இன்றைய ராசி பலன்கள்: மகிழ்ச்சியான செய்தி தேடி வரப் போவது யாருக்கு?
இன்றைய 12 ராசிகளுக்கான துல்லியமான பலன்களை ABP நாடு, நேயர்களுக்காக வழங்குகிறது. அத்துடன் இன்று சந்திராஷ்டமம் சந்திக்கும் ராசியும் பட்டியலிடப்படுகிறது.
12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்:
சந்திராஷ்டமம்:
கார்த்திகை, ரோகிணி
மேஷம்:
எடுத்த காரியத்தை முழுவீச்சில் செய்து முடிக்க முயற்சி செய்வீர்கள். சில தடங்கல்கள் குறுக்கிடும். எதையும் பொருட்படுத்த வேண்டாம். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வந்து சேரும். மனசோர்வுகள் ஏற்படும்.
ரிஷபம்:
ஆர்வத்துடன் இன்றைய பணிகளை மேற்கொள்வீர்கள். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். எடுத்த காரியம் வெற்றி பெறும். எதிர்பார்த்த லாபம் இல்லை என்றாலும் மனமகிழ்ச்சி இருக்கும்.
மிதுனம்:
மிக கவனமுடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. சிக்கல்கள் தேடி வரும். உறவினர்கள் வழி மனஸ்தாபம் ஏற்படலாம். பெரிய தொகை ஒன்று தேடி வரலாம். புதிய ஒப்பந்தங்களை போராடி பெறுவீர்கள்.
கடகம்:
செல்வாக்கு உயரும் நாள் இன்று. நினைத்தது கிடைக்கும். கிடைத்தது நிலைக்கும். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். அதே நேரத்தில் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
சிம்மம்:
மன மகிழ்ச்சி காணும் நாள் இன்று. குடும்பத்தார் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகள் வழி மகிழ்ச்சியான செய்திகள் வரலாம். நீண்ட நாள் பாக்கி கிடைக்கும். வெளியூர் பயணத்திற்கான வாய்ப்புகள் உண்டு.
கன்னி:
கவனமாக செயல்படவும். வாகன போக்குவரத்தில் அதிக கவனம் தேவை. பண விவகாரத்தில் விழிப்புடன் இருக்கவும். நண்பர்கள் வழி சந்திப்பு இருக்கும். விருந்து உண்டு மகிழ்வீர்கள்.
துலாம்:
எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் மனக்கவலையடையலாம். அதற்காக முயற்சிகளை விட்டு விட வேண்டாம். பண பிரச்னைகள் நீங்கும். உடல் நலனில் அதிக அக்கறை தேவை.
விருச்சிகம்:
குடும்ப வழி பாசம் கிடைக்கும். சக பணியாளர்கள் அன்புடன் பழகுவார்கள். வீண் போக்குவரத்தை தவிர்ப்பது நல்லது. பணம் தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் வரலாம். நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கை துளிர்விடும்.
தனுசு:
நினைத்த படி ஆதாயம் அடைவீர்கள். பணியில் ஆர்வம் மேலோங்கும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு கிடைக்கும். கோபத்தை குறைத்து வேகத்தில் கவனம் செலுத்தவும். எதையும் நம்பும் எண்ணத்தை கைவிடவும்.
மகரம்:
கடும் முயற்சிக்கு பின் எடுத்த காரியத்தில் வெற்றி இருக்கும். புதிய ஆர்டர்கள் பெற எடுக்கும் முயற்சியில் இடையூறுகள் வரலாம். தன வரவு இருக்கும். குடும்பத்தினர் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும்.
கும்பம்:
ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வீர்கள். அதற்கான பலனும் கிடைக்கும். கடந்த சில நாட்களாக இருந்து வந்த உடல்நலக்குறைபாடுகள் நீங்கும். இருப்பினும் நன்கு ஓய்வு எடுக்கவும்.
மீனம்:
பண வரவு கூடும் நாள் இன்று. தேவையான அளவு செல்வத்தை சேர்க்க எண்ணம் தோன்றும். மனைவி, குழந்தைகள் ஆரோக்கியத்தில் ஆர்வம் காட்டவும். பண விவகாரத்தில் அதிக கவனம் தேவை. வீண் உறுதிமொழிகளை நம்ப வேண்டாம்.