Love: அடிக்கடி “காதலில்” விழும் ஜாதகம் இப்படித்தான் இருக்கும்! உங்களுக்கு எப்படி?
“காதலிக்காத உயிர்கள் இல்லை” என்று கூறுகிறார் தத்துவ ஞானி பிளம்பிங். ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிப்பது மட்டும் காதல் இல்லை. உயிர் உள்ளதும், உயிர் அற்றது என்று எதை வேண்டுமென்றாலும் காதலிக்கலாம்.
ஒருவரின் ஜாதகத்தில் “புதன்” வலுத்திருந்தால் அவர் யார் மீது காதல் அன்பு, பாசம், நேசம் வைத்தாலும் அது அவருக்கு சாதகமாகவே அமையும்.
“புதன் கிரகமும், காதலில் வெற்றி “ !!!
ஜாதகத்தில் புதன் எவ்வளவு வலுவாக இருக்கிறதோ, அதை வைத்து அவரது பாசமும் அடுத்தவர்களிடத்தில் மிகவும் வலுவாக இருக்கும். புதன் என்ற கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் கன்னி ராசியில் அமர்ந்திருந்தாலும் மிதுன ராசியில் அமர்ந்திருந்தாலோ நிச்சயமாக அவருக்கு காதலில் வெற்றி தான். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு வாய்ப்பு உண்டு. இது அனைத்தும், அவரவர் ஜாதகத்தை பொருத்து மாறுபடும்.
ஒருவர் ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் காதல் திருமணத்தில் முடிய வேண்டுமென்றால் அந்த கிரகம் லக்னத்தில் இருந்து 1, 5, 9 பாவங்களில் அமர வேண்டும். அப்படி இல்லை என்றால் 5ம் பாவம், ஐந்தாம் அதிபதி 3ம் இடத்திலோ அல்லது 7ஆம் இடத்திலோ, 11ஆம் இடத்திலோ, அமரும்போது காதலிப்பவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள். புதன் கிரகத்திற்கு வருவோம், புதன் அமைதியானவர் மென்மையானவர், அன்பானவர், சிரிப்பு அதிபதி, சிந்தனை போன்ற எண்ணற்ற செயல்பாடுகளுக்கு அதிபதியாக விளங்குகிறார்.
காதல் பொதுவானது:
ரிஷப லக்னத்திற்கு ஐந்தாம் அதிபதி புதன் உச்சம் பெற்று கன்னி ராசியிலோ அல்லது மிதுன ராசியிலோ அமர்ந்து இருந்தால் அவர்களின் காதல் வெற்றி அடைந்து திருமணத்தில் போய் முடியும். விருச்சிக லக்னமாக இருந்து லக்னத்திற்கு ஐந்தாம் அதிபதி குரு ஐந்தாம் இடத்தில் அல்லது இரண்டாம் இடத்தில் ஆட்சி பெறும்போது நிச்சயமாக அவர்களின் காதல் திருமணத்தில் போய் முடியும். எந்த ஜாதகத்தில் புதன் லக்னத்திற்கு ஒன்று ஐந்து ஒன்பதாம் பாவத்திலோ அல்லது 11 ஆம் பாவத்திலோ அமர்வது அவர்கள் காதல் வெற்றியை நோக்கி பயணிப்பதை குறிக்கும்.
பொதுவாகவே 12 ராசிக்காரர்களுக்கும் காதல் என்பது பொதுவானது. இதில் ஒரு குறிப்பிட்ட ராசியினர் பிரமாதமாக காதலிப்பார்கள் என்றோ, குறிப்பிட்ட ராசிக்காரர்கள் காதலில் தோல்வி அடைவார்கள் என்றோ கிடையாது. ஊரு லக்னத்திற்கும் அதன் ஐந்தாம் பாவகம் காதலை குறிக்கும். மேஷ லக்னத்திற்கு சிம்ம ராசி ஐந்தாம் பாவகமாக வரும். அப்படி சிம்ம ராசியில் ஏதேனும் ராகு கேதுக்கள் அமர்ந்திருந்தார். அவர் மாற்று மதத்தவரை காதலிப்பவராகவும், அல்லது காதலித்து தோல்வி அடைபவராகவும் கூட இருக்கலாம். இப்படி 12 லக்னத்திற்கும் ஐந்தாம் பாவத்தை எடுத்து ஐந்தாம் பாவத்தில் அமர்ந்த கிரகம் ஐந்தாம் அதிபதி அமர்ந்த வீடு என்று அனைத்தையும் சோதித்து அவர்கள் காதலில் வெற்றி அடைவார்களா மாட்டார்களா? என்பதை நாம் நிர்ணயம் செய்யலாம். புதன் கிரகத்துடன் இணையும் கிரகத்தை வைத்து காதலிப்பவர்களின் தன்மையை நம்மால் கூற முடியும்.
