சிவப்பு நிற திராட்சையில் அழற்சி எதிர்ப்பு தன்மை உள்ளது. கல்லீரலுக்கு இந்த அழற்சி எதிர்ப்பு பலத்தை அதிகரிக்கும்.
பீட்ரூட்டில் நைட்ரேட்கள் மற்றும் ஆக்சிஜேனேற்றிகள் உள்ளது. இது கல்லீரலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை அளிக்கிறது.
பெர்ரீஸ் பழத்தில் ஆக்சிஜனேற்றிகள் உள்ளது. இது கல்லீரலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது.
ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகிறது.
ஆரஞ்சில் ஆன்டி ஆக்சிடன்கள் உள்ளது. இது கல்லீரலுக்கு நன்மை பயக்கும்.
கல்லீரலில் உள்ள கொழுப்பை குறைக்க ஆலிவ் எண்ணெய் உதவுகிறது.
ஒமேகா 3 சத்து நிறைந்த மீனில் ஏராளமான நன்மைகள் உள்ளது. இது ஆரோக்கியமான கல்லீரலுக்கு பக்கபலமாகும்.
ஆரோக்கியமான கொழுப்புகள், புரதச்சத்து நிறைந்த நட்ஸ் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.