Byd Sealion 7: இன்னுமா வெயிட்டிங்..! புக்கிங் ஸ்டார்ட் ஆயிருச்சுபா, தாறுமாறான இந்த மின்சார கார் மாடல கவனிங்களே..!
Byd Sealion 7: சீனாவைச் சேர்ந்த Byd நிறுவனத்தின் சீலியன் 7 கார் மாடல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகமாகியுள்ளது.

Byd Sealion 7: Byd நிறுவனத்தின் சீலியன் 7 கார் மாடலுக்கான முன்பதிவு, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தொடங்கியுள்ளது.
Byd சீலியன் 7 கார் மாடல்:
சீனாவைச் சேர்ந்த BYD நிறுவனமானது தொடர்ந்து பிரீமியம் செக்மென்ட்டில் வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக பிரீமியம் புதிய SUV மாடலான சீலியன் 7 காரை இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. அந்நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில், புதிய காரானது ஆட்டோ 3 கார் மாடலுக்கு மேலே ஸ்லாட் நிலைநிறுத்தப்படும் ஒரு தூய மின்சார suv ஆகும். டோக்கன் தொகையான ரூ.70 ஆயிரத்துடன் முன்பதிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ விலைகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பிரீமியம் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் எனும் இரண்டு டிரிம் நிலைகளில் இந்த வாகனம் சந்தைப்படுத்த உள்ளது. இந்த காரை சீல் செடானின் SUV எடிஷன் என்றும் குறிப்பிடலாம். காரை வாங்கும்போது உங்களுக்கு 7KW ஏசி சார்ஜரும் கிடைக்கும்.
வடிவமைப்பு விவரங்கள்:
சீலியன் 7 கார் மாடலகளின் டெலிவரி மார்ச் 7 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரின் ஒட்டுமொத்த வடிவம் கூபே எஸ்யூவியாக இருந்தாலும், முன்புறம் பல வழிகளில் சீல் செடானைப் போலவே உள்ளது. குறிப்பாக பம்பர் வடிவமைப்புடன் கூடிய ஹெட்லேம்ப்கள். ஸ்வூப்பி கூபே எஸ்யூவி லைக் ஸ்டைலிங்கில் அதன் இருப்பைக் கொடுக்கிறது.
இது 4.8 மீட்டர் நீளம் கொண்ட பெரிய கார் ஆகும், அதே நேரத்தில் வீல்பேஸ் 2930 மிமீ நீளமாக உள்ளது. இந்த நீளமான வீல்பேஸ் என்பது உட்புறத்தில் நிறைய அறைகள் உள்ளதை காட்டுகிறது. இருப்பினும் ஹெட்ரூம்கள் இன்னும் சற்று சிறப்பாக இருந்து இருக்கலாம் என்ற எண்ணத்தை தருகிறது. அனைத்து BYD கார்களைப் போலவே, ஒரு பெரிய சுழலும் 15.6 அங்குல தொடுதிரை மற்றும் பனோரமிக் நிலையான கண்ணாடி கூரை, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, இயங்கும் டெயில்கேட் மற்றும் V2l மற்றும் 11 ஏர்பேக்குகள் போன்ற பிற அம்சங்களும் உள்ளன. ஒரு பெரிய இடவசதியும் உள்ளது.
இன்ஜின் விவரங்கள்:
இரட்டை மோட்டார் பேட்டரி பேக் எடிஷனில் 530bh வழியாக ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. இது 82.5 kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டும் என கூறப்படுகிறது. இதன் பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 542 கிமீ தூரம் வரை பயணிக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. 313bhp இல் குறைந்த ஆற்றல் மற்றும் வரம்பில் ஒற்றை மோட்டார் எடிஷனும் உள்ளது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் Kia EV6 காரின் போட்டியாளரான, சீலியன் 7 மாடலின் விலை 55 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

