Hyundai Offer: 95 ஆயிரம் ரூபாய் டிஸ்கவுண்ட்.. i20 காரை வாங்கலாமா? விலை எவ்வளவு?
Hyundai i20 Car: ஹுண்டாய் நிறுவனம் தன்னுடைய ஐ20 காருக்கு ரூபாய் 95 ஆயிரத்தை ஜனவரி மாத தள்ளுபடியாக அளித்துள்ளது.

இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் விற்பனையும், கார்களின் விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, வாடிக்கையாளர்களை தக்கவைக்கவும், மேலும் அதிகரிக்கவும் ஒவ்வொரு நிறுவனங்களும் மாதாந்திர தள்ளுபடியை அளித்து வருகிறது.
95 ஆயிரம் தள்ளுபடி:
இந்தியாவின் பிரபலமான கார் நிறுவனம் ஹுண்டாய். ஹுண்டாய் நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற மாடல் Hyundai i20 ஆகும். இந்த காருக்கு ஜனவரி மாத தள்ளுபடியாக ரூபாய் 95 ஆயிரத்தை ஹுண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடக்க விலை என்ன?
இது ஒரு ஹேட்ச்பேக் கார் ஆகும். மாடர்ன் டேஷ்போர்ட் வசதி கொண்டது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கார் இந்த கார். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 8.19 லட்சம் ( ஆன் ரோட் விலை) ஆகும். இந்த காருக்கு ரூபாய் 95 ஆயிரம் தள்ளுபடி அளிக்கப்பட்டிருப்பதால் ரூபாய் 7.14 லட்சத்திற்கு இந்த காரை இந்த மாதம் வாங்க இயலும்.
இந்த காரில் 16 வேரியண்ட்கள் உள்ளது. இந்த காரின் டாப் வேரியண்ட் 13.21 லட்சம் ரூபாய் ஆகும். 82 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 1197 சிசி திறன் கொண்டது. பெட்ரோலில் ஓடும் ஆற்றல் கொண்டது. இந்த கார் 5 கியர்களை கொண்டது. 87 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 114.7 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.
மைலேஜ்:
இந்த கார் 15 முதல் 18 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. எலக்ட்ரிக் சன்ரூஃப் கொண்டது. 10.25 இன்ச் டச் எச்டி டிஸ்ப்ளே உள்ளது. வயர்லஸ் சார்ஜிங் வசதி கொண்டது. டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ப்ளூடூத் வசதி கொண்டது.
சிறப்பம்சங்கள்:
எஞ்ஜின் ஸ்டார்ட், ஸ்டாப் வசதி கொண்டது. 311 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. 6 ஏர்பேக் வசதி கொண்டது. எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் வசதி கொண்டது. ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் வசதி கொண்டது. எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், ஆட்டோ முகப்பு விளக்குகள் வசதி கொண்டது. ஓட்டுனர் பின்பக்கம் பார்க்கும் மானிட்டர் வசதியும் உள்ளது.
16 இன்ச் டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள் உள்ளது. டொயோட்டோ கிளான்சா, டாடா அல்ட்ராஸ், ஐ20 என் லைன், பலேனா காருக்கு போட்டியாக இந்த கார் உள்ளது.





















