும்போது, இது 19-இன்ச் முன் மற்றும் 16-இன்ச் பின்புறத்துடன் மிகவும் பாரம்பரியமான க்ரூஸர்-பாணி வீல்களை கொண்டுள்ளது. சூப்பர் மீடியோர் ஒரு பெரிய 15.7-லிட்டர் எரிபொருள் டேங்கை கொண்டுள்ளது. இது ஷாட்கனை விட தோராயமாக 2 லிட்டர் அதிக கொள்ளளவை அளிக்கிறது. கூடுதலாக, அதன் மிகக் குறைந்த 740மிமீ இருக்கை உயரம் ஷாட்கனின் 795மிமீ ஐ விட கணிசமாகக் குறைவு ஆகும்.

3. சூப்பர் மீடியோர் 650 இன் கர்ப் எடை என்ன?
ராயல் என்ஃபீல்ட் சூப்பர் மீடியோர் 650 பைக்கின் எடை 241 கிலோ ஆகும், இது தற்போது விற்பனையில் உள்ள மிகவும் கனமான RE 650 பைக்கான கிளாசிக் 650 ட்வின் பைக்கை விட சுமார் 2 கிலோ எடை குறைவு.
4. சூப்பர் மீடியோர் 650 முழுமையாக LED விளக்குகளைப் பெறுகிறதா?
இல்லை, சூப்பர் மீடியோர் 650 எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில்-லைட்டைப் பெறுகிறது, ஆனால் இன்டிகேட்டர்கள் தொடர்ந்து பல்பைப் பயன்படுத்துகின்றன.
5. சூப்பர் மீடியர் 650 வண்ண விருப்பங்கள்
ராயல் என்ஃபீல்ட் சூப்பர் மீடியோர் 650 பைக்கானது 6 வண்ணங்களில் கிடைக்கிறது. அதில் கருப்பு, பச்சை, கருப்புடன் சாம்பல், கருப்புடன் பச்சை, வெள்ளையுடன் நீலம் மற்றும் வெள்ளையுடன் சிவப்பு ஆகியவை அடங்கும்.
6. ஜிஎஸ்டி 2.0 க்குப் பிறகு சூப்பர் மீடியர் 650 இன் விலை என்ன?
சூப்பர் மீடியோர் 650 விலை ரூ.3.99 லட்சத்திலிருந்து ரூ.4.32 லட்சமாக உயர்கிறது. இது ஜிஎஸ்டி திருத்தத்திற்கு முன்பு இருந்ததை காட்டிலும் ரூ.27,000 முதல் ரூ.29,000 வரை அதிகமாகும்.





















