Budget Cars: நா வந்துட்டேன்..! லோ பட்ஜெட்டில் டேக்ஷி கார்கள்.. 2 மாடல்களுடன் எண்ட்ரி கொடுத்த ஹுண்டாய், 28KM/KG
Hyundai i10 & Aura Taxi Versions: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் i10 மற்றும் ஆரா அடிப்படையிலான, டேக்ஷி எடிஷன் கார்களை ஹுண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Hyundai i10 & Aura Taxi Versions: i10 மற்றும் ஆரா அடிப்படையிலான, டேக்ஷி எடிஷன் கார்களின் விலை ரூ.5.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹுண்டாய் டேக்ஷி கார்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ப்ரைம் டேக்ஷி ரேஞ்ச் கார்களை அறிமுகப்படுத்தி, வணிக வாகனங்களுக்கான பிரிவில் ஹுண்டாய் நிறுவனம் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. உடனடியாக கைக்கு கிடைப்பது, மலிவான பட்ஜெட் மற்றும் நன்கு உழைக்கும் திறன் ஆகியவற்றை கருத்தில் கொள்ளும் டேக்ஷி ஆப்ரேட்டர்கள் மற்றும் வாடகை கார் உரிமையாளர்களை இலக்காக வைத்து ஹுண்டாய் நிறுவனம் தனது மாடல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி ஹேட்ச்பேக் அடிப்படையிலான ப்ரைம் க்ராண்ட் ஐ10 மற்றும் செடான் அடிப்படையிலான ப்ரைம் ஆரா ஆகிய கார் மாடல்களின் டேக்ஷி எடிஷன்களை ஹுண்டாய் சந்தைப்படுத்தியுள்ளது.
ஹுண்டாய் டேக்ஷி - இன்ஜின் விவரங்கள்:
இரண்டு மாடல்களின் ஸ்டேண்டர்ட் எடிஷன்களை போலவே, புதிய ப்ரைம் ஹேட்ச்பேக் மற்றும் ப்ரைம் செடானிலும் 1.2 லிட்டர் கப்பா 4 சிலிண்டர் செட்-அப் வழங்கப்பட்டுள்ளது. இதிலும் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி சிலிண்டர் ஆப்ஷனும் உள்ளது. ஹுண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த பவர்ட்ரெயின் ஆப்ஷன்களானது தினமும் அதிகளவில் ஓடுவதோடு, குறைந்த இயக்க செலவுகளையும் கவனத்தில் கொள்கிறது. மேலும், வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களில் எதிர்பார்க்கப்படும் நீண்டகால உழைப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.
ஹுண்டாய் டேக்ஷி - மைலேஜ் விவரங்கள்
உற்பத்தியின் போதே அதிகபட்சமாக மணிக்கு 80 கிலோ மீட்டர் என்ற அளவிலான வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாங்கும்போதே வணிக பயன்பாட்டு வாகனங்களுக்கான விதிகளை இந்த கார்கள் பூர்த்தி செய்கின்றன. ப்ரைம் செடான் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 28.40 கிலோ மீட்டரும், ப்ரைம் ஹேட்ச்பேக் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 27.32 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த இரண்டு கார்களுக்கும் ஒரு கிலோ மீட்டருக்கான இயக்க செலவு என்பது 47 பைசா மட்டுமே என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ப்ரைம் ரேஞ்ச் கார்கள் இரண்டையும், வருவாய் உற்பத்தியாளராகவும், முழு நேர டேக்ஷி ஆப்ரேட்டர்களாகவும் ஹுண்டாய் நிலைநிறுத்தியுள்ளது.
ஹுண்டாய் டேக்ஷி - வசதிகள், அம்சங்கள்
வழக்கமாக பட்ஜெட் அடிப்படையிலான வணிக வாகனங்களில் சமரசம் செய்துகொள்ளப்படும் பாதுகாப்பு மற்றும் சொகுசு அம்சங்களிலும் ஹுண்டாய் கவனம் செலுத்தியுள்ளது. இரண்டு மாடல்களிலும் 6 ஏர் பேக்குகள், ரியர் ஏசி வெண்ட்கள், முன் மற்றும் பின்புற பவர் விண்டோஸ், ரியர் பார்கிங் சென்சார்கள், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், த்ரீ பாயிண்ட் சீட்-பெல்ட்ஸ் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. வசதிகளை கருத்தில் கொண்டால் ஹைட் அட்ஜெஸ்டபள் சீட்டிங், ஸ்டியரிங் மவுண்டட் ஆடியோ கன்ட்ரோல்ஸ், ஃபூட்வெல் லைட்டிங், டைப் சி யுஎஸ்பி ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
மேலும் வாகனத்தை வணிக பயன்பாட்டிற்கானதாக மாற்றும் வகையில், சில கூடுதல் அக்செசரிஸ்களையும் ஹுண்டாய் நிறுவனம் வழங்குகிறது. அதன்படி, வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் கூடிய 9 இன்ச் டச்-ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ரியர் கேமரா, 4 பேனிக் பட்டன்களுடன் கூடிய வாகனத்தின் இருப்பிடத்தை அறிய உதவும் ட்ராக்கிங் டிவைஸ் ஆகியவையும் அடங்கும்.
ஹுண்டாய் டேக்ஷி - விலை விவரங்கள்
ஹுண்டாய் தனது டேக்ஷி கார்களுக்கு 5 வருடங்கள் அல்லது ஒரு லட்சத்து 80 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரையிலான, நீட்டிக்கப்பட்ட வாரண்டி கவரேஜை வழங்குகிறது. 72 மாதங்கள் வரையில் மாதத்தவணையாக செலுத்தும் எளிமையாக வழிமுறை, அனுபவம் வாய்ந்த வாடகை கார் தொடர்பான ஆலோசகர்களை ஷோரூமில் அணுகும் வசதி ஆகியவற்றிற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. வெறும் ரூ.5 ஆயிரத்தை செலுத்தி வாடிக்கையாளர்கள் இந்த காரை முன்பதிவு செய்துகொள்ளலாம். ப்ரைம் ஹேட்ச்பேக்கிற்கான விலை ரூ.5.99 லட்சத்தில் தொடங்க, ப்ரைம் செடானிர்கான விலை ரூ..99 லட்சத்தில் இருந்தும் தொடங்குகிறது. இரண்டு கார்களும் அட்லஸ் ஒய்ட், டைபூன் சில்வர் மற்றும் எபிஸ் ப்ளாக் என மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.





















