New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
Jan 2026 New Car Launch: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வரும் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ள, புதிய கார்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Jan 2026 New Car Launch: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வரும் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ள, புதிய கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஜனவரி மாதம் அறிமுகமாக உள்ள புதிய கார்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரியிலேயே, பல புதிய கார் மாடல்கள் அடுத்தடுத்து சந்தைப்படுத்தப்பட உள்ளன. அதில் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களான கியா, மஹிந்திரா, டாடா மற்றும் மாருதி ஆகிய ப்ராண்ட்களின் மாடல்களும் அடங்கும்.குறிப்பாக சில நிறுவனங்களிடமிருந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முற்றிலும் புதிய மாடல்கள், முதல் மின்சார கார்கள் மற்றும் மிட்-லைஃப் அப்டேட் பெற்ற மாடல்கள் ஆகியவையும் உள்ளன. இந்நிலையில், ஜனவரி மாதம் அறிமுகமாக உள்ள கார்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
1. புதிய தலைமுறை கியா செல்டோஸ்
கியா நிறுவனம் அண்மையில் தான் தனது புதிய தலைமுறை செல்டோஸை அறிமுகப்படுத்தியது. இந்த மிட்-சைஸ் எஸ்யூவியின் இரண்டாம் தலைமுறை மாடல் புதிய K3 ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டது. உள்ளேயும் வெளியேயும் முற்றிலும் புதிய வடிவமைப்பு மொழியைக் கொண்டுள்ளது. பழைய மாடலை காட்டிலும் 95 மிமீ நீளமும் 30 மிமீ அகலமும் அதிகமாக கொண்டது. அதே நேரத்தில் வீல்பேஸ் 80 மிமீ அதிகரித்துள்ளது.
அடுத்த தலைமுறை செல்டோஸின் முன்பதிவுகள் ஏற்கனவே ரூ. 25,000 டோக்கன் தொகைக்கு தொடங்கிவிட்டன. இன்ஜின் அடிப்படையில் மாற்றம் இன்றி 1.5 லிட்டர் NA பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ டீசல் மற்றும் 1.5 லிட்டர் tGDi பெட்ரோல் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. விலை அறிவிப்பு ஜனவரி 2 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் டெலிவரி ஜனவரி நடுப்பகுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2. மாருதி சுசூகி இ விட்டாரா
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுசூகியின் முதல் மின்சார கார் ஏற்கனவே இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா என மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் காரின் விலை ஜனவரியில் வெளியிடப்பட உள்ளது. 49 kWh மற்றும் 61 kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை கொண்டு அதிகபட்சமாக 543 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் அளிக்கக் கூடும், ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் ஆப்ஷன் மட்டுமே இதில் கிடைக்கிறது, பெரிய 61 kWh பேட்டரி பேக் ஆப்ஷனில், 172 bhp மற்றும் 193 Nm ஆற்றல் உற்பத்தி மதிப்பிடப்படுகிறது.
3. ரெனால்ட் டஸ்டர்
இந்திய சந்தையில் புத்தம் புதிய டஸ்டரின் அறிமுகத்தை ரெனால்ட் உறுதிப்படுத்தியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த எஸ்யூவி ஜனவரி 26, 2026 அன்று வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. CMF-B தளத்தை அடிப்படையாகக் கொண்டு, புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மி-சைஸ் அளவிலான SUV-க்கான உள்ளூர்மயமாக்கப்பட்ட ஹைப்ரிட் பவர்டிரெய்னையும் நிறுவனம் மதிப்பீடு செய்து வருகிறது. வடிவமைப்பைப் பொறுத்தவரை, டஸ்டரில் இந்திய சந்தைக்கு என பிரத்யேக டச்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
4. ஸ்கோடா குஷக் ஃபேஸ்லிஃப்ட்
குஷக் அதன் முதல் மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்ட் புதுப்பிப்பை ஜனவரி 2026 இல் பெறத் தயாராகி வருகிறது. நடுத்தர அளவிலான எஸ்யூவி திருத்தப்பட்ட முகப்பு பகுதி, புதிய அலாய் வீல்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பின்புறத்தைக் கொண்டிருக்கும். கேபினுக்குள், பனோரமிக் சன்ரூஃப், 360-டிகிரி பார்க்கிங் கேமரா மற்றும் லெவல் 2 ADAS போன்ற புதிய அம்சங்களைச் சேர்ப்பதோடு, அமைப்பில் சிறிய மாற்றங்களையும் எதிர்பார்க்கலாம். இன்ஜின் அடிப்படையில் எந்த மாற்றாமும் இருக்க வாய்ப்பில்லை.
5. மஹிந்திரா XUV7XO
மஹிந்திரா XUV700 இன் மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்ட் ஜனவரி 5, 2026 அன்று சந்தைப்படுத்தப்பட உள்ளது. XUV7XO என அழைக்கப்படும் இந்த SUV, புதிய வெளிப்புற வடிவமைப்பையும், உட்புறத்தில் சில மாற்றங்களையும் கொண்டிருக்கும். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முற்றிலும் மின்சார காரான XEV 9S உடன் சில ஒற்றுமைகளைப் பகிர்ந்து கொள்ளும். இது மூன்று டேஷ்போர்டு திரை அமைப்பையும், மசாஜ் முன் இருக்கைகள், 6 இருக்கைகள் கொண்ட கட்டமைப்புடன் பின்புற காற்றோட்டமான இருக்கைகள், 16-ஸ்பீக்கர் பிரீமியம் ஒலி அமைப்பு, பல ஆம்பியண்ட் லைட்ஸ் மற்றும் பல புதிய அம்சங்களை கொண்டிருக்கும். 2.0-லிட்டர் mStallion பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் mHawk டீசல் இன்ஜின்கள் மஹிந்திரா XUV7XO ஐ தொடர்ந்து இயக்கும்.
6. நிசான் கிராவைட் MPV
நிசான் நிறுவனம் புதிய கிராவைட்டுடன் காம்பாக்ட் MPV பிரிவில் தடம்பதிக்க தயாராக உள்ளது. ரெனால்ட் ட்ரைபரை அடிப்படையாகக் கொண்ட இந்த 7 சீட்டர் MPV, ஜனவரி 2026 இல் அறிமுகமாகும், அதைத் தொடர்ந்து மார்ச் 2026 இல் அதன் விலை அறிவிப்பு வெளியிடப்படும். இது பழக்கமான CMF-A+ பிளாட்ஃபார்மில் உற்பத்தி செய்யப்பட்டாலும், வெளிப்புற வடிவமைப்பு மற்றும் உட்புற அமைப்பில் சில கணிசமான வேறுபாடுகள் இருக்கும், 1.0 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜினிலிருந்து சக்தியைப் பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.
7. டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்
டாடா மோட்டார்ஸ், ஜனவரி 2026 இல் இந்திய சந்தையில் பஞ்சின் மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட மைக்ரோ-எஸ்யூவி ஏற்கனவே பலமுறை சாலை சோதனையின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது, இதன் வெளிப்புறத்தில் சிறிய திருத்தத்துடன் மின்சார எடிஷனின் தாக்கம் இருக்கிறது, கேபினுக்குள், புதிய ஸ்டீயரிங் வீல், டேஷ்போர்டு அமைப்பில் மாற்றங்கள், பெரிய 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பலவற்றைக் கொண்டிருக்கும். இன்ஜின் அடிப்படையில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை.





















