(Source: ECI | ABP NEWS)
Hyundai Car Discounts: இதுதான் தள்ளுபடி.. ரூபாய் 7.5 லட்சம் தீபாவளி ஆஃபர் தந்த ஹுண்டாய் - எந்த காருக்கு?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹுண்டாய் நிறுவனம் தனது கார்களுக்கு ரூபாய் 7.5 லட்சம் வரை தள்ளுபடி அளித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று ஹுண்டாய். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு நிறுவனமும் தங்களது கார்களுக்கு தள்ளுபடி அளித்து வருகிறது. அதேபோல, ஹுண்டாய் நிறுவனம் தனது முக்கிய கார்களுக்கு தள்ளுபடி அளித்துள்ளது.
எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை தள்ளுபடி? என்பதை கீழே காணலாம்.
1. Grand i10 Nios - ரூ.75 ஆயிரம்:
ஹுண்டாய் நிறுவனத்தின் முக்கிய படைப்பாக Grand i10 Nios கார் உள்ளது. இந்த காருக்கு ரொக்கமாக ரூபாய் 30 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி அளித்துள்ளனர். எக்சேஞ்ச் ரூபாய் 45 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர். மொத்தமாக ரூபாய் 75 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர். இந்த கார் ரூபாய் 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. 5 கியர்களை கொண்டது. இது ஹேட்ச்பேக் கார் ஆகும்.
2. Aura - ரூ.58 ஆயிரம்:
ஹுண்டாய் நிறுவனத்தின் பிரபலமான Aura காருக்கும் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. ரொக்கமாக ரூபாய் 25 ஆயிரம் அளித்துள்ளனர். எக்சேஞ்ச் தள்ளுபடியாக ரூபாய் 33 ஆயிரம் அளித்துள்ளனர். மொத்தமாக ரூபாய் 58 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர். செடான் காரை 1.2 லிட்டர் எஞ்ஜினை கொண்டது. 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 5 கியர்களை கொண்டது ஆகும்.
3. Exter-ரூபாய் 45 ஆயிரம்

ஹுண்டாய் நிறுவனத்தின் முக்கியமான படைப்புகளில் ஒன்று Exter கார் ஆகும். இந்த காருக்கு ரொக்கமாக ரூபாய் 20 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர். எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 25 ஆயிரம் அளித்துள்ளனர். மொத்தமாக ரூபாய் 45 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர். எஸ்யூவி ரக காரான இந்த கார் 5 சீட்டர்களை கொண்டது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் ஓடும் ஆற்றல் கொண்டது.
4. i20 & N Line:
ஹுண்டாய் நிறுவனத்தில் i20 & N Line காருக்கு மொத்தமாக ரூபாய் 55 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர். ரொக்கமாக ரூபாய் 15 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர். எக்சேஞ்ச் ஆஃபராக 40 ஆயிரம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. ஹேட்ச்பேக் ரக காரான இந்த கார் 5 சீட்டர் ஆகும். பெட்ரோலில் ஓடும் ஆற்றல் கொண்டது. 1197 சிசி திறன் கொண்ட கார் ஆகும்.
5. Venue & N Line:
ஹுண்டாய் நிறுவனத்தின் Venue காருக்கு ரொக்கமாக ரூபாய் 15 ஆயிரம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 35 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூபாய் 50 ஆயிரம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. எஸ்யூவி ரகமான இந்த கார் 5 சீட்டர் ஆகும். 1197 சிசி திறன் கொண்டது ஆகும்.
6. Verna:
ஹுண்டாய் நிறுவனத்தின் Verna காருக்கு ரூபாய் 20 ஆயிரம் ரொக்கமாகவும், எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 35 ஆயிரமாகவும் என மொத்தம் ரூபாய் 55 ஆயிரம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. செடான் ரகமான இந்த கார் 1482 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது ஆகும். பெட்ரோலில் ஓடும் ஆற்றல் கொண்டது.
7. Creta:

ஹுண்டாய் நிறுவனத்தின் Creta காரின் ரூபாய் 5 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த ரூபாய் 5 ஆயிரமும் எக்சேஞ்ச் ஆஃபராக வழங்கப்பட்டு்ள்ளது. எஸ்யூவி ரகத்தைச் சேர்ந்த இந்த கார் 5 பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
8. Alcazar FL:
ஹுண்டாயின் Alcazar FL காருக்கு மொத்தமாக ரூபாய் 1.45 லட்சம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ரொக்கமாக ரூபாய் 60 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 85 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
9.IONIQ 5:
ஹுண்டாயின் சொகுசு கார் IONIQ 5 கார் ஆகும். இந்த காருக்கு ரொக்கமாக ரூபாய் 7 லட்சம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. ரொக்கமாக ரூபாய் 7 லட்சமும், எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 5 ஆயிரமும் என மொத்தம் ரூபாய் 7.05 லட்சம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.





















