Royal Enfield Price Range: ரூ.1.5 லட்சத்தில் தொடங்கும் ராயல் என்ஃபீல்ட் பைக் - மொத்த மாடலும், விலை விவரங்களும்!
Royal Enfield Price Range: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் மொத்த மாடல் விவரங்களும், அதன் விலைகளும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Royal Enfield Price Range: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் எண்ட்ரில் லெவல் பைக் மாடலின் விலையே ரூ.1.5 லட்சமாக உள்ளது.
ராயல் என்ஃபீல்ட் :
எத்தனை தலைமுறை மாறினாலும் சரி! பைக் பிரியர்கள் மத்தியில் தொடர்ந்து எதிர்பார்ப்புகளை தக்கவைத்துள்ள ஒரே பைக் ராயல் என்ஃபீல்ட். குறிப்பாக இந்தியாவில் இதற்கான மவுசு அதிகம். அதற்கு ஏற்ப அந்த நிறுவனமும் புதிய மாடல் மோட்டர் பைக்குகளை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. உண்மையில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில், ராணுவ வீரர்கள் பயன்பாட்டுக்கான பைக்குகளை தயாரிக்க ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் தான் ராயல் என்ஃபீல்ட். அதைதொடர்ந்து, பிரமாண்ட வளர்ச்சி கண்டுள்ள அந்நிறுவனம், 300சிசி மற்றும் அதற்கு மேம்பட்ட செக்மெண்டில் இந்தியாவில் தொடர்ந்து கோலோச்சி வருகிறது.
300 சிசி செக்மெண்டில் அசத்தல்:
கம்யூட்டர், க்ரூஸர், அட்வென்ச்சர் ஆஃப் ரோடு மற்றும் 650சிசி பிரிவுகளில் பலதரப்பட்ட மோட்டார்சைக்கிள்களை வழங்கி வரும் ராயல் என்ஃபீல்டிற்கு, கிளாசிக் 350 அதிக விற்பனையாகும் மாடலாக உள்ளது. மலிவு விலையில் ஹண்டர் 350, புல்லட் 350 மற்றும் மீடியோர் 350 ஆகிய மாடல்கள் பிரபலமான தேர்வுகளாக உள்ளது.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹிமாலயன் 450 குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. 650சிசி பிரிவில் ராயல் என்ஃபீல்டு மூன்று மோட்டார்சைக்கிள்களை வழங்குகிறது. அந்த வகையில் இந்திய சந்தையில் கிடைக்கும் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் குறைந்தபட்ச விலையிலான பைக் தொடங்கி, அதிகபட்ச விலை வரையிலான பைக்கின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
பைக் மாடல்களும், விலை விவரங்களும்:
1. Classic 350: இந்த மாடலின் விலை 1.93 லட்சம் தொடங்கி2.25 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த மற்றும் நல்ல மைலேஜுடன் கூடிய வாகனத்தை எதிர்பார்ப்பவர்களுக்கான நல்ல தேர்வாகும்.
2. Hunter 350: இளைஞர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஹண்டர் 350 மாடலின் விலை 1.50 லட்சம் தொடங்கி 1.75 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. Super Meteor 650 (Cruiser): இதன் விலை 3.61 லட்சம் தொடங்கி 3.91 லட்ச ரூபாய் வரையில் மாறுபடுகிறது. தற்போதைய சூழலில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் விலை உயர்ந்ததாக தயாரிப்பாக இந்த மாடல் உள்ளது. இருப்பினும் இது சக்திவாய்ந்த பயண அனுபவத்தை வழங்குகிறது.
4. Bullet 350: இந்த ஆண்டு மேம்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, புதிய Bullet 350 இன் விலை 1.74 லட்சம் தொடங்கி 2.16 லட்ச ரூபாய் வரை உள்ளது.
5. Scram 411: இந்த மாடலுக்கான விலை 2.06 லட்சத்தில் தொடங்கி 2.12 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாகச ஆர்வலர்களுக்கு Scram 411 சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது.
6. Continental GT 650: 3.19 லட்சம் தொடங்கி 3.45 லட்ச ரூபாய் வரையிலான விலையை கொண்டுள்ள கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள் கிளாசிக் ஸ்டைலிங் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்துகிறது.
7. Interceptor 650: 3.03 லட்சம் தொடங்கி 3.31 லட்ச ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கும் Interceptor 650 ஆனது, கிளாசிக் வடிவமைப்பு மற்றும் நவீன அம்சங்களின் கலவையை வழங்குகிறது.
ராயல் என்ஃபீல்டு சமீபத்தில் ஷாட்கன் 650 எனும் வலிமையான பாபர்-ஸ்டைல் மோட்டார் சைக்கிளை வெளியிட்டது, இதன் விலை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.