Hyundai Venue vs Kia Syros இரண்டில் பெஸ்ட் கார் எது? விலை, மைலேஜ், தரம் கம்பேரிசன்!
Hyundai Venue மற்றும் Kia Syros கார்களுக்கு இடையேயான விலை, தரம், மைலேஜ் ஆகியவற்றை வைத்து இந்த இரண்டில் எது சிறந்த கார்? என்று ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று ஹுண்டாய். அதேபோல, கியா நிறுவனமும் இந்தியாவில் முன்னணி கார் நிறுவனமாக திகழ்கிறது. இந்த இரு நிறுவனங்களும் பல்வேறு கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், ஹுண்டாய் நிறுவனத்தின் வெற்றிகரமான கார் Hyundai Venue ஆகும். அதேபோல, கியா நிறுவனத்தின் வெற்றிகரமான கார்களில் ஒன்று Kia Syros ஆகும். இந்த இரண்டு காரில் எந்த கார் வாங்கலாம்? எந்த கார் சிறந்த கார்? என்பதை கீழே விரிவாக காணலாம். இதன் தரம், மைலேஜ், விலை ஒப்பீடு செய்து காணலாம்.
விலை:
Hyundai Venue காரின் தொடக்க விலை ரூபாய் 9.47 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 19.56 லட்சம் ஆகும்.
Kia Syros காரின் தொடக்க விலை ரூபாய் 10.22 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 19.65 லட்சம் ஆகும்.
எஞ்ஜின்:
Hyundai Venue காரில் 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 4 சிலிண்டர்கள் இன்லைன், 4 வால்வ்ஸ் உள்ளது. காப்பா 1.2 லிட்டர் MPi எஞ்ஜின் ரகம் ஆகும். பெட்ரோலில் ஓடும் ஆற்றல் கொண்டது. 82 பிஎச்பி குதிரை ஆற்றல் கொண்டது. 6 ஆயிரம் ஆர்பிஎம் திறன் கொண்டது. 114.7 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. BS6 ரகம் ஆகும்.
Kia Syros காரில் 998 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 3 சிலிண்டர் இன்லைன் உள்ளது. ஸ்மார்ட்ஸ்ட்ரீம் G1.0T-GDi எஞ்ஜின் ரகம் ஆகும். டர்போசார்ஜ்ட் வசதி கொண்டது. 118 பிஎச்பி குதிரை ஆற்றல் கொண்டது. 6 ஆயிரம் ஆர்பிஎம் திறன் கொண்டது. 172 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. BS6 ரகம் ஆகும்.
கியர்கள்:
Hyundai Venue மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வசதி கொண்டது. மேனுவலில் 5 கியர்கள் கொண்டது.
Kia Syros மேனுவலில் 6 கியர்கள் கொண்டது.
மைலேஜ்:
Hyundai Venue கார் லிட்டருக்கு 18.5 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. Idle ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதி இதில் இல்லை.
Kia Syros கார் லிட்டருக்கு 18.2 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. Idle ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதி இதில் உண்டு.
இருக்கை, பெட்ரோல் டேங்க் வசதி:
Hyundai Venue காரில் 2 வரிசைகளாக 5 இருக்கைகள் உள்ளது. 5 கதவுகள் உள்ளது. 375 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. 45 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதி கொண்டது.
Kia Syros காரில் 2 வரிசைகளாக 5 இருக்கைகள் உள்ளது. 5 கதவுகள் உள்ளது. 390 லிட்டர் டிக்கி வசதி உள்ளது. 45 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதி உள்ளது.
பாதுகாப்பு:
Hyundai Venue காரில் என்சிஏபி தர பரிசோதனை மேற்கொள்ளவில்லை. 6 ஏர்பேக்குகள் உள்ளது. ஓட்டுனர், முன் இருக்கை பயணி, 2 கர்டைன், ஓட்டுனர் பக்கம், முன் இருக்கை பயணி பக்கவாட்டில் இவை உள்ளது. 80 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் சென்றால் 1 பீப் சத்தம் வரும். 120 கிலோமீ்ட்டர் வேகத்திற்கு மேல் சென்றால் தொடர்ந்து பீப் சத்தம் வரும். ரிவர்ஸ் கேமரா இல்லை.
Kia Syros கார் Bharat NCAP தர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த காரில் 6 ஏர்பேக்குகள் உள்ளது. ஓட்டுனர், முன்பக்க பயணி, 2 கர்டைன், ஓட்டுனர் பக்கவாடு, முன்பக்க பயணி பக்கவாட்டில் இந்த ஏர்பேக்குகள் உள்ளது. 80 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் சென்றால் 1 பீப் சத்தம் வரும். 120 கிலோமீ்ட்டர் வேகத்திற்கு மேல் சென்றால் தொடர்ந்து பீப் சத்தம் வரும். ரிவர்ஸ் கேமரா உள்ளது.
கேபின்:
Hyundai Venue காரில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே உள்ளது. 4 ஸ்பீக்கர்கள் உள்ளது. ப்ளூடூத் கனெக்ஷன் மூலமாக செல்போன் அழைப்பு பேசலாம். குரல் கட்டளை வசதி உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது.
Kia Syros காரில் 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே உள்ளது. 4 ஸ்பீக்கர்கள் உள்ளது. ப்ளூடூத் கனெக்ஷன் மூலமாக செல்போன் அழைப்பு பேசலாம். குரல் கட்டளை வசதி இல்லை. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது.
வண்ணங்கள்:
Hyundai Venue கார் மொத்தம் 8 வண்ணங்களில் உள்ளது.
Kia Syros கார் மொத்தம் 8 வண்ணங்களில் உள்ளது.
இந்த தரவுகளை ஒப்பிட்டு உங்கள் பட்ஜெட்டிற்கு ஏதுவான காரை வாங்கலாம்.





















