Audi Q7 2022 Launched: இந்தியாவில் அறிமுகமானது Audi Q7 Facelift - ஆர்வம் காட்டும் கார் பிரியர்கள்
டெக்னாலஜி வேரியண்ட்டுக்கு ரூ. 88, 33,000 எனவும், ப்ரீமியம் ப்ளஸ் வேரியண்ட்டுக்கு ரூ. 79,99,000 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சொகுசு கார்களில் மிகவும் பிரபலமானது ஆடி நிறுவனம். இந்த நிறுவனத்தின் Q7 வகை கார்களுக்கு இந்தியாவில் வாடிக்கையாளர்கள் மத்தியி பெரும் ஆதரவு இருக்கிறது.
இந்தச் சுழலில் Q7 காரை அந்நிறுவனம் மேம்படுத்தி Facelift என்ற மாடலை உருவாக்கியுள்ளது. இந்த மாடல் கார் இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த சூழலில் இன்று அந்தக் காரானது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
இரு விதமான வேரியண்ட்டுகளில் (ப்ரீமியம் ப்ளஸ் மற்றும் டெக்னாலஜி ) இந்த சொகுசு கார்கள் விற்பனைக்குக் கிடைக்கும். இவை இரண்டில் டெக்னாலஜி வேரியண்ட்டுக்கு ரூ. 88, 33,000 எனவும், ப்ரீமியம் ப்ளஸ் வேரியண்ட்டுக்கு ரூ. 79,99,000 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Here’s how the #AudiQ7 #SUV stacks up against its rivals in terms of price 👇@AudiIN pic.twitter.com/BAZCPCyVYi
— evoIndia (@evoIndia) February 3, 2022
ஆடி க்யூ 7 Facelift காரில் 3 லிட்டர் V6 பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காரில் ஒரு 48V ஹைபிரிட் சிஸ்டம் ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது.. இதன் அதிகபட்ச பவர் 335 BHP மற்றும் டார்க் 500 NM ஆகும். இதில், 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதியும்QUATTRO ALL WHEEL DRIVE SYSTEM என்ற வசதியும் இருக்கிறது.
இந்த காரின் வெளிப்புற அமைப்பில் தற்போது அதிகம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு புதிய சிங்கிள் பிரேம் கிரில், மேட்ரிக்ஸ் LED ஹெட் லேம்ப் வசதி, புதிய டிசைன் செய்யப்பட்ட முன்பக்க பம்பர், 19 இன்ச் அலாய் வீல்கள், LED டைல் லைட்ஸ், மற்றும் ஒரு சில்வர் பூட் லிட் என பல்வேறு வசதிகள் இருக்கின்றன.
அதேபோல், இந்தக் காரின் உள்புற அமைப்பில் பல மேம்படுத்த அப்டேட்டுகள் இருக்கின்றன. பேனரோமிக் (Panaromic) சன் ரூஃப், விர்ச்சுவல் காக்பிட், நான்கு கிளைமேட் மோட்ஸ், டச் ஸ்க்ரீன் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம், HVAC சிஸ்டம், எலக்ட்ரிக் முன்பக்க சீட்கள், அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் மற்றும் 8 ஏர் பேக் வசதிகள் இருக்கின்றன.
முன்னதாக, ஆடி நிறுவனம் தனது க்யூ7 சொகுசு காரின் விற்பனையை, மாசு உமிழ்வு விதி நடைமுறைக்கு வந்ததை அடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிறுத்தியது. தற்போது ரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனாக இக்கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்