Mahindra XUV 7XO முதல் Nissan Gravite வரை.. இந்த மாசம் அறிமுகமாகும் கார்கள் இதுதான்!
இந்தியாவில் இந்த ஜனவரி மாதம் அறிமுகமாகும் கார்களின் பட்டியல் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவில் கார் விற்பனை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒவ்வொரு நிறுவனமும் தங்களது புதிய கார்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 6 கார்கள் அறிமுகமாக உள்ளது.
இந்தியாவில் புதியதாக அறிமுகமாக உள்ள இந்த 6 கார்களில் 5 எஸ்யூவி காரும், 1 எம்பிவி காரும் அடங்கும். அந்த கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.
1. Mahindra XUV 7XO:
இந்தியாவின் பிரபலமான கார் நிறுவனம் மஹிந்திரா. இவர்களது கார்களுக்கு இந்திய சந்தையில் தனி வரவேற்பு உள்ளது. குறிப்பாக, எஸ்யூவி கார் என்றாலே மஹிந்திராதான் என்ற பெயர் பெற்றுள்ளது. இவர்களது புதிய படைப்பு Mahindra XUV 7XO. இந்த கார் வரும் 5ம் தேதி அறிமுகமாக உள்ளது.
எலக்ட்ரிக் எஸ்யூவி காரான இந்த கார் கேபினில் 3 டிஸ்ப்ளே கொண்டது. 16 ஸ்பீக்கர் ஆடியோ, 540 டிகிரி கேமரா சிஸ்டம், நியூ அடாஸ் விசுவலிசேஷன் வசதியும் உள்ளது. இந்த காருக்கு மிகப்பெரிய வரவேற்பு இந்திய சந்தையில் உள்ளது.
2. New Kia Seltos:
கியா நிறுவனம் இந்தியாவில் குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைந்த ஒரு நிறுவனம். இவர்களின் புதிய படைப்பு New Kia Seltos ஆகும். இந்த காரின் விலை அறிவிக்கப்பட உள்ளது. செல்டாஸ் காரின் அப்டேட் வெர்சனாக இந்த கார் உள்ளது. வசீகரமான தோற்றம், கேபின் வசதிகள். உட்புறத்திலும் கூடுதல் அம்சங்களை மெருகேற்றியுள்ளனர்.
3. New Renault Duster:
ரெனால்ட் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான படைப்பு Duster கார். இந்த காரின் அப்டேட் வெர்சனாக அறிமுகமாக உள்ளது New Renault Duster. இந்த கார் குடியரசு தின விருந்தாக இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது. 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே இந்த காரில் உள்ளது. லெவல் 2 அடாஸ் வசதியும் உள்ளது.
4. Tata Harrier & Safari Petrol:
டாடா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்புகளில் Harrier மற்றும் Safari கார்கள் மிகவும் பிரபலம் ஆகும். இந்த காரின் பெட்ரோல் வெர்சன் அறிமுகமாக உள்ளது. இந்த எஸ்யூவி காரின் ஹைபெரியோன் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த OLED இன்ஃபோடெய்ன்மெய்ன்ட் டிஸ்ப்ளே உள்ளது. லெவல் 2 அடாஸ் வசதி உள்ளது.
5. Maruti Suzuki e Vitara:
மாருதி நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு Maruti Suzuki Vitara. இந்த காரின் மின்சார கார் வெர்சனான Maruti Suzuki e Vitara கார் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. அடாஸ் வசதி கொண்ட காராகவும், மிகப்பெரிய டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டதாகவும் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரும் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று கருதப்படுகிறது.
6. Nissan Gravite:
நிசான் நிறுவனத்தின் புதிய படைப்பு இந்த Nissan Gravite கார் ஆகும். இந்த ஜனவரி மாதம் இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது. புதிய காம்பேக்ட் எம்பிவி காராக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வசீகரமான தோற்றம், இதன் வடிவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.





















