இன்றைய ராசி பலன்: யாருக்கு ஜாக்பாட்? யாருக்கு பதவி உயர்வு?
இன்றைய 12 ராசிகளுக்கான துல்லியமான பலன்களை ABP நாடு, நேயர்களுக்காக வழங்குகிறது. அத்துடன் இன்று சந்திராஷ்டமம் சந்திக்கும் ராசியும் பட்டியலிடப்படுகிறது.
ராசிகளுக்கான இன்றைய பலன்கள்:
சந்திராஷ்டமம்:
உத்திராடம், திருவோணம்
மேஷம்:
தேவையற்ற கோபத்தை இன்று தவிர்ப்பது நல்லது. எரிச்சலூட்டும் காரியங்கள் கண் முன் நடைபெறும் போது பொறுமையாக அதை கையாளுங்கள். குடும்பத்தாரிடம் அன்புடன் பேசி, பழகுங்கள். மற்றபடி இன்றைய நாள் நன்றாகவே இருக்கும்.
ரிஷபம்:
வாழ்வில் மேன்மை அடையும் நாள் இன்று. இத்தனை நாள் உழைப்பிற்கு கைமேல் பலன் கிடைக்கும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்த நீங்கள், இன்று அதற்கான பலனை பெறுவீர்கள். உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய நாள்.
மிதுனம்:
இன்றைய நாள், உங்கள் அமைதிக்கான நாள். பொறுமை கடலினும் பெரிது. அதை முழுதாக கடைபிடிக்க வேண்டிய நாள் இன்று. தன வரவுகள் வரும். தேவையற்ற உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும்.
கடகம்:
விடா முயற்சி பலன் தரும் என்பார்கள். நீங்களும் , தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். குறிப்பாக நீண்ட நாட்கள் குறி வைத்த இலக்கு ஒன்று இன்று உங்களை அடையவிருக்கிறது. அது அடையும் கடைசி நொடி வரை முயற்சிக்க தவற வேண்டாம். குடும்பத்தார் பக்க பலமாக இருப்பார்கள்.
சிம்மம்:
உற்றார், உறவினர், பெற்றோர் வழியில் மருத்துவ செலவுகள் வந்து செல்லும். குழந்தைகள் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தேவையற்ற உணவுகளை தவிர்க்கலாம். பயணங்களில் கவனம் வேண்டும். தைரியம் தான் உங்கள் பலம் என்பதை இன்று நினைவில் கொள்க.
கன்னி:
ஓடி ஓடி உழைத்ததற்கு இன்று சுகம் காணும் நாள். வீட்டில் இருந்தபடி எளிதில் பணியை முடிப்பீர்கள். ஏற்கனவே செய்த பணிக்கான பலன் கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும். சுப செய்திகள் வந்து சேரும். எதிலும் அவசரம் காட்ட வேண்டாம்.
துலாம்:
குடும்பத்தாருடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தேவையற்ற போட்டிகளை தவிர்க்கவும். உங்கள் கோபமானது அன்பை மறைத்துவிடக்கூடாது. ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். குடும்பத்தலைவரின் அன்பு கிடைக்கும் நாள்.
விருச்சிகம்:
இன்றைய நாள் வெற்றி நாளாக இருக்கும். மன குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். தொட்டது ஜெயிக்கும் என்பதால் புத்துணர்வுடன் இருங்கள். வீண் சந்தேகங்கள் வேண்டாம். குடும்பத்தாருடன் மகிழ்வுடன் இருங்கள். தனம் சேரும்.
தனுசு:
பழிவாங்கும் எண்ணம் வேண்டாம். பாசிட்டிவ் எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். அனைவருடனும் ஒத்துப் போக கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர் பேச்சை அப்படியே நம்பிவிட வேண்டாம். குடும்பத்தாரிடம் இருப்பதைப் போன்றே சுற்றத்தாரிடமும் இருந்தால் இன்றைய நாள் இனிதாகும். உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள்.
மகரம்:
தேவையற்ற எதிர்ப்புகளை கைவிடவும். உடல் நலத்தில் இருந்த சிறிசிறு பிரச்னைகள் தீரும். சகோதர வழி உதவிகள் கிடைக்கும். சுபச்செலவுகள் வரலாம். பேருந்து பயணத்தில் கவனம் தேவை. அறிமுகமில்லாதவர்களிடம் பேச வேண்டாம்.
கும்பம்:
இன்றைய நாள் முழுவதும் கவனம் வேண்டும். தொழிலாக இருந்தாலும் குடும்பமாக இருந்தாலும் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். இறைவழிபாடு அவசியம். தன வரவு இருக்கும். நண்பர்கள் வழி நற்செய்திகள் வரலாம்.
மீனம்:
பணி உயர்வு, பதவி உயர்வு, ஊதிய உயர்வு என ஏதாவது ஒரு வகையில் உயர்வடையும் நாள். மகிழ்ச்சியான செய்தி வீடு தேடி வரும். யாருக்கும் தேவையற்ற ஜாமின் இடுவதை தவிர்க்கவும். உற்சாகமாக இன்றைய நாளை துவக்கவும்.