TVS APACHE: டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய RTR 160 4V பைக் அறிமுகம்.. விலை விவரங்கள் உள்ளே!
2023 டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருசக்கர வாகனங்களின் விற்பனையில், டிவிஎஸ் நிறுவனம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதிக மைலேஜ் தரக்கூடிய வாகனங்களை தயாரிப்பதில், டிவிஎஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று இருப்பது அதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் தான், டிவிஎஸ் நிறுவனம் தனது புதிய பைக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய பைக் மாடல் அறிமுகம்:
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம், புதிய அபாச்சி RTR 160 4V ஸ்பெஷல் எடிஷன் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் அதன் தொடக்க விலை ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சந்தையில் உள்ள RTR 160 4V மாடலை விட ஸ்பெஷல் எடிஷனில் குறிப்பிடத்தக்க பல மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வண்ணத்தில் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.
The TVS Apache RTR 160 4V Special Edition has been launched in India priced at Rs 1.30 lakh (ex-showroom).
— BikeIndia.in (@bikeindia) November 30, 2022
Read all the details here: https://t.co/JrcitHrqud@tvsmotorcompany@TVSApacheSeries pic.twitter.com/tfqtbspucr
இன்ஜின் விவரங்கள்:
இன்ஜினை பொருத்தவரை புது மாடலிலும் 159.7சிசி, ஆயில் கூல்டு, ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட, சிங்கில் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 17.3 குதிரைகளின் சக்தி மற்றும் 14.73 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்ம் இணைக்கப்பட்டுள்ளது.
இதர சிறப்பம்சங்கள்:
புதிய ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளில் ட்வீக் செய்யப்பட்ட எக்சாஸ்ட், புதிய புல்-பப் மஃப்ளர் பொருத்தப்பட்டு உள்ளது. இது ஸ்டாண்டர்டு மாடலில் இருப்பதை விட 1 கிலோ வரை எடை குறைவாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. புதிய மாடலில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள் இடம்பெற்றுள்ளன. முந்தைய ஸ்பெஷல் எடிஷன் அபாச்சி RTR 160 4V மாடல் மேட் பிளாக் வண்ணத்தில் வழங்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது இதே நிறம் புதிய 2023 மாடலிலும் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பியல் வைட் நிறத்திலும் புதிய எடிஷன் சந்தையில் கிடைக்கிறது.
புதிய பெயிண்ட் ஃபினிஷ் பை-டோன் அலாய் வீல்கள் - முன்புறம் பிளாக், பின்புறத்தில் ரெட் நிறம் வழங்கப்பட்டு இருக்கிறது. சீட் தொடர்ந்து டூயல் டோன் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. இவற்றுடன் ஸ்டாண்டர்டு மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் மூன்று வித ரைடு மோட்கள், smartXonnect ப்ளூடூத் கனெக்டிவிட்டி, எல்.ஈ.டி முகப்பு விளக்கு, டிஆர்எல் மற்றும் கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன.