Best Honda Bikes: பைக் சந்தையில் அசத்தும் ஹோண்டா நிறுவனம் - டாப் 5 மாடல்களின் லிஸ்ட் இதோ..!
Best Honda Bikes: பைக் சந்தையில் அசத்தும் ஹோண்டா நிறுவனத்தின் சிறந்த மாடல்கள் பற்றிய தகவல்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
Best Honda Bikes: பைக் சந்தையில் அசத்தும் ஹோண்டா நிறுவனத்தின், டாப் 5 மாடல்கள் பற்றிய விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஹோண்டா எஸ்பி 125:
ஹோண்டா SP 125 மாடலின் விலையானது 86 ஆயிரத்து 467 (எக்ஸ்-ஷோரூம்) ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதற்கு இணையாக இதில் பொருத்தப்பட்டுள்ள 124 cc திறன் கொண்டஇன்ஜின், லிட்டருக்கு 65கிமீ மைலேஜை வழங்குகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது மற்றும் 116 கிலோகிராம் எடை கொண்டது. எரிபொருள் டேங்க் ஆனது 11.2 லிட்டர் வரையிலான கொள்ளளவை கொண்டுள்ளது. ஹோண்டா SP 125 மாடலின் இருக்கை 790 மிமீ உயரத்தில் அமைந்துள்ளது.
ஹோண்டா ஷைன்:
ஹோண்டா ஷைன் மாடலின் விலை 80 ஆயிரத்து 250 ரூபாயில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இது 123.94 cc இன்ஜினை கொண்டு லிட்டருக்கு 55 கிமீ மைலேஜை வழங்குகிறது. இந்த பைக்கில் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. 113 கிலோகிராம் எடையிலான இந்த வாகனம், 10.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் பெற்றுள்ளது. ஹோண்டா ஷைன் மாடலின் இருக்கை உயரம் 791 மிமீ.
ஹோண்டா SP160:
ஹோண்டா SP 160 மாடல் மோட்டார்சைக்கிளின் விலை , ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் முதல் தொடங்குகிறது. இது 162.71 சிசி இன்ஜினைக் கொண்டுள்ளது மற்றும் லிட்டருக்கு 51 கிமீ மைலேஜை வழங்குகிறது. இந்த பைக் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனை கொண்டுள்ளது. 139 கிலோ எடையைக் கொண்டுள்ள இந்த வாகனம், 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கை பெற்றுள்ளது. ஹோண்டா SP 160 மாடல் மோட்டார்சைக்கிளானது 796 மிமீ உயர இருக்கையை கொண்டுள்ளது.
ஹோண்டா ஹார்னெட் 2.0:
ஹோண்டா ஹார்னெட் 2.0 விலை (எக்ஸ்-ஷோரூம்), ஒரு லட்சத்து 39 ஆயிரம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது 184.4 சிசி இன்ஜினை கொண்டு, லிட்டருக்கு 42.3 கிமீ மைலேஜை வழங்குவதாக ARAI-மதிப்பீடு வழங்குகிறது. இந்த பைக் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. 142 கிலோ எடையும், 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கையும் பெற்றுள்ளது. ஹோண்டா ஹார்னெட் 2.0 இருக்கை உயரம் 790 மிமீ ஆகும்.
ஹோண்டா யூனிகார்ன்:
ஹோண்டா யூனிகார்ன் மாடல் மோட்டார்சைக்கிளின் விலை (எக்ஸ்-ஷோரூம்), ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது 162.7 சிசி இன்ஜினைக் கொண்டுள்ளது மற்றும் லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வழங்குகிறது. இந்த பைக் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. 140 கிலோ கர்ப் எடையுடன், 13 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கையும் பெற்றுள்ளது. ஹோண்டா யூனிகார்ன் மாடல் இருக்கை உயரம் 798 மிமீ ஆகும்.