Biggest Airplanes: இதுதான் பிரமாண்டம்..! உலகின் மிகப்பெரிய விமானங்கள் - டாப் 5 லிஸ்ட் இதோ..!
Biggest Airplanes: உலகின் மிகப்பெரிய விமானங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
Biggest Airplanes: உலகின் மிகப்பெரிய விமானங்களின் டாப் 5 லிஸ்ட் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
விமானங்கள்:
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் வானத்தில் பறக்கும் என்று யாருமே கற்பனை கூட செய்து பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால் இன்று, ஒரு பொருளாக மட்டுமின்றி, பல நூறு பேர் அமரக்கூடிய வகையில் உலோகத்தால் செய்யப்பட்ட பெரிய வாகனம் காற்றில் பறந்து ஆச்சரியத்துடன் வியந்து பார்க்கச் செய்கிறது. அனைத்திற்கு காரணம் அறியல் மட்டுமே. ஆரம்பகட்டத்தில் ஒரு சிலர் மட்டுமே பயணிக்கும் வகையில் இருந்த விமானங்கள், இன்று பொதுஜன பயன்பாட்டிற்கு வந்து, வாய்பிளக்க வைக்கும் வகையில் பிரமாண்டமாய் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், உலகின் மிகப்பெரிய 5 விமானங்களைப் பற்றி இங்கே அறியலாம்.
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்கள்:
Antonov An-225 Mriya:
Antonov An-225 Mriya உலகின் மிகப்பெரிய விமானம் என்று கூறப்படுகிறது. இந்த 1980 களில் உக்ரைனில் வடிவமைக்கப்பட்டது. இந்த விமானம் முக்கிய நோக்கம் கனமான மற்றும் பெரிய பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதாகும். இந்த விமானத்தின் பயணத்தை பற்றி பேசுகையில், 21 டிசம்பர் 1988 அன்று முதல்முறையாக வானில் பறந்தது. அதிகபட்சமாக 640 டன் எடையை சுமக்கும் திறன் கொண்ட இந்த விமானம், மணிக்கு 800 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடியது. இடைநிற்றலின்றி 15 ஆயிரத்து 400கிமீ தூரம் பயணிக்கும் திறன் கொண்டதாகும். 2022ம் ஆண்டு ரஷ்யாவின் தாக்குதலில் இந்த விமானம் அழிக்கப்பட்டது.
ஏர்பஸ் A380
ஏர்பஸ் ஏ380 உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் என்று கூறப்படுகிறது. பயணிகள் போக்குவரத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் சுமார் 800 பேர் பயணிக்கலாம். A380 விமானம் 27 ஏப்ரல் 2005 அன்று தனது பயணத்தை தொடங்கியது. அதிகபட்சமாக 575 டன் எடையை சுமக்கும் திறன் கொண்டுள்ளது. மணிக்கு 903 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடிய இந்த விமானம், இடைநிற்றலின்றி 14 ஆயிரத்து 800 கிமீ தூரத்திற்கு பயணிக்கும். இந்த ஒரு விமானத்தில் வில சுமார் ரூ.4,200 கோடி ஆகும்.
Antonov An-124 ரஷ்லன்
Antonov An-124 ஆனது Antonov An-225 க்குப் பிறகு இரண்டாவது பெரிய சரக்கு விமானமாகும். இது 1980களில் சோவியத் யூனியனால் உருவாக்கப்பட்டது. இது கனரக பொருட்களை எளிதாக ஏற்றி இறக்க அனுமதிக்கிறது. அதிகபட்சமாக 455 டன் எடையை சுமக்கும் திறன் கொண்டுள்ளது. மணிக்கு 865 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடிய இந்த விமானம், இடைநிற்றலின்றி 15 ஆயிரத்து 700 கிமீ தூரத்திற்கு பயணிக்கும்.
போயிங் 747-8
போயிங் 747-8 விமானம் 747 குடும்பத்தில் புதிய மற்றும் மிகப்பெரிய விமானமாகும். இந்த விமானம் பயணிகளுக்கும் சரக்குகளுக்கும் ஏற்றது. இந்த விமானத்தின் நீளம் 76.3 மீட்டர். அதன்படி, இதுவே மிக நீளமான பயணிகள் விமானம் ஆகும். இதில் ஒரே நேரத்தில் சுமார் 460 பயணிகள் பயணிக்கலாம். அதிகபட்சமாக 447 டன் எடையை சுமக்கும் திறன் கொண்டுள்ளது. மணிக்கு 1061.9 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடிய இந்த விமானம், இடைநிற்றலின்றி 13 ஆயிரத்து 650 கிமீ தூரத்திற்கு பயணிக்கும். இதன் விலை ரூ.3,300 கோடி ஆகும்.
லாக்ஹெட் சி-5 கேலக்ஸி
லாக்ஹீட் சி-5 கேலக்ஸி என்பது 1960-களில் அமெரிக்காவின் விமானப்படைக்காக வடிவமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானமாகும். அதிகபட்சமாக 381 டன் எடையை சுமக்கும் திறன் கொண்டுள்ளது. மணிக்கு 856 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடிய இந்த விமானம், இடைநிற்றலின்றி 8 ஆயிரத்து 900 கிமீ தூரத்திற்கு பயணிக்கும்.