மேலும் அறிய

Mercedes-Benz EQS Sedan: மெர்சிடஸ் பென்ஸின் EQS செடான் அறிமுகம் - 118 kWh பேட்டரி பேக்குடன் அபார செயல்திறன்

Mercedes-Benz EQS Sedan: மெர்சிடஸ் பென்ஸின் EQS செடான் கார் மாடல், 118 kWh பேட்டரி பேக்குடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Mercedes-Benz EQS Sedan: மெர்சிடஸ் பென்ஸின் EQS செடான் கார் மாடல், மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங் மற்றும் ரேஞ்ச் அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மெர்சிடஸ் பென்ஸின் EQS செடான்:

Mercedes-Benz நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட முழுமையான மின்சார EQS செடானை அறிமுகப்படுத்தியுள்ளது . வாகனம் திருத்தப்பட்ட ஸ்டைலிங், பெரிய பேட்டரி பேக் மற்றும் சில மெக்கானிக்கல் மேம்பாடுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. ஏப்ரல் 25 முதல் வெளிநாட்டு சந்தைகளில் ஆர்டர் செய்ய இந்த வாகனம் கிடைக்கும் என்றும், மேம்படுத்தப்பட்டாலும் செடானின் அடிப்படை விலைகள் முன்பு இருந்ததைப் போலவே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவிலும் இந்த EQS செடான் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இந்திய சந்தைக்கு வரும் தேதி தொடர்பான அறிவிப்பு எதுவும் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

வடிவமைப்பு விவரங்கள்:

2025 EQS இல் மிகவும் வெளிப்படையான மாற்றம் அதன் ஃப்ரண்ட் என்ட் பகுதியில் உள்ளது.  இது குரோம் ஸ்லேட்டுகளுடன் திருத்தப்பட்ட கருப்பு பேனலைப் பெற்று இருக்கிறது.  இது முந்தைய எடிஷனை விட பாரம்பரிய தோற்றத்தை அளிக்கிறது. கூடுதலாக, காரின் முன்புற ஹூட்டில் நிமிர்ந்த மெர்சிடிஸ் நட்சத்திரம் உள்ளது.  இது பழைய மாடலில் இடம்பெற்றிருக்கவில்லை. இவற்றைத் தவிர, செடான், முந்தைய எடிஷனை போன்ற ஒத்த ஸ்டைலிங் குறிப்புகளைக் கொண்டுள்ளது. பின்புற குஷனில் நாப்பா லெதர் பைப்பிங்குடன் குரோம் உச்சரிப்புகளுடன் கூடிய ஏர் வென்ட்கள் போன்ற சில சிறிய மாற்றங்களையும் உட்புறத்தில் கொண்டுள்ளது. கார் இப்போது MBUX ஹைப்பர்ஸ்கிரீன் குவாலியிட்டியில் கிடைக்கிறது.

தொழில்நுட்ப அம்சங்கள்:

வாகனமானது ஒரு தானியங்கி லேன் மாற்றம் (ALC) செயல்பாட்டைக் கொண்டுள்ளது. அதன்படி,  காரானது 80-140 கிமீ/மணி வேக வரம்பிற்குள் தானாகவே பாதை மாற்றத்தைத் தொடங்குவதோடு,  முன்னாள் உள்ள வாகனத்தை தானாக முந்திச் செல்லும். இது தவிர, 2025 EQS செடான் ஒரு பெரிய 118 kWh பேட்டரி பேக்கைப் பெறுகிறது.  இது முந்தைய 108.4 kWh பேட்டரி பேக்கை விட அதிகமாகும். EV ஆனது, டிரைவிங் நிலைமைகளைப் பொறுத்து, ஆல்-வீல்-டிரைவ் பதிப்புகளில் முன் மோட்டாரை அணைக்கும் டிஸ்கனெக்ட் யூனிட்டையும் (DCU) கொண்டுள்ளது. இதன் விளைவாக பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், EQS 450 இப்போது 799 கிமீ வரை செல்லும். அதே நேரத்தில் முதன்மையான EQS 450+ 822 கிமீ தூரம் வரை செல்லும்.  காரில் உள்ள கூடுதல் மாற்றங்களில் மேம்படுத்தப்பட்ட ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் சிறந்த டிசெலரேஷன் ரேட் ஆகியவை அடங்கும்.

இந்திய சந்தையில் தற்போது கிடைக்கும் மெர்சிடஸ் பென்ஸின் EQS செடான் கார் மாடலின் விலை, ரூ.1.62 கோடி முதல் ரூ. 2.45 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
Embed widget