Today Rasipalan 24 Aug 2024: மேஷம் முதல் மீனம் வரை! 12 ராசிகளுக்கும் கட்டம் சொல்வது இதுதான்!
today Rasipalan : சனிக்கிழமையான இந்த ஆகஸ்ட் 24ம் தேதி எந்த ராசிக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
இன்றைய நாளில் சந்திரன் மேஷத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார். உங்களுடைய ராசிக்கு சந்திரன் தரும் பலன்களை பார்க்கலாம்...
மேஷ ராசி :
ஏற்றங்கள் இரக்கங்கள் கலந்து நடைபெறும் நாள். எதிர்காலத்தை பற்றின சிந்தனை இருக்கும். பழைய நினைவுகளை அசைபோடுவீர்கள். ராசிக்குள் சந்திரன் பிரவேசிக்கப் போவதால் ஆன்மீகத்தில் மனம் செல்லும்.
ரிஷப ராசி:
பொறுமையே பெருமை என்று இருக்கக்கூடிய நாள். வேலையில் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பட்டம் பதவி தேடி வரக்கூடிய நாள்.
மிதுன ராசி :
எதிர்காலத்தை குறித்து நல்ல திட்டங்களை போடுவீர்கள். தாய் வழி உறவினர் ஆதரவாக இருப்பார்கள். வேலையின் சற்று கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது. வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள்.
கடக ராசி :
தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான காரியங்கள் வெற்றி அடையும். மதியத்திற்கு மேல் சற்று நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். பழைய நண்பர்களை சந்திக்க கூடும். சிறப்பான நாள்.
சிம்ம ராசி:
தொட்டது தொடங்கும் நாள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். வேலை சுமை இருந்தாலும் கூட அதை இழுத்து போட்டுக் கொண்டு செய்ய முற்படுவீர்கள். குடும்பத்தாரோடு நேரம் செலவிடும் காலம்.
கன்னி ராசி:
உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் செல்வதால் எதிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. புதிய காரியங்களை எதுவும் தொடங்க வேண்டாம். மற்றவரிடம் பேசும் போது கவனமாக இருப்பது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்துங்கள். பொறுமையாக இருந்தால் பெருமையாக வாழலாம்.
துலாம் ராசி :
இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றமாக இருக்கப் போகிறது. பிரிந்து சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். வேலையில் அனுகூலமான பலன்களை நடைபெறும்.
விருச்சிக ராசி :
மனதில் இருந்ததை வெளிப்படையாக பேசுவீர்கள். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகள் கொடுப்பார்கள். அதிகப்படியான சிந்தனையில் மூழ்கி இருக்கக்கூடும். கடன் சுமை குறையும் நாள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.
தனுசு ராசி:
முடிக்க வேண்டிய வேலைகளை விரைவாக முடிப்பீர்கள். மனம் சற்று ஆன்மீகத்தில் செல்லும். பழைய காரியங்களை மீண்டும் அசைபோடக்கூடும். எதிர்காலத்திற்கு தேவையான சில காரியங்களை தற்போது திட்டமிடுவீர்கள். ஒரு முறைக்கு இரண்டு முறை எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது.
மகர ராசி:
மகர ராசிக்கு சிறப்பான நாள். பெருமைக்குரிய சம்பவங்கள் நடைபெறும். மனம் அமைதியாக இருக்கும். மற்றவர்களை புரிந்து கொள்ள ஏற்ற நாள் இது.
கும்ப ராசி:
பக்தியோடு இந்த நாளை ஆரம்பிப்பீர்கள். வழக்கத்திற்கு மாறாக நண்பர்கள் வந்து பேசுவார்கள். நீண்ட தூர பயணங்களை பற்றி சிந்திப்பீர்கள். நண்பர்களுடன் நேரம் செலவிடுவதற்கான காலகட்டம்.
மீன ராசி :
வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். எவ்வளவு பெரிய சிக்கலான காரியங்களையும் எளிதாக சமளிப்பீர்கள். மற்றவர்களுக்கு உங்களின் உதவிகள் தேவைப்படும். மனதில் மகிழ்ச்சி பொங்கும் நாள்.