BMW Benz GST Cut Price: ஜிஎஸ்டி 2.0: சொகுசு கார்கள் மீது அதிரடி விலைக் குறைப்பு! மெர்சிடிஸ், BMW வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்
ஜிஎஸ்டி கவுன்சில் அறிவிப்பின்படி, சொகுசு கார்களுக்கான வரி விகிதம் 45-50% இடைவெளியில் இருந்து 40% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள் ஆட்டோமொபைல் துறைக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளன. சிறிய கார்கள் தள்ளுபடி அறிவிக்கப்பட்டதோடு, சொகுசு கார் பிரிவிலும் நேரடி வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு பெரிய
சொகுசு கார்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு
ஜிஎஸ்டி கவுன்சில் அறிவிப்பின்படி, சொகுசு கார்களுக்கான வரி விகிதம் 45-50% இடைவெளியில் இருந்து 40% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விகிதம் செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வரும். இதனால் வரி குறைப்பின் முழுப் பலனும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக சென்றடையுமென நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
மெர்சிடிஸ் பென்ஸ் – வாடிக்கையாளர்களுக்கான நன்மை
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம், தங்களின் அனைத்து மின்சாரமற்ற (ICE) மாடல்களுக்கும் 40% ஜிஎஸ்டி குறைப்பின் பலன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. ஆனால், மின்சார கார்கள் (EVs) மீது முன்பே இருந்த 5% ஜிஎஸ்டி தொடரும்.
நிறுவனம் தெரிவித்ததாவது:
இந்த விலைக் குறைப்பு பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்க்கும், பிரீமியம் கார் பிரிவில் புதிய தேவை உருவாகும்குறிப்பாக E-கிளாஸ் LWB செடான் விற்பனை மேலும் அதிகரிக்கும்.
E-கிளாஸ், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சொகுசு கார். சமீபத்தில் புதிய ‘வெர்டே சில்வர்’ நிறத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல், கடந்த ஒரு ஆண்டில் 9 முக்கிய ஆட்டோமொபைல் விருதுகளை வென்றுள்ளது. விலைக் குறைப்பு இதன் வெற்றியை இன்னும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎம்டபிள்யூ – ரூ.9 லட்சம் வரை விலைக் குறைப்பு
மெர்சிடிஸ் பென்ஸ் அறிவிப்புக்கு இணையாக, பிஎம்டபிள்யூ இந்தியாவும் தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகை அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாடல்களின் விலைகள் ரூ.9 லட்சம் வரை குறைக்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. குறைக்கப்படவுள்ள கார்களின் விலை முழுமையான விலைப்பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. இது மாடல் வாரியாக விரைவில் அறிவிக்கப்படும்.மேலும் பிஎம்டபிள்யூவின் இந்த நடவடிக்கை, பண்டிகை சீசனில் விற்பனைக்கு பெரும் ஊக்கமாக இருக்கும்.
ஆட்டோமொபைல் துறையில் புதிய போட்டி
மெர்சிடிஸ் மற்றும் பிஎம்டபிள்யூவின் விலை குறைப்பு நடவடிக்கை, இந்திய சொகுசு கார் சந்தையில் போட்டியை மேலும் கடுமையாக்கும். ஏற்கனவே மெர்சிடிஸ், ஆடி, ஜாகுவார்-லேண்ட்ரோவர் ஆகியவை இந்தியாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், ஜிஎஸ்டி குறைப்பு காரணமாக சொகுசு கார் வாங்குவோருக்கு பண்டிகை சீசனில் “டபுள் பெனிபிட்” கிடைக்கவுள்ளது – அதாவது விலைக் குறைப்பும், புதிய மாடல்களும்.





















