மேலும் அறிய

Audi Car Offers: ஆடித்தள்ளுபடியை மிஞ்சும் ஆடி கார் விலை குறைப்பு.. ரூ.8 லட்சம் வரை அதிரடி குறைப்பு - எந்தெந்த காருக்கு?

ஜிஎஸ்டி வரி மாற்றத்தின் காரணமாக ஆடி கார்களின் விலை லட்சக்கணக்கில் குறைந்துள்ளது.

மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை சீர்த்திருத்தி அறிவித்த பிறகு நாட்டின் பல்வேறு பொருட்களின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. குறிப்பாக, கார்களின் விலை பன்மடங்கு குறைந்துள்ளது. 

டாடா, மஹிந்திரா, ஹுண்டாய் போன்ற பட்ஜெட் கார்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் கார்கள் மட்டுமின்றி அதிநவீன சொகுசு காரான ஆடி நிறுவனமும் தனது கார்களின் விலையை குறைத்துள்ளது.  ஆடி காரின் எந்த மாடல் எவ்வளவு விலை குறைக்கப்பட்டுள்ளது? என்பதை கீழே காணலாம். 

1. Audi A6 - ரூ.3.64 லட்சம்

2. Audi Q8 - ரூ.7.83 லட்சம்

3. Audi Q5 - ரூ.4.55 லட்சம்

4. Audi Q7 - ரூ.6.15 லட்சம்

5. Audi A4 - ரூ.2.64 லட்சம்

6. Audi Q3 - ரூ.3.07 லட்சம்

இந்த கார்களின் விலை குறைக்கப்பட்டிருப்பதற்கு ஆடி கார் வாங்க ஆசைப்பட்டவர்களுக்கு இனிப்பான செய்தியாக மாறியுள்ளது. 

1. Audi A6:

இந்த Audi A6 காரின் பழைய விலை ரூபாய் 67 லட்சத்து 38 ஆயிரம் ஆகும். ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பிறகு இதன் விலை ரூபாய் 63 லட்சத்து 74 ஆயிரமாக குறைந்துள்ளது. அதாவது, இந்த Audi A6 காரின் விலை ரூபாய் 3.64 லட்சம் குறைந்துள்ளது. செடான் ரகத்தைச் சேர்ந்த இந்த கார் 1984 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. சொகுசு வசதிகள் நிறைந்தது இந்த கார்.

2. Audi Q8:

எஸ்யூவி ரக காரான இந்த கார் ஜிஎஸ்டி வரி மாற்றத்திற்கு முன்பு ரூபாய் 1 கோடியே 17 லட்சத்து 49 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. ஜிஎஸ்டி வரி மாற்றத்திற்கு பிறகு தற்போது ரூபாய் 1 கோடி 09 லட்சத்து 66 ஆயிரத்திற்கு விற்கப்பட உள்ளது. அதாவது, இந்த அதிநவீன வசதிகள் கொண்ட இந்த Audi Q8 கார் ரூபாய் 7.83 லட்சம் வரை விலை குறைந்துள்ளது. 340 குதிரைத்திறன் ஆற்றலும், 500 என்எம் டார்க் இழுதிறனும் கொண்டது இந்த கார். இந்த காரின் சிசி 2995 ஆகும்.

3. Audi Q5:

இந்த Audi Q5 காம்பக்ட் எஸ்யூவி 68 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். இந்த கார் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு ரூபாய் 63 லட்சத்து 75 ஆயிரமாக சரிந்துள்ளது. அதாவது, பழைய விலையை காட்டிலும் ரூபாய் 4.55 லட்சம் குறைவாக விற்கப்படுகிறது. 

இந்த கார் 1984 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது ஆகும். 4 சிலிண்டர் டர்போசார்ஜின் எஞ்ஜின் ஆகும். 261 பிஎச்பி ஆற்றல் கொண்டது. பெட்ரோலில் ஓடும் இந்த கார் பலராலும்  விரும்பப்படும் கார் ஆகும். 

4. Audi Q7:

ஆடி Q சீரிஸின் மற்றொரு படைப்பு இந்த Audi Q7 ஆகும். இந்த காரின் விலை ரூபாய் 92 லட்சத்து 29 ஆயிரம் ஆகும். ஜி.எஸ்.டி. வரி மாற்றத்திற்கு பிறகு ரூபாய் 86 லட்சத்து 14 ஆயிரத்திற்கு விற்கப்பட உள்ளது. அதாவது, ரூபாய் 6.15 லட்சம் குறைவாக விற்பனை செய்யப்பட உள்ளது. 

