Vastu Tips | குழந்தைகள் படிக்கிற ரூமில் இந்த படங்களை வைக்கலாம்.. வாஸ்து டிப்ஸ்..
உங்கள் குழந்தைகள் படிக்கும் இடம் தனியாக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் சரி, அங்கு அவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் சில புகைப்படங்களை ஒட்டி வைப்பது நன்மை அளிக்கும்.
வாஸ்து முறைப்படி குழந்தைகள் படிக்கும் அறையை ஒரு வீட்டின் வடகிழக்கு திசையில் அமைப்பதோடு, அங்கு உத்வேகத்தை அளிக்கும் சில புகைப்படங்களை ஒட்டி வைக்க வேண்டும். இதனால் குழந்தைகள் படிப்பில் ஆர்வம் அதிகமாகும் என கூறப்படுகிறது.
இன்றைய சூழலில் வீட்டில் சிறிது பிரச்சனை ஏற்பட்டாலும் அடுத்து என்ன செய்வது? என்பதை அறிய பெரும்பாலான மக்கள் தற்போது ஜோதிடத்தை தான் நம்பி செல்கின்றனர். அதிலும் குழந்தைகள் படிப்பில் சற்று தொய்வினைக் கண்டால், மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு அவர்களைத் திட்டுகிறோம். இதனையடுத்து இதற்கும் கூட குழந்தைகளுக்கு நேரம் சரியில்லையா? என்று ஜோசியம் பார்க்க கிளம்பிவிடுவார்கள். அதெல்லாம் தேவையில்லாத ஒரு விஷயம் என்றும் குழந்தைகளுக்கு படிக்கும் சூழலை நம் வீட்டில் அமைத்துக்கொடுத்தாலே போதும். படிப்பில் சிறந்துவிளங்குவார்கள் என கூறப்படுகிறது. மேலும் குழந்தைகள் படிக்கும் அறையை எவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து வாஸ்து சாஸ்திரங்கள் பல கூறுகின்றன. அவை என்ன என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.
வாஸ்து முறைப்படி குழந்தைகள் படிக்கும் அறையானது ஒரு வீட்டில் வடகிழக்குப்பகுதியில் அமைந்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஏனென்றால் காற்றும் சூரிய வெளிச்சமும் ஒரு வீட்டில் வடகிழக்கு திசையில் தான் அதிகம் இருக்கும். எனவே அப்பகுதியில் அறையை அமைப்பதோடு ஜன்னலும் வைத்திருப்பது அவசியம். குறிப்பாக குழந்தைக்கு பூமியின் சகல ஜஸ்வரியங்களும் பெற வேண்டும் என்றால் சூரிய ஒளிக்கதிர்கள் வீட்டினுள் வரவேண்டும். எனவே வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் படிக்கும் அறையை அமைத்துவிடலாம்.
இதோடு மட்டுமின்றி உங்கள் குழந்தைகள் படிக்கும் இடம் தனியாக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் சரி, அங்கு அவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் சில புகைப்படங்களை ஒட்டி வைப்பது நன்மை அளிக்கும். ஏனென்றால் தற்போதுள்ள குழந்தைகள் தங்களைச்சுற்றியுள்ள விஷயங்களைப்பார்த்து தான் பல கற்றுக்கொள்கின்றனர். எனவே உங்களின் குழந்தைகளை எதிர்காலத்தைக்கருத்தில் கொண்டு புகைப்படங்களை தேர்ந்தெடுப்பதில் நீங்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
எனவே குழந்தைகள் படிக்கும் அறையில் சூரியன் உதிப்பது போன்ற படங்கள், குதிரைகள் ஓடும் புகைப்படங்கள், வானத்தில் பறக்கும் பறவைகள் போன்ற படங்களைத் தேர்வு செய்யலாம். இதோடு கடின உழைப்பினால் முன்னேற்ற தலைவர்களின் புகைப்படங்கள், வாழ்வில் முன்னேற்றத்தைக் கொடுக்கும் பொன்மொழிகள், இயற்கைக்காட்சிகள் போன்ற புகைப்படங்களை ஒட்டி வைக்கலாம். இது உங்கள் குழந்தைகளின் பாசிடிவ் எனர்ஜியைக்கொடுக்கும். எவ்விதமான எதிர்மறை ஆற்றலையும் உங்களுக்கு கொடுக்காது.
எனவே மேற்கண்ட புகைப்படங்களைப் பயன்படுத்துவதற்கு பழகுங்கள். அதே நேரம் வன்முறை அல்லது சோகத்தை வெளிப்படுத்தும் எவ்விதமான புகைப்படங்களையும் ஒட்டுவதைத் தவிர்க்க வேண்டும். இது உங்கள் குழந்தைகளுக்கு நிச்சயம் பாசிடிவ் எனர்ஜியை மட்டும் கொடுக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. இதனால் தான் நம் முன்னோர்கள் எந்த வேலை செய்தாலும் கிழக்கு திசையில் இருந்து தொடங்கினால் நிச்சயம் வெற்றிப்பெற முடியும் என்று தெரிவித்துள்ளனர்.