MG Comet EV: : மீண்டும் மீண்டுமா.. வேலையை காட்டும் எம்.ஜி நிறுவனம்.. காமெட் EV காரின் விலை உயர்வு ..முழு விவரம்
MG Comet EV Price Hike: சில மாதங்களுக்கு முன்பு எம்.ஜி நிறுவனம் கமெட் இ.வி காரின் விலையை ஏற்றியிருந்தது, தற்போது மீண்டும் விலையை உயர்த்தியுள்ளது கார் பிரியர்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது

எம்.ஜி மோட்டர்ஸ் நிறுவனத்தின் மிக குறைந்த எலக்ட்ரிக் கார் ஆன எம்.ஜி காமெட் ஈ.வி அதன் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. புதிய விலை உயர்வுக்குப் பின்பும், இந்தியாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக கருதப்படும் எம்.ஜி கமெட் இ.வி காரின் விலை விவரங்களை காணலாம்.
எந்தெந்த வகை.. எவ்வளவு உயர்வு?
இந்தியாவில் எம்.ஜி நிறுவனத்தில் மிக மலிவான மின்சார கார் என அறியப்படும் காமெட் ஈ.வி , தற்போது Executive, Excite, Exclusive மற்றும் Blackstorm Edition என நான்கு வகைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எக்ஸிக்யூட்டிவ்( பேஸ் வேரியண்ட் ) விலை 14,300 வரை உயர்ந்தும் எக்ஸைட் & எக்ஸ்க்ளூஸிவ் தலா ₹15,000 வரை உயர்ந்தும்
Blackstorm Edition (டாப் வேரியண்ட்): ₹13,700 உயர்ந்தும் உள்ளது.
இதன் மூலம், MG Comet EV இப்போது ₹7.50 லட்சம் முதல் ₹10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இந்த கார்களானது விற்கப்படவுள்ளது. வேரியண்ட் வாரியாக இந்த காரின் விலையை கீழே காணலாம்
- எக்ஸிக்யூட்டிவ் - ரூ.7.50 லட்சம்
- எக்ஸைட் - ரூ.8.57 லட்சம்
- எக்ஸைட் FC - ரூ.8.97 லட்சம்
- எக்ஸ்க்ளூஸிவ் - ரூ.9.56 லட்சம்
- எக்ஸ்க்ளூஸிவ் FC - ரூ.9.97 லட்சம்
- பிளாக்ஸ்டார்ம் எடிசன் - ரூ.10 லட்சம்
மேலே உள்ள கார்களின் விலை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையே குறிக்கும்.
காரின் சிறப்பம்சங்கள்:
க்ரோம் இன்சர்ட்கள், ஸ்டீல் வீல்கள், வீல் கவர்கள், பின்புற பம்பரில் நம்பர் பிளேட், ஹை மவுண்ட் செய்யப்பட்ட ஸ்டாப் லேம்ப் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. வெளிப்புற டிசைனை பொருத்தவரை கொமெட் மின்சார காரில் செங்குத்தான எல்.ஈ.டி. முகப்பு விளக்குகள், எல்.ஈ.டி பின்புற விளக்குகள், டிஆர்எல்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட இண்டிகேட்டர்கள், டூயல் டோன் முன்புற பம்பர் மற்றும் சார்ஜிங் போர்டின் மேல் எல்.ஈ.டி லைட் பார் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சக்திவாய்ந்த பேட்டரி, நல்ல ரேஞ்ச்
கமெட் EV-யில் 17.3 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் இணைக்கப்பட்டுள்ள எலெக்ட்ரிக் மோட்டார், 42 ஹார்ஸ்பவர் பவரும், 110 என்எம் டார்க்கும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ஒருமுறை முழுச்சார்ஜில், இந்த வாகனம் சுமார் 230 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என MG நிறுவனம் தெரிவிக்கிறது.
விரைவான சார்ஜிங் வசதி
இக்காரின் பேட்டரியை 7.4 kW AC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் மூன்றரை மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யலாம். இதனால், தினசரி பயன்படுத்தும் வாகனமாக, காமெட் EV நல்ல தேர்வாக இருக்கிறது.
ஏற்கெனவெ கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்.ஜி நிறுவனம் கமெட் இ.வி காரின் விலையை ஏற்றியிருந்தது, தற்போது மீண்டும் விலையை உயர்த்தியுள்ளது கார் பிரியர்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது.






















