மேலும் அறிய

BMW M 1000 XR: வெளியானது பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் M 1000 XR மாடல் - விலை, சிறப்பம்சங்களின் விவரங்கள் உள்ளே!

BMW M 1000 XR: பிஎம்டபள்யூ நிறுவனத்தின் M 1000 XR மாடல் பைக்கின் விவரங்கள் முழுமையாக வெளியாகியுள்ளது.

 BMW M 1000 XR: பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் M 1000 XR மாடலின் விலை இந்திய சந்தையில், 20 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக நிர்ணயீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

பிஎம்டபள்யூ மோட்டார்சைக்கிள்:

BMW Motorrad நிறுவனம் நடப்பாண்டில் M சீரிஸில் மூன்றாவது மாடலாக M 1000 XR என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை அமெரிக்காவில் 24,295 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில்  ரூ. 20.22 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வரும்போது, ஏற்றுமதி கட்டணம் உள்ளிட்டவை சேர்த்து இதன் விலை 25 லட்சம் வரையில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய டிராக்-ஃபோகஸ்டு அட்வென்சர் மாடல் வாகனமாட்க்ஹு, லிட்டர்-கிளாஸ் பிரிவில் சமீபத்தில் வெளியான Ducati Multistrada V4 RS-க்கு போட்டியாக உள்ளது.

இன்ஜின் விவரம்:

M 1000 XR ஆனது ShiftCam தொழில்நுட்பத்துடன் கூடிய 999cc, திரவ-குளிரூட்டப்பட்ட, இன்லைன்-ஃபோர் மோட்டார் மூலம் இயங்குகிறது. இது அதிகபட்சமாக 201hp ஆற்றலையும் 112Nm உச்ச முறுக்குவிசையையும் உருவாக்குகிறது. இது முந்தைய எஸ் மாடலை விட அதிக ஆற்றல் கொண்டதாக உள்ளது. வேகமான ஆக்சிலரேஷனுக்கான நான்காவது மற்றும் ஆறாவது கியரின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது எஸ் மாடலில்  உள்ள ஸ்ப்ராக்கெட்டில் 47வது  பல்லில் இருந்த இருந்த இந்த கியர் தற்போது 45வது பல்லிற்கு மாற்றப்பட்டுள்ளது.

வடிவமைப்பு விவரங்கள்:

ரைடரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக M 1000 XR இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளுடன், டூயல்-சேனல் ஏபிஎஸ், இழுவைக் கட்டுப்பாட்டு அமைப்பு, ரைடு-பை-வயர் த்ரோட்டில், வீலி கண்ட்ரோல் மற்றும் ரைடிங் மோட்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஸ்கல்ப்டட் எரிபொருள் டேங்க், இரட்டை LED முகப்பு விளக்குகள், ஒரு கொக்கு போன்ற நீட்டிப்பு, கார்பன் ஃபைபர் M விங்லெட்டுகள், கார்பன் ஃபைபர் எண்ட் கேப் கொண்ட டைட்டானியம் எக்ஸாஸ்ட் மற்றும் 17-இன்ச் பாலி அலுமினிய சக்கரங்கள் ஆகியவற்றையும் கொண்டுள்ளன. 840 மில்லி மீட்டராக இருந்த இருக்கையின் உயரம் 850 மில்லி மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.

எம் கார்பனாலான ஒருங்கிணைந்த செயின் கார்டு கொண்ட பின் சக்கர அட்டை, பக்க பேனல்கள், முன் சக்கர கவர், உள் கவர் மற்றும் இக்னிஷன்/ஸ்டியரிங் லாக் கவர் மற்றும் சவாரி மற்றும் பயணிகளுக்கு முழுமையாக சரிசெய்யக்கூடிய எம் ஃபுட்ரெஸ்ட்கள் ஆகியவை உள்ளன. இதனால், இந்த வாகனத்தின் எடை முந்தைய மாடலை காட்டிலும் 3 கிலோ குறைவாகியுள்ளது.

இந்தியாவில் எப்போது வரும்?

BMW நிறுவனத்தின் M 1000 XR மற்றும்  S 1000 XR updated ஆகிய இரண்டு மாடல்களுமே அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Breaking News LIVE: ஒட்டுமொத்த இந்துக்களையும் ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் - பிரதமர் மோடி
Breaking News LIVE: ஒட்டுமொத்த இந்துக்களையும் ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் - பிரதமர் மோடி
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?Chennai's Amirtha | அடுத்த கட்ட பாய்ச்சலில் பிரபல கல்வி குழுமம்..பிராண்ட் அம்பாசிடராக ஸ்ரீலீலாJagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Breaking News LIVE: ஒட்டுமொத்த இந்துக்களையும் ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் - பிரதமர் மோடி
Breaking News LIVE: ஒட்டுமொத்த இந்துக்களையும் ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் - பிரதமர் மோடி
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !
Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !
அதிரடி! மக்கள் நல்வாழ்வு, வனத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு புதிய செயலாளர்கள்  - முழு விவரம்
அதிரடி! மக்கள் நல்வாழ்வு, வனத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு புதிய செயலாளர்கள் - முழு விவரம்
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
செப்டம்பர் 17-ல் மதுவிலக்கு மாநாடு பெண்கள் தலைமையில் நடத்தப்படும் - விசிக தலைவர் திருமாவளவன்
செப்டம்பர் 17-ல் மதுவிலக்கு மாநாடு பெண்கள் தலைமையில் நடத்தப்படும் - விசிக தலைவர் திருமாவளவன்
Embed widget