அடிக்கடி காதல் வயப்படுபவர் யார் ?
ஜாதகத்தில் புதனும் கேதுவும் இணைந்து இருந்தால் அடிக்கடி காதல் வயப்படுவார்கள். குறிப்பாக புதனும் கேதுவும் ஒரே வீட்டில் அமர்ந்திருந்தாலோ அல்லது புதனுக்கு கேது ஒன்று ஐந்து ஒன்பதில் அமர்ந்திருந்தாலோ அவர்கள் காதல் வயப்படுவார்கள். புதன் கேது இணைவு இருப்பின் அவர்கள் மனதுக்குப் பிடித்தவர்களை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால், இந்த இணை உடன் குரு இருக்க வேண்டும். புதன் கேது இணைவு இருந்து அதே ராசியில் குரு இருந்தாலோ அல்லது குரு அந்த கேது புதன் இணைவை பார்த்தாலோ நிச்சயமாக காதல் திருமணம் வரை சென்று சுகமாக முடியும்.
புதன் கேது இணைவு இருந்து அதை செவ்வாய் பார்த்தாலோ அல்லது அந்த இணையுடன் செவ்வாய் கூடி இருந்தாலும் அந்த காதல் சண்டையில் தான் முடியும். அதுவே புதன் கேது இணை விருந்து அந்த இணைவுடன் சுக்கிரன் இருந்தால் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண மண்டபத்தில் அந்த காதல் நிறைவேறும். அதுவே புதன் கேது இணை விருந்து இருவர் காதலிக்கும் பொழுது உடன் சனி இருந்தால் அந்த காதல் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெற்றி அடையலாம் அல்லது அது வெற்றி அடையாமலும் போகலாம்.
காதலித்து வம்பு வழக்கு வரை செல்வது யார் ஜாதகத்தில்?
ஒருவர் ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி ஐந்தாம் பாவகம் ராகு கேது உடன் சம்பந்தப்பட்டு இருப்பின் அது சிக்கலான காதல் வாழ்க்கையை குறிக்கும். குறிப்பாக ஐந்தாம் அதிபதி ஆறாம் வீட்டிற்கு எட்டாம் வீட்டிற்கு 12 ஆம் வீட்டிற்கோ தொடர்பு பெறும் பொழுது அது ஜாதகருக்கு சாதகம் இல்லாத பலனையே கொண்டு வரும். ஐந்தாம் அதிபதி ஆறாம் பாவத்திற்கு சென்றால் காதலித்து வம்பு வழக்கில் மாட்டிக் கொள்வார்கள். ஐந்தாம் அதிபதி எட்டாம் பாவத்தில் அமர்ந்தால் காதலித்து கோர்ட் வரை சென்று வழக்கு நடந்து மீண்டு வருவார்கள். ஐந்தாம் அதிபதி 12ஆம் பாவத்தில் சென்றால் காதலித்து இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமலேயே அவர்கள் வாழ்க்கையை பழைய நினைவுகளோடு ஒட்டி விடுவார்கள். நான் கூறிய கருத்துக்கள் அனைத்தும் பொதுக் கருத்துகளாகவே இருந்தாலும் அவரவர் சொந்த ஜாதகத்தை வைத்து வாழ்க்கையில் நடக்கும் பலன்களை தீர்மானிக்கலாம்.
ஒருவர் ஜாதகத்தில் புதன் கேது ஒரு ராசி கட்டத்தில் இணைந்திருந்து கோச்சாரத்தில் அந்த புதன் எப்போதெல்லாம் கேதுவை சந்திக்கிறாரோ? அப்போதெல்லாம் மீண்டும் மீண்டும் அந்த ஜாதகர் காதல் வயப்பட்டு கொண்டே இருப்பார். அதேபோல் புதன் எந்த வீட்டில் அமர்ந்து இருக்கிறாரோ? அந்த வீட்டிற்கு திரிகோணத்தில் கேது பகவான் வரும்பொழுது அதே போன்று அந்த ஜாதகர் காதலித்து வெற்றியையோ அல்லது தோல்வியையோ சந்திக்க கூடும்.