Costly Cars Mileage: வாயை பிளக்க வைக்கும் சொகுசு கார்களின் விலை - ஆனால் மைலேஜ் இவ்வளவு தானா?
Costly Cars Mileage: இந்திய சந்தையில் கிடைக்கும் விலையுயர்ந்த கார்களும் அவற்றின், மைலேஜ் விவரங்களும் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
Costly Cars Mileage: இந்திய சந்தையில் கிடைக்கும் விலையுயர்ந்த கார்களின் மைலேஜ் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சொகுசு கார்கள்:
இந்திய சந்தையில் எண்ட்ரீ லெவலில் தொடங்கி பல்வேறு விதமான கார் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதேநேரம், விலையை கேட்டாலே வாயை பிளக்கச் செய்யும் வகையிலான, பல்வேறு சொகுசு கார்களும் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அந்த கார்கள் வழங்கும் மைலேஜோ உங்களை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அந்த வகையில் இந்திய சந்தையில் கிடைக்கும் விலையுயர்ந்த கார்களும், அவற்றின் மைலேஜ் விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளன.
7. ஃபெராரி 296 ஜிடிபி:
ஃபெராரி 296 GTB 3.0L ட்வின் டர்போ V6 இன்ஜினைக் கொண்ட, ஒரு ஹைப்ரிட் சூப்பர் கார் ஆகும். ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் இணைந்து 831 bhp மற்றும் 740 Nm ஆற்றலைஉருவாக்குகிறது. சென்னையில் இதன் விலை சராசரியாக ரூ.5.40 கோடி. ஆனால், இது லிட்டருக்கு 8.90கிமீ மைலேஜை மட்டுமே வழங்குகிறது.
6.மெக்லாரன் 7505
McLaren 750S கார் மாடலானது 740 bhp மற்றும் 800 Nm ஆற்றலை உற்பத்தி செய்யும், 4.0L ட்வின் டர்போ V8 இன்ஜினை பெற்றுள்ளது. இது McLaren 720S இன் தொடர்ச்சியாகும். 5 கோடியே 91 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் இந்த காரானது, லிட்டருக்கு 10.5 கிமீ மைலேஜ் மட்டுமே வழங்குகிறது.
5. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் தான் அந்த நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் கிடைக்கும், மலிவான மற்றும் சிறிய காராக இருக்கிறது. ஆனாலும் ஆடம்பரங்களுக்கு எந்த குறையும் இருக்காது. ஒரு பெரிய 6.75L ட்வின் டர்போ V12 இன்ஜின் இந்த காரில் இடம்பெற்றுள்ளது. இதன் விலை 6.95 கோடி ரூபாய் தொடங்கி, அதிகபட்சமாக 7.95 கோடி ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கார் லிட்டருக்கு வெறும் 8.4 லிட்டர் மைலேஜை மட்டுமே வழங்குகிறது.
ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்ஸ்க்:
ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிரிட்டிஷ் சொகுசு கார் உற்பத்தியாளரின் முதல் சொகுசு SUV ஆகும். கல்லினன் காரின் விலை ரூ. 6.95 கோடி. ஆனால், ஒரு லிட்டருக்கு வெறும் 6.6 கிமீ மைலேஜை மட்டுமே இந்த கார் வழங்குகிறது.
ஃபெராரி SF90:
ஃபெராரி SF90 ஆனது ஃபெராரியின் லைன் மிட்-இன்ஜின் சூப்பர் காரில் முதலிடம் வகிக்கிறது. இதில் வழங்கப்பட்டுள்ள ஹைப்ரிட் ட்வின் டர்போ V8 இன்ஜின் ஆனது, 986 bhp மற்றும் 800 Nm ஆற்றலை உற்பத்தி செய்யும். 7.50 கோடி ரூபாயை விலையாக கொண்டுள்ள இந்த காரானது, லிட்டருக்கு 18கிமீ மைலேஜாக வழங்குகிறது.
லம்போர்கினி ரெவல்டோ:
லம்போர்கினி Revuelto தற்போதைய தலைமுறைக்கான போஸ்டர் காராகும். 1,001 bhp மற்றும் 725 Nm டார்க் ஆகிய ஒருங்கிணைந்த ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட, ஹைப்ரிட் V12 இன்ஜின் இதில் இடம்பெற்றுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ 8.90 கோடியாக உள்ளது. இது லிட்டருக்கு 10கிமீ மைலேஜ் வழங்குகிறது.
ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம்:
ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் தான் தற்போது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனையாகும் மிக விலையுயர்ந்த கார் மாடலாகும். இதன் ஆரம்ப விலை ரூ 9 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், லிட்டருக்கு 7.1 கிமீ மைலேஜ் மட்டுமே வழங்குகிறது.