இந்த ஆண்டின் ஆட்டோ எக்ஸ்போ ஜனவரி 17-ம் தேதி தொடங்கியது. வரும் 22 வரை நடைபெறும்.
2,00,000 சதுர அடிக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த எக்ஸ்போவில், கடந்த 2 நாட்களில் 90 கார்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் எக்ஸ்போவில், இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இரண்டுமே காட்சிபடுத்தப்பட்டன.
அதில் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தது SUV கார்கள் தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் e Vitara மாடல் கார் எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்டது.
e Vitara-வை போன்ற பேட்ரியே இந்த காரில் உள்ளது எனக் கூறுகின்றனர்.
ஹூண்டாய் நிறுவனம் காட்சிபடுத்திய Creta Electric-ன் விலை ரூ.17.99 லட்சம் முதல் ரூ.23.50 லட்சம் வரை.
சமீபத்தில் வெளியான Kia Syros காரும் எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
டாடா அவின்யா காரின் கான்செப்ட் மிகவும் மேம்படுத்தப்பட்ட வடிவில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
டாட்டா மோட்டர்ஸ் தனது ஹரியர் SUV-யை மூன்று வடிவங்களில், நிலையான மற்றும் ஸ்டெல்த் பதிப்புகளில் காட்சிபடுத்தியது.