Today Rasipalan: மேஷத்திற்கு வெற்றி...கும்பத்திற்கு சிறப்பு... இன்றைய ராசி பலன்கள்!
Today Rasipalan : இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 15.05.2022
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை
இராகு :
காலை 4.30 மணி முதல் காலை 6.00 மணி வரை
குளிகை :
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
எமகண்டம் :
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
சூலம் – மேற்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, இன்று வெற்றி கிடைக்கும் நாள். வெற்றி பெறுவதற்கான உறுதி உங்களிடம் காணப்படும் நாள்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, உங்கள் செயல்களை சுமூகமாகவும் வெற்றிகரமாகவும் செய்வீர்கள். முக்கிய நடவடிக்கைகள் இன்று நற்பலங்களைத் தரும்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். அதன் மூலம் பதட்டத்திலிருந்து விடுபட்டு ஆறுதல் பெறுவீர்கள்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, உங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். நேர்மறை எண்ணத்துடனும் உற்சாகத்துடனும் இருப்பது சிறந்தது.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, உங்கள் வளர்ச்சி குறித்து மகிழ்ச்சியடைவீர்கள். இன்று முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது. நீங்கள் விரும்பியதை அடைய கடினமாக உழைக்க வேண்டும்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுங்கள். இதனால் உங்கள் உற்சாகம் அதிகமாகும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, இன்று தொழில் சார்ந்த மற்றும் யதார்த்தமான அணுகுமுறை உங்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டும். உங்கள் செயல்களை சிறந்த முறையில் ஆற்ற அமைதியான அணுகுமுறை தேவை.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, உங்களின் தொடர் முயற்சி மூலம் இன்று நீங்கள் உங்கள் வளர்ச்சியில் முன்னேற்றம் காணலாம்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, உங்களின் தேவைக்கு பயன்படும் சரியான முடிவுகளை நீங்கள் எடுக்க முடியும். இன்று துடிப்பான நாளாக இருக்கும். கவனமுடன் செயல்பட்டால் நன்மை விளையும்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, இன்றைய நாள் சிறப்பாக இருக்க உற்சாகமாக இருங்கள். தேவையற்ற எண்ணங்களை தவிர்த்திடுங்கள்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, உங்கள் செயல்களில் கவனம் தேவை. எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்கு கவலையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்