Kawasaki Eliminator 500: இந்தியாவில் அறிமுகமானது கவாசகி எலிமினேட்டர் 500 மோட்டர் சைக்கிள்- விலை இத்தனை லட்சங்களா?
Kawasaki Eliminator 500: கவாசகி நிறுவனத்தின் புதிய எலிமினேட்டர் 500 மோட்டார்சைக்கிள் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
Kawasaki Eliminator 500: கவாசகி நிறுவனத்தின் புதிய எலிமினேட்டர் 500 மோட்டார்சைக்கிளின் விலை, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ரூ.5.62 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கவாசகி எலிமினேட்டர் 500:
ஜப்பானைச் சேர்ந்த இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கவாசகி, கடந்த ஆண்டின் மையப்பகுதியில் எலிமினேட்டர் 500 மோட்டார்சைக்கிள் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியது. அதைதொடர்ந்து, தற்போது அந்த வாகனத்தை இந்திய சந்தைக்கும் கொண்டு வந்துள்ளது. இதன் விலை இந்திய சந்தையில் 5 லட்சத்து 62 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் கவாசகி எலிமினேட்டர் 500 மாடல் இறுதி வடிவம் பெறுவதால், அதன் விலை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாடலானது சமீபத்தில் வெளியான ராயல் என்ஃபீல்ட் ஷாட்கன் 650 மற்றும் பெனெல்லி 502C ஆகிய மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமைகிறது. நாடு முழுவதிலும் உள்ள அந்நிறுவனத்தின் டீலர்ஷிப்களில், இதற்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
வடிவமைப்பு விவரம்:
Thei Eliminator 500 ஆனது பின்புறத்தில் இரட்டை ஷாக்குகளுடன் (dual shocks) புத்தம் புதிய சேஸ்ஸைப் பெற்றுள்ளது. இது, மோனோஷாக்கை பயன்படுத்தும் அதன் இணை மாடலான வல்கன் 650 உடன் ஒப்பிடும்போது, கவாசகி எலிமினேட்டர் மாடலுக்கு ஓல்ட் ஸ்கூல் க்ரூஸர் தோற்றத்தைக் கொடுக்கிறது. அதேநேரம் வல்கனைப் போலவே, இது ஒரு நீளமான மற்றும் உஅயரம் குறைந்த மோட்டார் சைக்கிள் ஆகும். இது பெரிய 18 அங்குல முன் சக்கரத்தையும் கொண்டுள்ளது. ஆனால், வல்கனின் 17 இன்ச் வீலுடன் ஒப்பிடும்போது எலிமினேட்டர் 16 இன்ச் பின் சக்கரத்தைப் பெறுகிறது. பிரேக்கிங் முன்புறத்தில் ஒரு 310மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240மிமீ டிஸ்க் மூலம் கையாளப்படுகிறது. இரட்டை சேனல் ஏபிஎஸ் ஸ்டேண்டர்டாக இருக்கும்.
எலிமினேட்டர் 500 அதன் குறைந்தபட்ச இருக்கை உயரமான 734 மிமீ மூலம் உயரம் குறைந்த ரைடர்களை ஈர்க்கும். கவாஸாகி வல்கன் 650 போலவே, இந்த மோட்டார்சைக்கிளிலும் கவாஸாகியின் எர்கோ-ஃபிட் சிஸ்டம் உள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு ஹேண்டில்பார் மற்றும் ஃபுட் பெக் செட்-அப்களை தேர்வு செய்ய வாய்ப்பளிக்கிறது. 150 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் 176 கிலோ எடை கொண்டுள்ளது. வட்டவடிவ எல்.ஈ.டி. முகப்பு விளக்குகளுடன், ஸ்பீடோ மீட்டர், எரிபொருள் அளவு, டேகோமிட்டர், கூலண்ட் வெப்பநிலை, கிய பொசிஷன் இண்டிகேட்டர் போன்றவற்றை உள்ளடக்கிய எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலையும் கொண்டுள்ளது.
இன்ஜின் விவரம்:
கவாஸாகி நிஞ்ஜா 400 மாடலின் இன்ஜினிலிருந்து மேம்படுத்தப்பட்ட புதிய 451சிசி பேரலல் ட்வின் மோட்டாரை கவாசகி எலிமினேட்டர் 500 அறிமுகப்படுத்துகிறது. இந்த மோட்டார் 6.8மிமீ நீளமான ஸ்ட்ரோக், பெரிய ஏர்பாக்ஸ் மற்றும் பெரிய 32மிமீ த்ரோட்டில் பாடியை கொண்டுள்ளது.நிஞ்ஜா 400 மாடலை விட அதிக டார்க் மற்றும் சிறந்த ரைடிபிலிட்டியை உருவாக்கும் வகையில் கவாசகி நிறுவனம் புதிய இன்ஜினை உருவாக்கியுள்ளது. அதேநேரம், இந்த மாடலின் அதிகபட்ச வேகம் என்பது சற்று குறைவாகவே உள்ளது. அதிகபட்ச ஆற்றலாக 9,000ஆர்பிஎம்மில் 45எச்பி ஆகவும், அதிகபட்ச டார்க்காக 6,000ஆர்பிஎம்மில் 42.6என்எம் ஆகவும் உருவாகிறது. இந்த இன்ஜின் சமீபத்தில் EICMA 2023 இல் புதிய நிஞ்ஜா கவாஸாகி 500 மற்றும் Z500 இல் அறிமுகமானது . ஸ்லிப்/அசிஸ்ட் கிளட்ச் மூலம் சிக்ஸ் ஸ்பீட் கியர்பாக்ஸ் வழியாக பின்புற சக்கரத்திற்கு சக்தி அனுப்பப்படுகிறது.