Back to the future மாதிரி பறக்கும் கார்கள்...2025-இல் அறிமுகம்.. அப்டேட் கொடுத்த நிறுவனம்..
இந்த வாகனத்தில் எட்டு ப்ரொப்பல்லர்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்றும், இரண்டு பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய வகையில் வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
80-களின் பிரபல அறிவியல் புனைவு படமான 'பேக் டூ த ஃப்யூச்சர்' படத்தின் க்யூரியஸ் விஞ்ஞானி டாக்டர் எம்மட் பிரவுன் 2015-ஆம் ஆண்டுக்கு முன்னோக்கி பயணிப்பார்.
1989ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் 2015ஆம் ஆண்டில் பறக்கும் கார்களில் மிகச் சாதாரணமாக மக்கள் பயணிப்பதாகக் காட்டி இருப்பார்கள். இந்த வளர்ச்சியை படத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் நாம் பெற்றிடாவிட்டாலும், இந்தத் தொழில்நுட்பத்தை விரைவில் கொண்டு வர பல நிறுவனங்களும் போட்டா போட்டியில் ஈடுபட்டுள்ளன.
அந்த வகையில், ட்ராஃபிக்கில் சிக்கி சின்னாபின்னமாகாமல் வரும் காலத்தில் ப்ளேன்கள், ஹெலிகாப்டர்களில் செல்வது போல் பறக்கும் கார்களில் காற்றில் மிதந்தபடி அலுவலகங்களுக்கு செல்ல, இத்தகைய பறக்கும் கார்களைத் தயாரிக்கும் வேலைகளை கலிஃபோர்னியாவைச் சேர்ந்த அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கியுள்ளது
2015ஆம் ஆண்டு முதல் பறக்கும் கார்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் 70 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Flying car by California startup Alef attracts early Tesla investor https://t.co/6pMqxTPx96 pic.twitter.com/A6q1XGrsIO
— Reuters (@Reuters) October 20, 2022
eVTOL மாடல் A மற்றும் Alef Zero எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கார்கள் ஆடம்பர கார்கள் போலவும் அதே சமயம் நவீன ஹெலிகாப்டர்கள் போலவும் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரே சமயத்தில் தரையில் செல்லக்கூடியவையாகவும் விண்ணில் பறக்கக்கூடியவையாகவும் வர உள்ள இந்தக் கார்கள், செங்குத்தாகப் புறப்பட்டு பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இதில் இருக்கும் ஒரே சவால், இந்த வாகனத்தின் விலையாகத்தான் இருக்கும். இந்த வாகனத்தின் விலை குறைந்தபட்சம், 2,70,000 யூரோ டாலர்களாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும், 2025-ஆம் ஆண்டின் இறுதியில் இந்தக் கார்கள் விற்பனைக்கு வரும் என்றும், நகர்ப்புற நெரிசலைக் குறைப்பதே தங்களது முதன்மை நோக்கம் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அலெஃப் மாடல் ஏ வாகனமானது ஒரு முறை ரீச்சார்ஜ் செய்தால் 200 மைல்கள் வரை சாலையில் பயணிக்கும் வகையிலும், 110 மைல்கள் வரை பறக்கும் வரம்பையும் கொண்டிருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த வாகனத்தில் எட்டு ப்ரொப்பல்லர்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்றும், இரண்டு பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய வகையில் வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த வாகனத்துக்கான ஆர்டர்களை 150 யூரோ டாலர்கள் முன் பணம் செலுத்தி மக்கள் ப்ரீ புக்கிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Flying car in Dubai today pic.twitter.com/N0b0ZBSvwN
— Tansu YEĞEN (@TansuYegen) October 12, 2022
Xpeng Aero HT என்ற சீன நிறுவனம், மின்சாரத்தில் இயங்கக் கூடிய பறக்கும் கார்களை ஏற்கெனவே வடிவமைத்து சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ள நிலையில், 2024-ஆம் ஆண்டு முதல் சந்தைகளில் 1,56,600 அமெரிக்க டாலர்களுக்கு இந்தக் கார்கள் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.