Bike Sales November: கல்லாக்கட்டிய பைக் நிறுவனங்கள்... பீக் மோடில் நவம்பர் விற்பனை! ஹீரோ மோட்டோகார்ப் மீண்டும் முதலிடம்
இந்தியாவில் இரு சக்கர வாகன விற்பனை கடந்த மாதம் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது, கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன சந்தையாக இந்தியா கருதப்படுகிறது, மேலும் கடந்த மாதமும் வலுவான விற்பனையைக் கண்டது. குறிப்பிடத்தக்க வகையில், ஹீரோ மோட்டோகார்ப் மற்ற அனைத்து பிராண்டுகளையும் விஞ்சி, அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்தது.
ஹோண்டா, டிவிஎஸ் மற்றும் பஜாஜ் நிறுவனங்களின் விற்பனையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. பண்டிகை காலத்திற்குப் பிறகும் வாடிக்கையாளர் தேவை தொடர்ந்து வளர்ந்து வருவதை இந்த புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.
முதலிடத்தைப் பிடித்த ஹீரோ மோட்டோகார்ப்
நவம்பர் 2025 மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் மொத்தம் 8,86,002 புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளது. இந்த எண்ணிக்கை, 2024 நவம்பரில் விற்பனையான 9,17,174 யூனிட்களுடன் ஒப்பிடும்போது, ஆண்டுக்கு ஆண்டு தோராயமாக 34.91% சதவீதமாக அதிகரித்து வருவது இந்த நிறுவனத்தின் மதிப்பைக்காட்டுகிறது.. இது இந்தியாவில் நம்பர் ஒன் இரு சக்கர வாகன பிராண்டாக ஹீரோ மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.
இரண்டாவது இடத்தில் ஹோண்டா:
ஹோண்டா நிறுவனம் இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஹோண்டா கடந்த மாதம் 6,06,284 யூனிட்களை விற்பனை செய்தது, இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25% வளர்ச்சியாகும். கடந்த சில மாதங்களில் நிறுவனம் தனது வாகனை விற்பனையை வலுப்படுத்தியுள்ளது. டிவிஎஸ் மோட்டார் 4,45,617 யூனிட்களை விற்பனை செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது. நவம்பர் 2024 உடன் ஒப்பிடும்போது டிவிஎஸ் விற்பனை 16.10% அதிகரித்துள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி மற்றும் ஜூபிடர் போன்ற மாடல்கள் வாடிக்கையாளர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருவது
பஜாஜ் மற்றும் ராயல் என்ஃபீல்டு விற்பனை எப்படி?
பஜாஜ் ஆட்டோ 258,585 புதிய யூனிட்களை நவம்பர் மாதத்தில் விற்றது, இது கடந்த ஆண்டு விற்பனையில் ஒப்பிடுகையில் 11.62% அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அதன் பிரபலமான பல்சர் மற்றும் CT சீரிஸ் பைக்குகளின் நல்ல விற்பனை தான் காரணம்.
ராயல் என்ஃபீல்ட் நிறுவனமும், முதல் ஐந்து இடங்களில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது, நவம்பர் மாதத்தில் 115,253 யூனிட்களை விற்றது, இது கடந்த ஆண்டை விட 3.66% சற்று அதிகரித்துள்ளது. முதல் ஐந்து பிராண்டுகளுக்கு அப்பால், மற்ற பிராண்டுகளும் குறிப்பிடத்தக்க விற்பனை வளர்ச்சியைக் கண்டன.
சுசுகி 104,638 யூனிட்களையும், யமஹா 70,929, ஏதர் 20,349, ஓலா 8,402, கிரீவ்ஸ் எலக்ட்ரிக் 5,764, கிளாசிக் லெஜண்ட்ஸ் 5,756, பியாஜியோ 3,348 மற்றும் பிகாஸ் 2,566 ஆகியவற்றையும் விற்றது. ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் இரு சக்கர வாகன சந்தை கடந்த மாதம் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது, கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.






















