Electric Cycles: பைக்கிற்கே டஃப் கொடுக்கும் மின்சார சைக்கிள்கள் - இப்படி ஒரு மைலேஜா, டாப் 5 லிஸ்ட் இதோ..!
Electric Cycles: இந்திய சந்தையில் கிடைக்கும் அசத்தலான செயல்திறன் கொண்ட, மின்சார சைக்கிள்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Electric Cycles: இந்திய சந்தையில் கிடைக்கும் அசத்தலான செயல்திறன் கொண்ட, டாப் 5 மின்சார சைக்கிள்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
Tattvalabs SJ-X1
Tattvalabs SJ-X1 Unisex Electric Cycle ஆனது 250W ஆற்றலுடன் பின்புற ஹப் மோட்டார் மற்றும் 7.8Ah பேட்டரியைக் கொண்டுள்ளது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 50கிமீ தூரம் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. இதில் ஒரு நீக்கக்கூடிய 36V 13Ah Li-lon பேட்டரியும் இடம்பெற்றுள்ளது. S866 வண்ண LCD டிஸ்ப்ளே மற்றும் கீ இக்னிஷனுடன் வருகிறது. அமேசானில் தற்போது ரூ.23,599 என்ற விலையில் இந்த மின்சார சைக்கிள் கிடைக்கிறது.
EMotorad Doodle
EMotorad Doodle Fat-Tyre Foldable Mountain Electric Cycle தற்போது அமேசானில் ரூ.52,999 விலையில் கிடைக்கிறது. இது 12.75Ah நீக்கக்கூடிய பேட்டரி, USB சார்ஜிங் கொண்ட LCD டிஸ்ப்ளே மற்றும் 5 நிலை பெடல் அசிஸ்டண்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 250W BLDC மோட்டார் மற்றும் ஷிமானோ டூர்னி 7-ஸ்பீடு கியர் அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 25கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் பெற்றுள்ளது.
ஹீரோ எலக்ட்ரோ C4E 700C
ஹீரோ லெக்ட்ரோ C4E 700C சிங்கிள் ஸ்பீட் சிட்டி ஹைப்ரிட் எலக்ட்ரிக் சைக்கிள் 250W பின்புற ஹப் மோட்டார் மற்றும் 5.8Ah லித்தியம்-அயன் பேட்டரியைக் கொண்டுள்ளது. நான்கு ரைடிங் மோடுகள், டூயல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் 700சி வீல்கள் கொண்ட ஸ்மார்ட் எல்இடி டிஸ்ப்ளே போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. கூடுதல் சிறப்பம்சங்களாக IP67-ரேட்டட் பேட்டரி மற்றும் ஆன்டி-ஸ்கிட் பெடல்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அமேசானில் தற்போது ரூ.37,499க்கு கிடைக்கிறது.
சினெர்ஜி பி1
SYNERGY B1 எலக்ட்ரிக் சைக்கிள் தற்போது அமேசானில் ரூ.22,399க்கு கிடைக்கிறது. இது இரட்டை டிஸ்க் பிரேக்குகள், 250W BLDC மோட்டார் மற்றும் 5.8Ah Li-lon பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சைக்கிளானது 95 சதவிகித சார்ஜருடன் அசெம்பிள்ட் வடிவத்தில் வருகிறது. பேட்டரி இண்டிகேட்டரை கொண்ட த்ரோட்டில் இடம்பெற்றுள்ளது. மேலும் சிவப்பு நிறத்தில் கிடைக்கிறது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், 15 கிமீ மைலேஜ் வாங்குகிறது.
EMotorad X1
EMotorad X1 ஆனது 250W ரியர் ஹப் மோட்டார் மற்றும் 7.65Ah நீக்கக்கூடிய பேட்டரியைக் கொண்டுள்ளது, அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தை வழங்குகிறது. இது மெக்கானிக்கல் டிஸ்க் பிரேக்குகள், முன் சஸ்பென்ஷன் மற்றும் 27.5" வீல்களுடன் வருகிறது. 2A சார்ஜர் மூலம் 4-5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யப்படுகிறது. பெடல் அசிஸ்டில் 35-40 கிமீ அல்லது த்ரோட்டில் முறையில் 30 கிமீ தூரம் வரை செல்லும். இது தற்போது அமேசானில் ரூ.24,996 என்ற விலையில் கிடைக்கிறது.