மேலும் அறிய

Bajaj Pulsar 2024: பல்சர் விரும்பிகளுக்கு குட்நியூஸ் - புதிய NS200 & NS160 மாடல்கள் அறிமுகம், புதுசா என்ன இருக்கு?

Bajaj Pulsar 2024: பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய பல்சர் NS200 மற்றும் NS160 மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Bajaj Pulsar 2024: பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய பல்சர் NS200 மற்றும் NS160 மாடல்கள், புதியதாக என்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். 

பஜாஜ் பல்சர் 2024 மாடல்:

இந்திய இரு சக்கர வாகன சந்தையில் மிக முக்கிய நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, அதன் பிரபலமான பல்சர் மாடலின் புதிய NS200 மற்றும் NS160 எடிஷன் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடல்களுக்கான விலை விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், புதுப்பிக்கப்பட்ட உபகரணங்களைக் கருத்தில் கொண்டு,  தற்போதைய மாடல்களுடன் ஒப்பிடும்போது நிறுவனம் சிறிது விலை அதிகரிப்பை எதிர்பார்க்கிறது. வெளியீடு தொடர்பான அற்விப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

புதிய பல்சர் என்எஸ் வடிவமைப்பு விவரங்கள்:

2024 பல்சர் என்எஸ் தொடரின் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களில் ஒன்று, எல்இடி டேடைம் ரன்னிங் லேம்ப்களுடன் எல்இடி முகப்பு விளக்குகளின் அறிமுகம் ஆகும். இதன்மூலம் வாடிக்கையாளர்களின் நீண்டகால கோரிக்கையை பஜாஜ் நிறுவனம் பூர்த்தி செய்துள்ளது. முந்தைய ஜாலோஜன் ஹெட்லேம்ப், நவீன அம்சங்களின் அடிப்படையில் மோட்டார்சைக்கிள்களை தங்கள் போட்டியாளர்கள் மத்தியில் பின்னுக்குத் தள்ளி இருந்தது குறிப்பிடத்தக்கது. பல்சர் N160 மற்றும் N150 மாடல்களில் அறிமுகமான ஒரு புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரின் அறிமுகம், புதிய மாடலுக்கான மற்றொரு குறிப்பிடத்தக்க மேம்பாடு ஆகும்

இதர அம்சங்கள்:

புதுப்பிக்கப்பட்ட க்ளஸ்டர் ஒரு பிளாக்-அவுட் டிஸ்ப்ளேவை வழங்குகிறது. அதனை இடது சுவிட்ச் கியரில் உள்ள பட்டன் மூலம் வசதியாகக் கட்டுப்படுத்தலாம். இது கியர் பொசிஷன் இண்டிகேட்டர், மொபைல் நோட்டிபிகேஷன் அலெர்ட்ஸ், உடனடி எரிபொருள் சிக்கனம், காலியாக உள்ள தூரம்,  நேரம், அத்துடன் நிலையான பயண மீட்டர், ஓடோமீட்டர், ஸ்பீடோமீட்டர் மற்றும் எரிபொருள் அளவீடு உள்ளிட்ட பல தகவல்களை வழங்குகிறது. இருப்பினும், அனலாக் டேகோமீட்டர் ஒரு புதிய ஹாரிஜாண்டல் டிஜிட்டல் மீட்டர் மூலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பஜாஜ் ரைடு கனெக்ட் பயன்பாட்டின் ஒருங்கிணைப்பு மூலம், பயணிக்கும்போதே பயனாளர்கள் செல்போன் அழைப்புகளை கையாள முடியும். கூடுதலாக, மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்ய புதிய USB போர்ட் இணைக்கப்பட்டுள்ளது.

இன்ஜின் விவரங்கள்:

குறிப்பிட்ட அம்ச மேம்படுத்தல்கள் இருந்தபோதிலும், பஜாஜ் ஆட்டோ மோட்டார்சைக்கிள்களின் மெக்கானிக்கல் விவரக்குறிப்புகளைத் தக்கவைத்துக்கொள்ளத் தேர்வு செய்துள்ளது. அதன்படி, NS160 ஆனது 17.03bhp மற்றும் 14.6Nm ஆற்றலை வழங்கும் 160.03cc, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. மறுபுறம், NS200, 199.5cc, லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் 24.13bhp மற்றும் 18.74Nm ஐ உருவாக்குகிறது. இரண்டு என்ஜின்களும் E20 இணக்கமாக இருக்கும். அதோடு, மஸ்குலர் பெட்ரோல் டேங்க் மற்றும் ஸ்ப்லிட் சீட் போன்ற அடிப்படை வடிவமைப்பு கூறுகள் முந்தைய மாடல்களில் இருந்து போன்று மாறாமல் உள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget