Powerful 650cc Bikes: சக்தி வாய்ந்த 650 சிசி மோட்டார்சைக்கிள் - டாப் 5 பைக்குகளின் லிஸ்ட் இதோ..!
Powerful 650cc Bikes: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும் சக்தி வாய்ந்த 650சிசி மோட்டார் சைக்கிள்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
Powerful 650cc Bikes: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும் சக்தி வாய்ந்த 650சிசி பிரிவின், டாப் 5 மோட்டார் சைக்கிள்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
5: டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660
ட்ரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 என்பது 80 பிஎச்பி மற்றும் 64 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் 660சிசி பேரலல் ட்வின் இன்ஜின் கொண்ட ஒரு சிறந்த டூரிங் மோட்டார்சைக்கிள் ஆகும். இது துல்லியமாக ஆஃப்-ரோடிங்கிற்கான வாகனம் அல்ல. ஆனால் பெரும்பாலான இந்திய சாலைகளை இதனால் எளிதாக சமாளிக்க முடியும். சென்னையில் இந்த பைக்கின் ஆன் ரோட் விலை 10 லட்சத்து 85 ஆயிரத்து 514 ரூபாயாக உள்ளது.
4: டிரையம்ப் ட்ரைடென்ட் 660
ட்ரையம்ப் ட்ரைடென்ட் 660 ஆனது 660 மாடல்களில் முதலாவது ஆகும். இது 80 bhp மற்றும் 64 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 660cc பேரலல் ட்வின் இன்ஜினுடன் வருகிறது. சூப்பர் பைக் துறையில் இது ஒரு சிறந்த எண்ட்ரி மற்றும் பணத்திற்கான நல்ல மதிப்பையும் வழங்குகிறது. சென்னையில் இந்த பைக்கின் ஆன் ரோட் விலை 9 லட்சத்து 48 ஆயிரத்து 744 ரூபாயாக உள்ளது.
3: ஏப்ரிலியா டுவோனோ 660
ஏப்ரிலியா டுவோனோ ஒரு சிறந்த ஸ்போர்ட்ஸ் டூரர் வாகனமாகும். அதன் இன்ஜினை கிரேஸி RS 660 மாடலுடன் உடன் பகிர்ந்து கொள்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது 659cc பேரல்லல் ட்வின் இன்ஜினுடன் வருகிறது. இது 93.87 bhp மற்றும் 67 Nm டார்க்கை உருவாக்குகிறது. சிறந்த செயல்திறனை வழங்குவதோடு, நீண்ட தூரம் சவாரி செய்யவும் ஏப்ரிலியா டுவோனோ வசதியாக உள்ளது. சென்னையில் இந்த பைக்கின் ஆன் ரோட் விலை 19 லட்சத்து 83 ஆயிரத்து 2 ரூபாயாக உள்ளது.
2: ஏப்ரிலியா ஆர்எஸ் 660
ஏப்ரிலியா RS 660 என்பது ஒரு முழுமையான டிராக் பைக் ஆகும். இதில் இடம்பெற்றுள்ள 659cc பேரலல் ட்வின் இன்ஜின் ஆனது, 98.56 bhp மற்றும் 67 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இது இந்த பிரிவில் உள்ள கவனத்தை ஈர்க்கக் கூடிய மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாகும், ஆனால் அதிக விலை வாடிக்கையாளர்களை சற்றே சிந்திக்க வைக்கிறது. சென்னையில் இந்த பைக்கின் ஆன் ரோட் விலை 20 லட்சத்து 16 ஆயிரத்து 634 ரூபாயாக உள்ளது.
1. கவாசாகி நிஞ்ஜா ZX- 6ஆர்
கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-6ஆர் இந்தியாவில் விற்பனையாகும் சிறந்த சூப்பர் ஸ்போர்ட் பைக்குகளில் ஒன்றாகும். இது 128 bhp மற்றும் 69 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 636cc இன்லைன் நஃபோர் இன்ஜினுடன் வருகிறது. இது மிடில்வெயிட் பிரிவில் உள்ள வேகமான மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாகும். சர்வதேச அளவில் மிக நீண்ட காலமாக இயங்கும் பிராண்டாக உள்ளது. சென்னையில் இந்த பைக்கின் ஆன் ரோட் விலை 12 லட்சத்து 90 ஆயிரத்து 658 ரூபாயாக உள்ளது.