Bikes Launches in March 2024: மார்ச் மாதத்தில் அறிமுகமாக உள்ள பைக்குகள் - மொத்த லிஸ்ட் இதோ..!
Bikes Launches in March 2024: மார்ச் மாதம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகமாக வாய்ப்புள்ள, இருசக்கர வாகனங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன
Bikes Launches in March 2024: மார்ச் மாதம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹோண்டா சிபிஆர் 300ஆர் தொடங்கி, கேடிஎம் 125 ட்யூக் என பலதரப்பட்ட வாகனங்கள் அறிமுகமாக உள்ளன.
மார்ச் மாதம் அறிமுகமாக உள்ள பைக்குகள்:
இந்தியாவிலும் உலக அளவிலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் பல புதிய மோட்டார்சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி, கவாஸகி தொடங்கி பஜாஜ் மற்றும் ராயல் என்ஃபீல்டு வரை பல்வேறு உற்பத்தியாளர்கள் தங்களது புதுப்பு மாடல்களை சிறந்த வடிவமைப்பு, விவரக்குறிப்புகள் 2024 மற்றும் அம்சங்களுடன் அறிமுகப்படுத்தினர். இந்நிலையில் மார்ச் 2024ல், நவீன மற்றும் அம்சங்கள் மற்றும் மேம்பாடுகளுடன் கூடிய புதிய பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
அடுத்து வரும் பைக்குகளின் விவரங்கள்:
Moto Guzzi V9: இத்தாலிய மோட்டார்சைக்கிள் நிறுவனமான Moto Guzzi தனது V9 மாடலை, 853cc இன்ஜின் வாகனத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அதிகபட்சமாக மணிக்கு 201km வேகத்தில் செல்லும் எனவும், லிட்டருக்கு 18km மைலேஜ் தரும் என்றும் கூறப்படுகிறது. இதன் விலை ரூ. 14 லட்சம் வரை நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
கேடிஎம் 125 டியூக் 2024: ஆஸ்திரிய மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஸ்போர்ட்டி டிசைன்களுடன் தனது புதிய பைக்குகளை அறிமுகப்படுத்திய பிறகு இந்தியாவில் மிகவும்பிரபலமாகியுள்ளது. KTM 125 Duke 2024 மாடல் தொடர்பாக பல மாதங்களாக வதந்திகள் பரவி வரும் நிலையில், மர்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் விலை ரூ.1,75,000 முதல் ரூ.1,80,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
Husqvarna Motorcycles: ஸ்வீடிஷ் மோட்டார்சைக்கிள் நிறுவனமான Husqvarna Group, தனது Husqvarna Svartpilen 901 பைக்கை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. 889சிசி பேரலல்-ட்வின் மோட்டாரை கொண்ட இந்த வாகனம் மார்ச் 5 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் இந்தியாவில் சுமார் 12 லட்சம் ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்படலாம்த. Husqvarna Vitpilen 125 மாடலும் மார்ச் மாதத்திலேயே வெளியாகலாம் எனவும், இதன் விலை சுமார் ரூ.1.35 லட்சம் வரை இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
Yamaha XSR125: Yamaha நிறுவனம் அதன் Yamaha XSR125 பைக்கை மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கில் 124சிசி இன்ஜின், 120கிமீ வேகம், 47.6கிமீ மைலேஜ் மற்றும் கிளாசிக் டிசைன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று வண்ண விருப்பங்களில் வெளியிடப்படலாம் எனவும், சுமார் ரூ.1.35 லட்சம் விலையை கொண்டிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹோண்டா மோட்டார்சைக்கிள்கள்: ஹோண்டா தனது புதிய ஹோண்டா CBR150R மாடலை மார்ச் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா தனது புதிய ஹோண்டா CBR300R காரை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ராயல் என்ஃபீல்டு ரோட்ஸ்டர் 450: ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ரோட்ஸ்டர் 450 மார்ச் மாதத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஜாஜ் பல்சர் 400: பஜாஜ் ஆட்டோ சமீபத்தில் இந்தியாவில் அதன் 2024 பஜாஜ் பல்சர் NS160 மற்றும் பஜாஜ் பல்சர் NS200 பைக்குகளை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், மார்ச் 2024 இல் இந்தியாவில் அதன் பஜாஜ் பல்சர் 400 ஐ அறிமுகப்படுத்தலாம்.
மேற்குறிப்பிடப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் மட்டுமின்றி, Suzuki V-Strom 800DE, Royal Enfield Classic 350 Bobber, Honda CFR300L, BSA Gold உள்ளிட்டவையும் மார்ச்சில் அறிமுகம் செய்யப்படலாம். Ather Rizta எலக்ட்ரிக் ஸ்கூட்டர், Gogoro 2 சீரிஸ் மற்றும் Honda Activa Electric Hero Electric AE-8 போன்ற மின்சார ஸ்கூட்டர்களும் மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரியில் அறிமுகமான பைக்குகள்:
பிப்ரவரியில், இந்தியாவில் யமஹா எஃப்இசட்-எக்ஸ் குரோம் பதிப்பு, 2024 பஜாஜ் பல்சர் என்எஸ்160, பஜாஜ் பல்சர் என்எஸ்200, 2024 கவாஸகி இசட்900, 2024 கவாஸகி நிஞ்சா 500, 2024 கவாஸகி டிரைவ்-எக்ஸ், கபிரா 30 ஆர்எஸ், கபிரா கேஎம்பிராஸ், கபிரா கேஎம்பி 40 எம்பி 1200 எக்ஸ் மற்றும் ஹார்லி டேவிட்சன் X440 அடிப்படையிலான ஹீரோ மேவ்ரிக் ஆகிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சர்வதேச சந்தைகளில் TVS HLX 150F, கவாஸகி Z500, ராயல் என்ஃபீல்டு 650 உள்ளிட்ட இருசக்கர வாகன மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.