மேலும் அறிய

திருவண்ணாமலை ஆனி பிரம்மோற்சவ விழா: ’அரோகரா அரோகரா’ கோஷமிட்ட பக்தர்கள்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தட்சிணாயின புண்ணிய காலத்தை முன்னிட்டு ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது

உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 64 அடி உயரமுள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கொடியேற்று விழாவில் 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுக்கு நான்கு முறை கொடியேற்றம் நடைபெறும். இதில் சூரியன் வடக்கிலிருந்து, தெற்கு நோக்கி நகரும் காலமான ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக தட்சிணாயின புண்ணிய கால கொடியேற்றும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழா இன்று தொடங்கி பத்து நாட்கள்  நடைபெறும். 10ம் நாள் அன்று ஐயங்குளத்தில் அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெறும். இன்று அதிகாலை திருக்கோவிலின் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றது.

திருவண்ணாமலை ஆனி பிரம்மோற்சவ விழா: ’அரோகரா அரோகரா’ கோஷமிட்ட பக்தர்கள்..!

இதனை தொடர்ந்து, காலை 06.00 மணியளவில் தட்சிணாயின புண்ணிய கால கொடியேற்று விழா நடைபெற்றது. முன்னதாக அண்ணாமலையார் சந்நதி முன்பாக உள்ள தங்க கொடிமரத்தின் அருகில் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் எழுந்தருளினர். பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 63 அடி உயரமுள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அண்ணாமலையாருக்கு ’அரோகரா அரோகரா’ என முழகங்களுடன் தரிசனம் செய்தனர். கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் ஆனி பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் அம்பாளுடன் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் தனித்தனி, வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தினால் அலங்கரிக்கப்பட்டு திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளை சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். 

திருவண்ணாமலை ஆனி பிரம்மோற்சவ விழா: ’அரோகரா அரோகரா’ கோஷமிட்ட பக்தர்கள்..!

தட்சிணாயின புண்ணிய கால சிறப்பு பற்றி சிவாச்சாரியாரிடம் இது குறித்து கேட்ட போது, 

‛‛அண்ணாமலையார் கோவிலில் வருடத்தில் நான்குமுறை நடைபெறும் தட்சிணாயின புண்ணியகாலம் , உத்தராயணம் புண்ணியகாலம், தீப உற்சவம், ஆடிபுரம் என கொடியேற்றம் நடைபெறும். அதில் ஒன்றான தட்சிணாயின புண்ணியகாலம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைப்பெற்றும் மற்றும் தீப ஆராதனைகளும் செய்யப்பட்டன. சகல ஜிவ ராசிகளும் இன்புற்று வாழவும் நோயில் இருந்து மக்களை காப்பாற்றிக்கொள்ள அண்ணாமலையாரை பிரார்த்தனை செய்து கொள்வோம்,’’ என தெரிவித்தார்.

TNHRCE JOB: இந்து சமய அறநிலையத்துறையில் ரூ. 35,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget