மேலும் அறிய

Tata Sieera EV: சியாரா விலையில் மின்சார கார்..! 535KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8,400 EMI - முழு விவரங்கள்

Tata Sierra EV EMI Scheme: டாடா சியாராவின் இன்ஜின் எடிஷன் விலையில் 535 கிலோ மீட்டர் ரேஞ்ச் வழங்கக் கூடிய சியாராவின் மின்சார எடிஷனை வாங்குவதற்கான மாதந்திர தவணை விவரம் கீழே விளக்கப்பட்டுள்ளது.

Tata Sierra EV EMI Scheme: டாடா சியாரா மின்சார எடிஷனின் விலை, ரேஞ்ச் தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

டாடா சியாரா மின்சார எடிஷன்:

டாடா நிறுவனத்தின் லெஜண்டரி கார் மாடல்களில் ஒன்றான சியாராவின், மேம்படுத்தப்பட்ட இன்ஜின் எடிஷன் அண்மையில் வெளியாகி வாடிக்கையாளர்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது சியாராவின் மின்சார எடிஷனும் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் விலையை கருத்தில் கொண்டு நல்ல தரமான, வசதியான மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த வலுவான ரேஞ்ச் வழங்கக் கூடிய மின்சார காரை வாங்க விரும்புகிறீர்களா? ஆனால் பட்ஜெட் தான் உங்களுக்கு பிரச்னையா? கவலை வேண்டாம். சியாராவின் இன்ஜின் எடிஷன் விலையிலேயே, 535 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கக் கூடிய அதன் மின்சார எடிஷனை சொந்தமாக்குவதற்கான நிதி திட்ட விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

சியாரா EV விலை விவரங்கள்:

சியாராவின் மின்சார எடிஷனானது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களில் மொத்தம் 8 ட்ரிம்களில் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.18.79 லட்சத்தில் தொடங்கி ரூ.25.99 லட்சம் வரையிலான விலை வரம்பை கொண்டுள்ளது.  இதன் 63KWh பேட்டரி பேக் கொண்ட என்ட்ரி லெவல் காரின் ஆன் - ரோட் விலையானது, சென்னையில் 19 லட்சத்து 93 ஆயிரம் ரூபாயை கடக்கிறது. இதில் எக்ஸ் - ஷோரூம் விலை 18 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயும், பதிவுதொகை 13 ஆயிரம் ரூபாயும்,  கப்பீட்டு தொகை 81 ஆயிரமும் மற்றும் இதர செலவுகள் 19 ஆயிரம் ரூபாயும் அடங்கும். 

சியாரா இன்ஜின் எடிஷன் விலையில் மின்சார கார்:

சியாரா இன்ஜின் எடிஷனின் விலையானது ரூ.11.49 லட்சத்தில் தொடங்கி ரூ.25.99 லட்சம் வரை நீள்கிறது. ஒருவேளை உங்களிடம் ரூ.14.45 லட்சம் ஆன் ரோட் விலையிலான  இதன் என்ட்ரி லெவல் ஸ்மார்ட் ப்ளஸ் காரை வாங்குவதற்கான தொகை கையிலிருந்து, ஒரு நல்ல தரமான லெஜண்டரி காரின் மின்சார எடிஷனை சொந்தமாக்க விரும்புகிறீர்களா? அதற்கான வலுவான நிதி திட்டங்களை ஆன் - ரோட் விலை அடிப்படையில் வங்கிகள் வழங்குகின்றன. அதன்படி, நீங்கள் ரூ.14.45 லட்சம் ரூபாயை டவுன் - பேமண்டாக செலுத்திவிட்டு, மீதமுள்ள சுமார் ரூ.5.5 லட்சத்திற்கு கடனாக பெற்று வங்கியின் மாதந்திர தவணை திட்டத்தை பயன்படுத்தலாம்.


Tata Sieera EV: சியாரா விலையில் மின்சார கார்..! 535KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8,400 EMI - முழு விவரங்கள்

சியாரா EV - மாதாந்திர தவணை திட்டங்கள்

சியாரா மின்சார காரின் மொத்த விலையான ரூ.19.93 லட்சத்தில் ரூ.14.45 லட்சத்தை டவுன் -பேமண்டாக செலுத்தி, மீதமுள்ள ரூ.5.5 லட்சத்தை கடனாக வாங்குவதாக கருதுவோம். யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் மின்சார கார்களுக்கு குறைந்தபட்சமாக 7.5 சதவிகித வட்டியிலேயே கடன் கிடைக்கிறது. 7 ஆண்டுகளுக்கு 7.5 சதவிகித வட்டியுடன் மாதாந்திர தவணை முறையில் திருப்பி செலுத்தும் வாய்ப்பு கிடைத்தால், ஒட்டுமொத்தமாக 7 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயை நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும். மாதாந்திர தவணை சுமார் ரூ.8,400 மட்டுமே ஆகும். 7 ஆண்டுகள் முடிவில் அந்த காருக்காக ஒட்டுமொத்தமாக நீங்கள் 21 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயை செலுத்தி இருப்பீர்கள். எரிபொருள் செலவு சேமிப்பு மற்றும் உங்களுக்கு கிடைக்கும் சொகுசான பயண அனுபவத்தை கருத்தில் கொண்டால, நீங்கள் கூடுதலாக  வட்டிக்கு மட்டுமே செலுத்தும் ஒரு லட்சத்து 58 ஆயிரம் ரூபாயை என்பது உங்களது சேமிப்பாகவே அமையும்.

சியாரா EV - 535KM ரேஞ்ச்

63kWh பேட்டரி பேக்கானது 238PS மற்றும் 315Nm ஆற்றலை உற்பத்தி செய்து 535 கிலோ மீட்டர் வரையிலான ரேஞ்சை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிஜ உலக பயன்பாட்டில் 440 முதல் 460 கிலோ மீட்டர் தூரம் வரை இடைநிற்றலின்றி பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. டிசி ஃபாஸ்ட் சார்ஜிங்கை பயன்படுத்தினால்  15 நிமிடங்களில் 263 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணிக்கும் அளவிலான சார்ஜிங் நிலையை கார் எட்டும் என டாடா தரப்பு உறுதியளித்துள்ளது. இந்த பேட்டரிக்கு வாழ்நாள் (15 ஆண்டுகள்) வாரண்டியையும் உள்ளூர் வாகன உற்பத்தி நிறுவனம் வழங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்:Sierra EV Price List: சியாரா மின்சார எடிஷனின் வேரியண்ட், விலை, கலர்..! பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டி உண்மையா?

சியாரா EV - 5 ஸ்டார் ரேட்டிங்

சியாராவின் மின்சார எடிஷனும் பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதற்காக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர் பேக்குகளை வழங்கியுள்ளது. இதுபோக ஆல் வீல் டிஸ்க் ப்ரேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கைகள், டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம், டாப் வேரியண்ட்களில் லெவல் 2 ADAS அம்சங்கள், முன் மற்றும் பின்புற சென்சார்களுடன் கூடிய 540 டிகிரி கேமரா, SOS அழைப்பு வசதி ஆகிய அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் வெளிப்புற பாதுகாப்பிற்காக அதிக வலுவான ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது.


Tata Sieera EV: சியாரா விலையில் மின்சார கார்..! 535KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8,400 EMI - முழு விவரங்கள்

சியாரா EV - அம்சங்கள், வசதிகள்

12.3 இன்ச் செண்ட்ரல் இன்ஃபோடெயின்மெண்ட், 12.3 இன்ச் கோ பேசஞ்சர் டிஸ்பிளே மற்றும் 10.25இன்ச் டிஜிட்டல் ட்ரவர் டிஸ்பிளே என 3 டச்ஸ்க்ரீன்கள் உள்ளன.  30-க்கும் மேற்பட்ட செயலிகளை உள்ளடக்கிய பில்ட் - இன் ஆர்கேட் சூட், கேமிங் வசதி, 12 ஸ்பீக்கர் ஜேபிஎல் டால்பி  அட்மாஸ் சிஸ்டத்துடன் கூடிய சானிக்ஷாஃப்ட் சவுண்ட் பார், மெமரி ஃபங்க்சனுடன் கூடிய வெண்டிலேடட் மற்றும் 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன்புற இருக்கைகள், சக முன்புற பயணிக்கு பாஸ் மோட் இருக்கை, டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப் என ஏராளமான அம்சங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
நச்சுனு 4 காரை இறக்குறோம்.. கலக்குறோம்..! புதியதாக வரப்போகும் Maruti Suzuki கார்கள் என்னென்ன?
நச்சுனு 4 காரை இறக்குறோம்.. கலக்குறோம்..! புதியதாக வரப்போகும் Maruti Suzuki கார்கள் என்னென்ன?
ஒரே சார்ஜில் 720 கிமீ ரேஞ்ச்... இந்தியாவில் புக்கிங் ஸ்டார்ட்..புதிய BMW 7 Series காரில் அப்படி என்ன இருக்கு? முழு அம்சங்கள்
ஒரே சார்ஜில் 720 கிமீ ரேஞ்ச்... இந்தியாவில் புக்கிங் ஸ்டார்ட்..புதிய BMW 7 Series காரில் அப்படி என்ன இருக்கு? முழு அம்சங்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Embed widget