இந்த Audi Q7 கார் எஸ்யூவி ரகம் ஆகும். இந்த கார் 2995 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது ஆகும். 6 சிலிண்டர்கள் உள்ளது. 335 பிஎச்பி குதிரை ஆற்றலும் 500 என்எம் டார்க் இழுதிறனும் கொண்டது ஆகும். 

5. Audi A4:

இந்த Audi A4 காரின் விலை ரூபாய் 48 லட்சத்து 89 ஆயிரம் ஆகும். இந்த கார் ஜிஎஸ்டி வரி மாற்றத்திற்கு பிறகு ரூபாய் 46.25 லட்சத்திற்கு விற்கப்பட உள்ளது. இந்த காரின் விலை ரூபாய் 2 லட்சத்து 64 ஆயிரம் விலை குறைந்துள்ளது. 

செடான் ரகத்தைச் சேர்ந்த இந்த கார் 1984 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை உள்ளடக்கியது ஆகும். 2 லிட்டர் எஞ்ஜின் இதுவாகும். 201பிச்பி ஆற்றலும் 320 என்எம் டார்க் இழுதிறனும் கொண்டது. 7 கியர்களை உள்ளடக்கியது. 

6. Audi Q3:

இந்த Audi Q3 காரின் தொடக்க விலை ரூபாய் 46 லட்சத்து 14 ஆயிரமாக இருந்தது. ஜிஎஸ்டி வரி மாற்றத்திற்கு பிறகு இந்த காரின் விலை ரூபாய் 3.07 லட்சம் விலை குறைந்துள்ளது. அதாவது, இனி இந்த Audi Q3 கார் ரூபாய் 43 லட்சத்து 07 ஆயிரத்திற்கு விற்கப்படும்.

எஸ்யூவி ரக காரான இந்த கார் 1984 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது ஆகும். 4 சிலிண்டர்களை கொண்டது ஆகும். பெட்ரோலில் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஆடி, பென்ஸ், பிஎம்டபுள்யூ போன்ற கார்கள் கார் ஓட்டுபவர்களின் கனவுகளில் ஒன்றாகும். ஜிஎஸ்டி வரியால் ஆடி காரின் விலை குறைந்திருப்பது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TTV Dhinakaran Alliance: தலைமறைவான டிடிவி.! 15 நாட்களில் நடந்த திடீர் திருப்பம்- இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
தலைமறைவான டிடிவி.! 15 நாட்களில் நடந்த திடீர் திருப்பம்- இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
பிச்சுக்கிட்டு ஓடும் 6 காங். எம்எல்ஏக்கள்... பாஜகவின் செம பிளான்.!! அலறி துடிக்கும் ராகுல் - நடப்பது என்ன.?
பிச்சுக்கிட்டு ஓடும் 6 காங். எம்எல்ஏக்கள்... பாஜகவின் செம பிளான்.!! அலறி துடிக்கும் ராகுல் - நடப்பது என்ன.?
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TTV Dhinakaran Alliance: தலைமறைவான டிடிவி.! 15 நாட்களில் நடந்த திடீர் திருப்பம்- இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
தலைமறைவான டிடிவி.! 15 நாட்களில் நடந்த திடீர் திருப்பம்- இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
பிச்சுக்கிட்டு ஓடும் 6 காங். எம்எல்ஏக்கள்... பாஜகவின் செம பிளான்.!! அலறி துடிக்கும் ராகுல் - நடப்பது என்ன.?
பிச்சுக்கிட்டு ஓடும் 6 காங். எம்எல்ஏக்கள்... பாஜகவின் செம பிளான்.!! அலறி துடிக்கும் ராகுல் - நடப்பது என்ன.?
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Thai Amavasai: தை அமாவாசைக்கு இராமேஸ்வரம் செல்ல திட்டமா.? சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
தை அமாவாசைக்கு இராமேஸ்வரம் செல்ல திட்டமா.? சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
Chennai Manali madhavaram boat house: மணலி, மாதவரம் ஏரியில் அசத்தும் ஸ்பீட் போட், வாட்டர் ஸ்கூட்டர்.! அதிரடியாக குறைந்த கட்டணம்- குவியும் மக்கள்
மணலி, மாதவரம் ஏரியில் அசத்தும் ஸ்பீட் போட், வாட்டர் ஸ்கூட்டர்.! அதிரடியாக குறைந்த கட்டணம்- குவியும் மக்கள்
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Embed widget